தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

2009 ஆண்டின் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட சிறந்த 10 மொக்கை படங்கள்

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்

பெரிதும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்திய படங்கள் ஊத்திக் கொள்வது நமக்கு ஒண்ணும் புதுசு இல்லை. இந்த வருஷம் வெளியான நேரடித் தமிழ் படங்கள், கிட்டத்தட்ட 125. (உண்மையிலேயே) வெற்றி பெற்றவை எத்தனைன்னு பார்த்தா மண்டை காய்றது நிச்சயம். மொக்கை படத்தை பற்றி தப்பா எடை போட்டுட கூடாது...


அமெரிக்காவில் ஒரு ஆய்வில் மொக்கை படத்தை பார்ப்பதால்
சகிப்பு தன்மை கண்டமேனிக்கு வளர்வதாக தெரிவித்து உள்ளனர்.என்னை பொருத்த வரை மொக்கை படம் என்பது பொறுமையை சோதிப்பதாக அமைய வேண்டும்...இன்றும் பலராலும் மொக்கை படம் என்று அறியப்பட்டு வரும் குளிர் நூறு,மதுரை சம்பவம்,சிந்தனை செய் போன்ற படங்கள் என்னை பொருத்தவரை நல்ல டைம் பாஸ் படம் ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் என்பேன்......

என்னோட பார்வையில், நல்லாயிருக்கும்னு நம்பிப் போன ரசிகர்களோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட 2009 இன் டாப் டென் மொக்கை படங்களைத்தான் இங்கே தொகுத்து இருக்கிறேன்.இருக்குறதிலேயே பெரிய கொடுமை எதுன்னு நீங்களே சொல்லுங்கப்பா..

10. குரு என் ஆளு - ஆளை உடு சாமி!!
[Latest+Tamil+Movie+Guru+En+Aalu+Photo+Gallery.jpg]

இந்த படத்தை இந்த படத்தை பற்றி விமர்சனம் வேற போட
வேண்டுமா என்று எண்ணி விமர்சனம் எழுதுவதை கைவிட்டு
விட்டேன்....விவேக் காமெடி செம மொக்கை.

9.இந்திர விழா - ஆண்டவா...
indira-vizha - Tamil Movie

மொக்கை படமென்று தெரிந்தாலும் நமீதா இருக்கிறார் என்ற ஒரு காரணத்துக்காக தெரியாம தியேட்டருக்குள் போனவங்க...உள்ளே போன அதே வேகத்துல வெளிய ஓடி வந்துட்டாங்க . அங்கே விவேக் பெரிய மொக்கை போட்டாரு....

8.ஆனந்த தாண்டவம் - டப்பா டேன்ஸ் ஆடுது
http://www.topnews.in/files/Ananda-Thandavam.jpg

சுஜாதாவோட "பிரிவோம் சந்திப்போம்".. நாவல்கள் படமாக்கப்படும் போது எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவது கிடையாது என்கின்ற சினிமாத்துறையின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்தது.. நல்ல வேளை இந்தக் கொடுமைய பார்க்காம, படம் வரதுக்கு முன்னாடியே தல போய் சேர்ந்துட்டாரு.. கதாநாயகனோட லட்சணத்துக்கே படத்துக்கு ஆஸ்கார் அவார்டு தரணும்..


7.யோகி - போகி புகை...!


பருத்திவீரனுக்குப் பிறகு அமீர் என்ன பண்ணப் போகிறார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, அவரோ கதாநாயக அவதாரம் எடுத்தார். சரி, கதை உலக சினிமா அளவுக்கு இருக்கும் போல என்று பார்த்தால்.. உலக சினிமா கதையை சுட்டு இருந்தார்கள். நான் அந்தப் படத்தைபார்த்ததே கிடையாது என்று இயக்குனரும், அமீரும் உளறியது செம காமெடி.அமீரை நாங்கள் இயக்குனராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம்...படத்தை பற்றி வேறு எதுவும் சொல்ல விருப்பமில்லை...


6.மாசிலாமணி - மொக்கை மணி!!
http://hindimoviesong.net/Blog/wp-content//uploads/2009/06/masilamani-movie-songs.jpg

அருமையான மொக்கை படம்... நகுலுக்கு முக பாவனைகள்
பயங்கரமா வருது.....அவரு சில காட்சிகளில் என்ன பீலிங்க்ஸ்
பண்ராருனே புரிய மாட்டிக்குது...(அதனாலதான் நான் இன்னும்
கந்தகோட்டை படம் பார்க்கவில்லை).சன் தொலைகாட்சியின்
மொக்கையில் இது பெரிய மொக்கை .


5. வாமணன் - கோமணம் கிளிஞ்சது!!



படத்தில் பெயர் மட்டும் தான் நல்லா இருந்தது...சந்தானம் காமெடி
ஒ.கே....மற்றபடி வாமணன் பற்றி சொல்வதருக்கு ஒன்னும்
இல்லை.கடைசி வரையும் கதை என்னனு தெரியவே இல்ல..

நான்காவது இடத்தை பிடிக்கும் மொக்கை போட்டியில் இரண்டு படங்கள் .

4.நான் அவனில்லை பார்ட்-2 - பார்ட்-3 வருமோ??
http://www.southgossips.com/wp-content/uploads/2009/04/naan-avan-illai-2-movie-stills-images-15.jpg

கதை திரைக்கதையெல்லாம் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் அந்த கடைசி சீன்லா ஜீவன் போப் டிரஸ்இல் வருவது மகா கொடுமைடா சாமி.....

4.நான் கடவுள் - போதும்டா சாமி

naan-kadavul-01



பாலா என்கிற அற்புதமான கலைஞன் சறுக்கின படம். இந்தப் படத்தை பாலாவைத் தவிர யாரும் எடுத்திருக்க முடியாது. ஆனால் படத்துக்கு இருந்த பிரமாண்டமான எதிர்பார்ப்பே படத்துக்கு மிகப் பெரிய மைனசாப் போச்சு. நல்ல நடிப்பை தெளிவில்லாத திரைக்கதை காலி பண்ணிருச்சுன்னு தான் சொல்லணும். கிளைமாக்ஸ் மகா சொதப்பல். ஆர்யா மூணு வருஷம் தாடியும் மீசையுமாதலைமறைவாத் திரிஞ்சது மட்டும்தான் மிச்சம்.

முன்றாவது இடத்தை பிடிக்கும் மொக்கை மோதலில் முன்று படங்கள் .

3.பொக்கிஷம் - கடைசி வரையும் கிடைக்கவே இல்ல...
http://www.tamilwire.com/forum/imgcache/04/20311.png
தமிழ் சினிமாவை உலக சினிமா ரேஞ்சுக்கு கொண்டு போகாம விட மாட்டேண்டா டோய்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற சேரனோட படம். நல்ல எண்ணம் தான்.. ஆனா படம் அந்த மாதிரிஇல்லையே.. நீளம் ஜாஸ்தி + திரைக்கதை சொதப்பல். அத விட பெரிய நொம்பலம், கதாநாயகனா சேரனே நடிச்சதுதான். வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, தேசிய கீதம் போன்ற படங்களைத் தந்த இயக்குனர் சேரன் தான் எங்களுக்கு வேண்டும். நடிகர் அல்ல.. புரிந்து கொள்வீர்களா சேரன்?
3.மதுரை டூ தேனி - பஸ்க்கு டையரை காணோம்...
http://imovies4you.com/wp-content/uploads/2009/11/madurai-to-theni-dvd.jpg

வித்தியாசமான முயற்சி என்றாலும் ஹீரோ விஜயகாந்த் அளவுக்கு
பேசியே பிரச்சனையை தீர்ப்பதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே
ஓவர்....படத்தின் கதை ஆரம்பிக்கும் போது யாரும் தியேட்டரில் இல்லை....(படம் முடியும் போது தான் கதை ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டேன்).

3.படிக்காதவன் - L.K.G கூட தாண்டல.
Bangalore Living MP3 Music Songs Download All Languages


சரியாப் படிக்காத பசங்க எல்லாம் படிச்ச பிகராப் பார்த்து உஷார் பண்ணினா வாழ்க்கைல ஓகோன்னு வரலாம்னு அரிய தத்துவ முத்தை உதிர்த்த படம். வடிவேலு ஸ்டைல்ல விவேக் பண்ணின காமெடிதான் படத்துல பாக்குற மாதிரி இருந்த ஒரே விஷயம். சன் டிவி விளம்பரத்துல மட்டும் படம் நூறு நாள் ஓடுச்சு. இப்போ வரக்கூடிய தெலுங்கு படங்களே ஓரளவுக்கு டீசெண்டா இருக்குறப்போ, நமக்கு இது தேவையா தனுஷ்?


இரண்டாவது இடத்தை பிடிக்க நான்கு படங்கள் முந்துகின்றன,

2.அதே நேரம் அதே இடம் - அதே அடி அதே வலி!!
Tamil Cinema Posters & Banners

இந்த படத்தை அலசி அலசி சோர்வு அடைஞ்சாச்சு....கடவுள்கிட்ட
வேண்டி கொள்வது இது ஒன்று தான்...இனிமே அதே நேரம்
அதே இடம் போன்ற படங்களை வெளிவரமால் மக்களை காப்பாற்று..


2.முத்திரை - நல்லா குத்துனாங்கயா!!

Muthirai Mp3 Songs   Muthirai Songs Download Free



எப்படி படம் எடுக்க கூடாது என்று இந்த படத்தை பார்த்தால்
கற்று கொள்ளலாம்...ரொம்ப பெரிய லாஜிக் ஓட்டையை உள்ளடக்கிய
படம் முத்திரை......


2.தோரணை - சொரணை இல்லை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp6E_oWFm6wZ8FnUvwV4VJzX4YLTf-POv1A1limkrG1sijAwMCgjg0KWPk9Czxa8-PBb29Y7BU9bcOFokwb_bUF0evhUglAsxv4fezi9HZb66Kw5nf_0YiVqFbFQgghzcnT6HW1bBXTx0/s400/Thoranai.jpg

விஷாலிடம் இருந்து மொக்கை படத்தை எதிர்பார்த்தேன் ஆனால்
இது மரண மொக்கைடா சாமி.புலியைப் பார்த்து சூடு போட்டுக்கலாம்.. பூனையைப் பார்த்து? தமிழ் சினிமாவைக் காப்பாத்த ஒரு விஜய் மட்டும் போதாது, நானும் களத்தில் குதிச்சே தீருவேன்னு அடம் பிடிக்கும் விஷாலுக்கு கிடைச்ச மரண அடி. பாட்டும் வொர்க்அவுட் ஆகாததினால படம் பயங்கர ஊத்து.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிராமத்துல இருந்து சிட்டிக்கு வர ஹீரோவை நாம பார்க்க வேண்டி இருக்குமோ? கொஞ்சமாவது திருந்துங்கப்பா ரோதனை....

2.மரியாதை - சுத்தமா கிடையாது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGIkwwd-XA1lubOlFmdtl9Tqve0cCEYwn8lg9UlRVQLaJ4Wddu5_ffvi7Mn6CWcwtgz2NmxYy9xyFk2h6h1Vfwt5sDoucBc5FKjnMUd2dzDa22lfSMAnM6If1-k30oPEZBaaZVhcc1zYG2/s1600/mariyaathai1.jpg


ஏய்.. நீ மட்டும்தான் டப்பா படம் கொடுப்பியா.. நாங்க மாட்டோமான்னு சரத்துக்கு போட்டியா கேப்டன் களம் இறங்கி கலக்கிய படம். வானத்தப்போல விக்ரமன்னு போனா, வெளில வந்தவங்க கண்ணுலையும் காதுலையும் ரத்த ஆறு.. ஒரே லாலலா.. இன்பமே பாட்டுக்கு மீரா ஜாஸ்மின் ஆட, கேப்டன் பாட.. புரட்சிக் கலைஞரோட மேக்கப்பை பார்த்து ஹாலிவுட் மக்கள் எல்லாம் வாவ் வாட் எ மேன்னு வாயப் பொளந்தவங்க பொளந்தவங்க தான்.. டைரக்ட் டிக்கெட்டு..

முதல் இடத்தை பிடிக்க ஐந்து படங்கள் மொக்கையாக அடித்து கொள்கின்றன...

1.சர்வம் - நாசம்!!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1lldqtR2W4R_F4l14KHwRwBfYMNW8fRljJgpqZxmXt00sMc8dKMB2rpAO4a1K25MjZXRoRppn2DfQZMGL4ohlHZJyx471ikjZVJXT793Q303A_B3E7bSioQYG_L9VaN4yihh4fpLZzEM/s400/609px-Sarvam.jpg

நான் மிகவும் எதிர்பார்த்த படம்...ஆனால் பயங்கர மொக்கை
திரைக்கதை...கதையும் கூட....ஒளிப்பதிவெல்லாம் குறை
சொல்ல முடியாது....விஷ்ணுவர்தனிடம் இருந்து 2010 இல்
நல்ல சுவாரசியமான படத்தை எதிர்பார்க்கிறேன் ....

1.ஆதவன் - அழுதுடுவேன்..
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/aadhavan/suriya-07.jpg

தசாவதாரத்துக்குப் பின் வரும் கே.எஸ்.ரவிக்குமார், அயன் வெற்றியோடு சூர்யா, ஹாரிஸ் என்று படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு. ஆனால் குருவி தந்த உதயநிதியின் படம் என்று நிரூபித்ததால்.. படம் பப்படம். தாய்வீடு காலத்து கதை.. எத்தனை நாள் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? பாட்டு, வடிவேலு மட்டும் இல்லை.. மொத நாளே சங்கு ஊதியிருக்கும். நயன்தாராவைப் பார்த்து பல பேர் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை.


1.கந்தசாமி - போதும்டா சாமி..


தமிழ் சினிமாவிலேயே ரொம்ப நல்லவர் விக்ரம்தான் என்பதை நிரூபித்த படம். பின்ன? அவர் நடிச்ச அந்நியன் கதையவே ஒருத்தர் அவர்கிட்ட சொல்லி.. இட் இஸ் சோ சுவீட் யூ நோ என்று விக்ரமும் மண்டையை ஆட்டி வைக்க.. இளிச்சவா புரொடியூசர் தாணு சிக்க.. ஷ்ஷ்ஷ்..யப்பா.. முடியல.. படத்தில உருப்புடியா இருந்தது தேவிஸ்ரீ பிராசத்தோட பாட்டு மட்டுமே.. ஆனா அதுக்கு விவேகா எழுதின வைர வரிகள் இருக்கே... நாலஞ்சு அவார்டு கொடுத்தாக் கூட போதாது.. இனிமேல் இப்படி படம் எடுக்காதீங்கன்னு யாராவது கந்தசாமிக்கு லெட்டர் எழுதுங்கப்பா..

என்னடா.. பத்து படம் முடிஞ்சு போச்சே..ஆனா முக்கியமா ரெண்டு படத்தை காணோமேன்னு நீங்க தேடுறது புரியுது.. அதெப்படி விடுவோம்.. ஆனா பாருங்க.. அந்த ரெண்டு படமுமே, கண்டிப்பான முறையில.. ஓடாதுன்னு (ஓடக் கூடாதுன்னு) எதிர்பார்த்த படங்கள்.. சோ.. ஹியர் வி கோ..

1. வில்லு - செம டல்லு
http://gcmouli.files.wordpress.com/2009/02/villu.jpg

இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.போக்கிரி படத்துக்குப் பிறகு வந்த விஜய் - பிரபுதேவா காம்பினேசன். தொன்னூருல வந்த சோல்ஜர் ஹிந்திப் படத்தோட உல்டா. பாட்டு எதுவுமே எதிர்பார்த்த வெற்றி பெறாதது மொத அடி. லாஜிக் இல்லாத கதை, சொதப்பலான திரைக்கதை.. சிவசம்போ......

1.வேட்டைக்காரன் - ரசிகர்கள் திருப்பி அடிச்சா தாங்க மாட்ட


படம் நல்லாயிருக்கு, இல்லைன்னு சொல்றத விட.. வில்லு, குருவிக்கு எவ்வளவோ பரவாயில்லை பாசு.. இதுதான் ஒரு விஜய் ரசிகரின் கமென்ட் என்றால், எந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நீங்களே யோசிங்க.. வெளங்கல.. நாலஞ்சு படத்தோட கலவை.. விஜய்க்கு மற்றுமொரு ஆப்பு .. இது பதிவுலக மக்களோட கமென்ட்.. மதுரைல ரெண்டாவது நாளேமதி தியேட்டர்ல காத்தாடுது.. வேற என்னத்த சொல்லஓடு ஓடு பாட்டை முதலிலே போட்டு இருந்தால் ஓடி இருப்போம் .ஊஊஊஊஊஊஊ ..


இதே மாதிரி நீங்க எதிர்பார்த்து மண்டை காஞ்ச படங்கள் ஏதாவது இருந்தாக் கூட பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..
....பகலவன்....