தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் திடீர் மரணம்!

http://im.in.com/connect/images/profile/b_profile5/Vishnuvardhan_(actor)_300.jpg

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த விஷ்ணுவர்தன் இன்று அதிகாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 59.

விஷ்ணுவர்தன் ஏராளமான கன்னடப் படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர். கடந்த 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி பிறந்தார்.

கன்னட திரைப்படங்களில் காதல், ஆக்ஷன், குணசித்திரம், இசை, காமெடி மற்றும் குடும்பக்கதை என பலதரப்பட்ட படங்களில் நடித்து இவர் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

http://www.hindu.com/fr/2005/04/01/images/2005040101350202.jpg

ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படம் அதற்கு முன்னதாக ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினி நடித்த பாத்திரத்தில் விஷ்ணுவர்தன் நடித்திருந்தார்.

மேலும் ரஜினி, சிவாஜி நடித்த விடுதலை படத்தில் இரண்டாவது கதாநாயகனாக ரஜினியன் நண்பராக விஷ்ணுவர்தன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் நடித்து புகழ் பெற்ற ரமணா படம் கன்னடத்தில் தயாரானபோது அதில் கதாநாயகனாக நடித்தார்.

கன்னட நடிகை பாரதியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கீர்த்தி மற்றும் சந்தனா என்ற இரண்டு மகள்களை தத்தெடுத்து வளர்த்தார். இதில் கீர்த்தி அனிருத் என்ற வளர்ந்து வரும் கன்னட நடிகரை மணந்து கொண்டார்.

http://img29.imageshack.us/img29/6151/3497vishnu02.gif

நகரஹாவு என்ற படத்தில் தான் அவர் நடித்தார். இந்தப் படத்தில் நடித்த போது தான் சம்பத்குமார் என்ற பெயரை அவர் விஷ்ணுவர்தன் என்று மாற்றிக் கொண்டார். எனினும் கிரீஷ் கர்நாட் இயக்கிய வம்சவிருக்ஷா என்ற படத்தில் அவர் அறிமுகமானார். இந்தப் படம் ந்திசய விருது பெற்றது.

ராஜ் குமார் இறந்த பிறகு இவரே கன்னட திரை உலகின் மூத்த நடிகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை விஷ்ணுவர்தன் மைசூரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு கன்னட மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.