தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உருப்படியான ஊழல்...!



ஊழல்கள் நடந்தாலும் உருப்படியானதும் நடக்கவே செய்யும்.



காம்ராஜர் பள்ளிப் பிள்ளைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த போது, ‘ஊழல் நடக்கும்’முறைகேடுகள் நடக்கும், ஏமாற்று வேலைகள் இருக்கும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அதற்கு அவர்,” தேன் பானையில் கைவிட்டவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான். பத்து பேருக்கு சாப்பாடு போட்டுவிட்டு 15 பேர் என்று கணக்கு எழுதுவானாக் இருக்கும். 25 பேர் என்று எழுத மாட்டானே ! அதைவிட பத்து பேருக்காவது சாப்பாடு கிடக்கும்’லா” என்று சொன்னார். அன்றும் லஞ்சமும் ஊழலும் இருந்தன.ஆனால் லஞ்சம் வாங்கவும் ஊழல் செய்யவும் பயந்த-வெட்கப்பட்ட காலம் அது.

கலைஞர் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டபோதும், முன்கூட்டியே அதில் எந்த எந்த விதத்தில் எல்லாம் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புண்டு அன்று பட்டியல் போட்டார்கள். விஜயகாந்த்
கூட மூன்று மாதத்துக்கு 25 கோடி என்றால் வருடத்துக்கு 100 கோடி. இதை வைத்து பொது மருத்துவ மனைகளுக்கு நவீன கருவிகள் வாங்கினால் எல்லா மக்களும் பயன் பெறுவார்களே என்கிற ஒரு கருத்தை முன் வைத்தார். ஆனால் இத்தனை காலத்தில் இதய அறுவைச் சிகிச்சையை எண்ணிக்கூட பர்க்க முடியாத
ஏழைகள் உட்பட 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 76 கோடி செலவில் பல்வேறு உயர்வகை சிகிச்சைகளைப் பெற்றிருக்கிறார்கள். காமராஜர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. இவ்வளவு பேராவது பயன் பெற்றார்களா.. இல்லையா... ? புறங்கையை நக்குபவர்கள் நக்கி விட்டுப் போகட்டும்....!!!!!