தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

2009ம் ஆணடில் உலகம்: முக்கிய நிகழ்வுகள்.

ஜனவரி

1 – .நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டா ஆகியவை உறுப்பினர்களாகின.

ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை செக் நாடு ஏற்றது.

- ஸ்லோவேகியா தனது தேசிய நாணயமாக யூரோவை ஏற்றுக் கொண்டது.

3 – காஸா போரின் உச்சகட்டமாக காஸா நகருக்குள் தரை வழித் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.

7 – உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு சப்ளையை மூடியது ரஷ்யா.

13 – எத்தியோப்பிய ராணுவம் சோமாலியாவை விட்டு விலகத் தொடங்கிது.

15 - அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம், ஹட்சன் ஆற்றில் விழுந்தது. ஆனால் விமானத்திற்கும் எதுவும் ஆகவில்லை. அதில் இருந்த 6 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.

17 – காஸாவில் போர் நிறுத்தத்தை அறிவித்தது இஸ்ரேல்.

20 – பாரக் ஹூசேன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார்.

22 – காங்கோ புரட்சித் தலைவர் லாரன்ட் நுகுண்டாவை, ருவாண்டா படைகள் பிடித்தன.

பிப்ரவரி

1 – உலகின் முதல் லெஸ்பியன் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் அயர்லாந்தின் புதிய பிரதமாரக பதவியேற்ற ஜோஹன்னா சிகுரோர்டாட்டாய்ர்.

7 – 173 பேரை பலி கொண்ட மிகப் பெரிய காட்டுத் தீ ஆஸ்திரேலியாவில் தொடங்கிய தினம். இதில் 500 பேர் காயமடைந்தனர். 7500 பேர் வீடுகளை இழந்தனர்.

10 – அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் செயற்கைக்கோள்கள் மோதி சைபீரியாவில் விழுந்தன.

11 – ஜிம்பாப்வேயின் புதிய பிரதமராக மார்கன் ஸ்வாங்கிராய் பொறுப்பேற்றார்.

25 - வங்கேதச படையினர் திடீர் புரட்சி. 15 அதிகாரிகள் சுட்டுக் கொலை.

மார்ச்

2- கினியா -பிசா அதிபர் ஜோவோ பெர்னார்டோ வியரியா படுகொலை செய்யப்பட்டார்.

3 – பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களில் பலர் காயமடைந்தனர்.

7 – நாசாவின் கெப்ளர் மிஷன் தொடங்கியது.

21 - தமிழகத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல்

1 - அல்பேனியாவும், குரோஷியாவும் நேட்டோவில் இணைந்தன.

2 - உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதிக்க ஜி -20 நாடுகளின் கூட்டம் லண்டனில் தொடங்கியது.

3– 21வது நேட்டோ மாநாடு தொடங்கியது. டென்மார்க் பிரதமர் ரஸ்முஸன் புதிய பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

5 – வட கொரியா ராக்கெட் சோதனையை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர வைத்தது.

6 – இத்தாலியின் லாஅக்யூலா நகரில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்திற்கு 300 பேர் பலியானார்கள்.

7 – முன்னாள் பெரு அதிபர் அல்பர்டோ பிஜிமோரிக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

11– தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ராணுவப் புரட்சியும், மக்கள் புரட்சியும் இணைந்ததால் தாய்லாந்தில் பதட்டம் ஏற்பட்டது.

21 – உலக டிஜிட்டல் நூலகத்தை யுனெஸ்கோ தொடங்கி வைத்தது.

24 – பன்றிக் காய்ச்சல் மெக்சிகோவிலிருந்து உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

மே

23 – முன்னாள் தென் கொரிய அதிபர் ரோ மூ ஹியூன் தற்கொலை செய்து கொண்டார்.

25 – 2வது அணு சோதனையை வெற்றிகரமாக நடத்திப்
பார்த்துள்ளதாக வட கொரியா அறிவித்தது.

ஜூன்

1 – பிரேசிலிலிருந்து பாரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் 228 பேருடன் அட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அனைவரும் உயிரிழந்தனர்.

11 – பன்றிக் காய்ச்சல் உலகளாவிய தொற்று நோயாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எச்1என்1 என்ற பெயரையும் உலக சுகாதார நிறுவனம் சூட்டியது.

12 – ஈரான் அதிபராக 2வது முறையாக மஹமூத் அகமதிநிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

21 – டென்மார்க் வசம் இருந்து வந்த சட்ட அமலாக்கம், நீதித்துறை விவகாரங்கள், இயற்கை வளங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றை தன் வசம் எடுத்துக் கொண்டது கிரீன்லாந்து. மேலும் கிரீன்லான்டிக் மொழியே இனி அதிகாரப்பூர்வ மொழி என்றும் அது அறிவித்தது.

25 – பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தார்.

30 – ஏமன் விமானம் 153 பேருடன் காமரூஸ் அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர்.

ஜூலை

1 – ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை ஸ்வீடன் ஏற்றது.

5 – சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்குட்பட்ட உரும்கி பகுதியில், உய்கூர் முஸ்லீம்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய மோதலில் 150க்கும் மேற்பட்ட உய்கூர் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். வழக்கம் போல சீன அரசு தனது படை பலத்தை வைத்து இந்தப் போராட்டத்தை அடக்கி விட்டது.

- ரோஜர் பெடரர் 15வது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடித்தார்.

7 – மைக்கேல் ஜாக்சனின் இறுதிச் சடங்கு நடந்தது.

14 - பாரீஸில் நடந்த பிரெஞ்சு தேசிய தினத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது நடந்த அணிவகுப்பில் இந்திய முப்படை வீரர்கள் கலந்து கொண்டு மிடுக்காக நடை போட்டனர்.

17 - போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் குளியலறையில் வழுக்கி விழுந்து காயமுற்றார்.

22 – 21வது நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நடந்தது. இது 6.38 நிமிடங்கள் நீடித்தது. ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் பெருங்கடலில் இது நீடித்தது.

ஆகஸ்ட்

3 - தனித்துவம் கொண்ட இனப் பிரிவினர் அவர்களை அவர்களே ஆட்சி புரியலாம் என்ற உரிமையை அறிவித்தது பொலிவியா. இப்படி அறிவித்த முதல் தென் அமெரிக்க நாடு இதுதான்.

4 – பில் கிளிண்டன் நேரில் வந்து சமாதானம் பேசியதைத் தொடர்ந்து கைது செய்யபப்பட்ட 2 அமெரிக்க பத்திரிக்கையாளர்களை விடுவிக்க வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல் உத்தரவிட்டார்.

7 - கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், மலேசியாவில் வைத்து இலங்கை உளவுப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

15 - அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாருக் கான் 2 மணி நேரம் சிறை வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

23 - மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலாவின் ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பெற்றார்.

செப்டம்பர்

25 - பிட்ஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டில், உலகப்
பொருளாதார முன்னேற்றத்திற்கு இனி ஜி 20 நாடுகள் தீவிரமாகப் பாடுபடும் என அறிவித்தன.

26 – கேட்சனா சூறாவளியால் பிலிப்பைன்ஸ் நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து மணிலா வெள்ளக்காடாகியது. பிலிப்பைன்ஸின் 25 மாகாணங்களில் இயற்கை பேரழிவு ஏற்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது.

27 - மிஸ் கான்டினென்டல் அழகிப் பட்டத்தை வெனிசூலா அழகி ஹென்னாலி வென்றார்.

28 – கினியா ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 157 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

29 – அமெரிக்க சமோவா தீவுப் பகுதியில், கடலில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால், சுனாமி அலைகள் தாக்கின. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

30 – இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அக்டோபர்

2 - ரியோடிஜெனீரோ நகரில் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

9- அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

நவம்பர்

3 – பெல்ஜியம் பிரதமர் ஹென்மன் வான்ரோம்பி, ஐரோப்பிய கவுன்சிலின் முதல் நிரந்தர அதிபராக அறிவிக்கப்பட்டார்.

11 - இந்தியாவில் நாச வேலைக்குத் திட்டமிட்டதாக பாகிஸ்தானிய அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி, மற்றும் பாகிஸ்தானிய கனடியர் தஹவூர் ராணா ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.

14- சிங்கப்பூரில் அபெக் மாநாடு நடந்தது.

13 – இந்தியாவின் சந்திராயனில் இணைத்து அனுப்பப்பட்ட நாசாவின் எல்கிராஸ், நிலவில் போதிய அளவு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது.

22 - மிஸ் எர்த் பட்டத்தை பிரேசில் அழகி லாரிசா ரமோஸ் வென்றார்.

27 – துபாய் வேர்ல்ட் மிகப் பெரும் கடன் சிக்கலில் சிக்கி, உலக பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்தது.

டிசம்பர்

1 - ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசி புதிய கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்த ஈராக் பத்திரிக்கையாளர் அல்ஜெய்தி மீது, பாரீஸில் இன்னொரு ஈராக் பத்திரிக்கையாளர் ஷூ வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

7 - கோபன்ஹேகன் நகரில் .நா. புவிவெப்ப மாற்றத் தடுப்பு மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது.

10 - அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார் ஒபாமா.

12 - பல பெண்களுடன் டைகர் உட்ஸுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமாகி உலக கோல்ப் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

- ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த உலக அழகிப் போட்டியில், ஜிப்ரால்டர் அழகி கயானி பட்டம் வென்றார்.

18 - உருப்படியான தீர்வைக் கூறாமல் கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது.

22- இயேசுநாதர் வளர்ந்த நாசரேத் நகரில், அவர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான வீட்டை இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

23 - இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கப்பலில் தங்கியிருந்த ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற இலங்கைத் தமிழ் வாலிபர் உடல் நலம் குன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

25 - வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்த வந்த போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டை ஒரு பெண் மோதித் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

26 - அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி உமர் பாருக் அப்துல்முத்தல்லாப் என்பவரை சக பயணிகள் மடக்கிப் பிடித்து பெரும் விபரீதத்தைத் தடுத்தனர்.

28 - கராச்சியில் முஹர்ரம் ஊர்வலத்தின்போது நடந்த பயங்கரத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

- உலகிலேயே மிகவும் மோசமான டிரஸ் அணிந்தவர் என்று ஹாலிவுட் நடிகை கேட் பிளான்சட்டை இங்கிலாந்து பத்திரிக்கை அறிவி்த்தது.

29 - அமெரிக்காவில் தாக்குதல் நடத்த ஏராளமான தற்கொலைப் படையினர் அங்கு செல்லவுள்ளதாக கைதான நைஜீரியர் அப்துல்முத்தல்லாப் தெரிவித்தார்.

- மன நலம் பாதித்த இங்கிலாந்துக் குடிமகனான அக்மல் ஷேக் (53) என்பவருக்கு சீனா மரண தண்டனையை நிறைவேற்றியது.

30 - பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த உதவுமாறு தலிபான்கள் தன்னைக் கேட்டுள்ளதாக இம்ரான் கான் அறிவித்தார்.
....பகலவன்....