ஈழப் போரில் மரணமடைந்த குழந்தை நினைவாக
குலம் தழைக்க பிறந்தவன்
அவனுக்கும் உண்டு
தாய் தந்தை தாத்தா பாட்டி
அத்தை மாமா.....
தினசரி நிகழும் விவாதம்
இவன் யார் சாயலென்று.....
எத்தனயோ உண்டு
செல்ல பெயர்கள் அவனுக்கும்....
அவன் "ம்மா" உச்சரித்த நாள்
திருவிழா அவர்களுக்கு.....
தலை சிதைந்து போன இவ்வுடலில்
இன்று அடையாளங்கள் ஏதுமில்லை
இவன் ஆண் குழந்தை
என்பதை தவிர....
நன்றி - சபிதா பேகம்
தொகுப்பு
ஈழத் தமிழர் வரலாறு