தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இன்றைய இளைஞர்களிடம் இல்லாமல் போனதா?


இன்றைய இளைஞர்களிடம் இல்லாமல் போனதா? இல்லை அத்தகைய குணத்தை முந்தைய தலைமுறை நமக்கு சொல்லி கொடுக்க மறந்து போனதோ? அல்லது நமக்கு என்று எதுவும் ஒரு பெரிய குறிக்கோள் இல்லாமல் போனதா? -

Image

அல்லது எனக்கு நடக்கட்டும்.. அப்போது நான் பார்த்து கொள்கிறேன் என்ற மெத்தன போக்கா? - அல்லது இது எனது கவலை இல்லை என்ற தட்டி கழிக்கும் குணமா? - அல்லது நல்ல தலைவர்களைத் தேடி தேடி... தனக்குள் இருக்கும் நல்ல தலைவர்களை கண்டு கொள்ளாமலே வாழும் நிலையா? எது? எது? நமது இளைஞர்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு முன்னின்று உழைக்கும் குணத்தை இல்லாமல் செய்தது எது? எது? என கேள்விகளை எனக்குள் எழச்செய்தது இலங்கையில் அமைதி திரும்ப நடைபெற்ற அமைதி நடைபயணத்தில் கலந்து கொண்ட இவரை கிளிக்கிய போது....

....பகலவன்....