தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

"பெரிய மனிதர் பெரியார்"


1965-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. கட்சித் தலைவர்கள் அச்சமயம் முதலமைச்சராயிருந்த திரு.எம்.பக்தவத்சலம் ஒன்று கூட்டி விழா ஒன்று எடுத்தார்.

http://www.tn.gov.in/tamiltngov/memorial/periyar.jpg


சபைக்கு முதலமைச்சர் வந்ததும், யந்திரம் போன்று எழுந்து நின்றவர் பெரியார் ஒருவர் மட்டுமே. தாங்கள் தள்ளாதவர்! வயதில் பெரியோர். நீங்கள் அமர்ந்து இருக்கலாம். நம்ம முதலமைச்சர் உங்களைத் தவறாகக் கருதமாட்டார் என்றனர் அங்கிருந்த நிருவாகிகள்.

"மன்னிக்கனும், மரியாதை எவருக்கும் கொடுக்க வேண்டும்" என்றார் பெரியார்.

முதலமைச்சரே வந்து,

"தாங்கள் உட்காருங்கள்" என்று வேண்டினார் பெரியாரிடம்.

ஆனாலும், தந்தை பெரியார் அவர்கள் முதலமைச்சர் பக்தவத்சலம் மேடையில் அமர்ந்த பிறகே உட்கார்ந்தார்.

எல்லோரும் பெருந்தன்மை மிக்க பெரியாரைப் புகழ்ந்தார்கள்!

இந்நிகழ்சியைக் குறித்து,

"நாள்தோறும் என்னையும், என் கொள்கைகளையும் எதிர்ப்பவர் பெரியார். ஆனால் அவர் என் பதவியைக் கவுரவம் செய்கிறார்; இந்தப் பாசமும், பரிவும் உள்ளவர் பெரியார் ஒருவரே" என்று பலரிடமும் சொல்லி பெருமிதம் அடைந்தார் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்கள்.

- நூல்: "பெரிய மனிதர் பெரியார்"




பெரியார் திராவிடர்கழகம்
"தமிழ்க்குடில்"
6/28,
புதுத்தெரு
கண்ணம்மாப்பேட்டை
தியாகராயர்
நகர்
சென்னை
- 600 017

"ஓடாத மானும், போராடாத மனித இனமும் வென்றதாக வராலாறு இல்லை"

புரட்சி பெரியார் முழக்கம் படியுங்கள்

பின் வரும் இணைப்புகளை பயன் படுத்தவும்
www.periyardk.org
www.noolaham.net
www.athirvu.com
www.nerudal.com
www.tamilsword.com
www.tamilnation.org
www.tamilnet.com
www.pathivu.com
www.sankathi.com
www.adhikaalai.com
www.keetru.com