தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உன் நினைவு இல்லாமல்,



அசையாமல் காற்று,

பூக்காமல் மலர் இருக்கும் என்றால்,

நானும் இருப்பேன் உன் நினைவு இல்லாமல்,

பாசமுள்ள நெஞ்சங்கள்

பழிவாங்க நினைப்பதில்லை,

பிரியமுள்ள நெஞ்சங்கள்

புரிந்துகொள்ள தவறுவதில்லை,

கண்ணை மூடிபார்த்தேன்

கனவில் வந்தாய்,

கண்ணை திறந்துபார்த்தேன்,

கணவனோடு வருகிறாய் ,எப்படி

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

வாழ்கையின் பாதையில்

ஒருவரை ஒருவர் சந்தித்தோம்,

பிரிவுகள் இருந்தாலும்

நாம் பிரியாத அன்புகொண்டு இருப்போம்,

உன் இதயத்தில் இடம் பிடிக்க

பலபேர் உண்டு,ஆனால் நான் உன்

இதயத்தை திருப்பி கொடுத்தால் மட்டுமே

அந்த பலருக்கும் இடமுண்டு

....பகலவன்....