நம் முன் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ஒரு புதிய பிரச்னையை ஆரம்பித்து இருக்கிறார் ராமதாஸ் ,தெலுங்கானாவைப் போல தமிழகத்தையும் இரண்டாகப் பிரித்து மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை. நமக்கு இந்த ஜாதி அரசியல்வாதியிடம் கோபமும் ஆதங்கமும் ஏற்பட்டாலும் நமது வேதனையும் கோபத்தையும் வெளிபடுத்த வேண்டாம் என்றே கருதினேன்.காரணம் இது போன்ற தேவையற்ற பேச்சுகளுக்கு நம் கருத்தை வெளிபடுத்தினால் அது இன்னும் அவர்களின் நாடக பேச்சுக்கு உரம் சேர்ப்பது போல் ஆகிவிடும் என்றே நினைதேன் ,ஆனால் அதற்கு பின் வந்த செய்திகள் மேலும் என்னுள் கோபத்தை ஏற்படுத்தியது.இதற்க்கு மேலும் அமைதி காத்தால் தெருவுக்கு தெரு மாநிலம் கேட்ப்பார்கள் போல.
1.தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தவறு இல்லை என்று பாமகதலைவர் டாக்டர் ராமதாஸ் ,
2.கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக்க கோரிக்கை - கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி ,
3.மதுரையை தலைநகராக்கி தென் தமிழகத்தை தனி மாநிலமாக்க கோரிக்கை! - மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன்,
4.தனி ராயலசீமா மாநிலம் வேண்டும்!-வேலூர், திருவள்ளூரை சேர்க்க வேண்டும்'!!
5.புதுச்சேரியில் இருந்து காரைக்காலை பிரிக்க போராட்டம்,
ஆந்திராவில் நடக்கும் தெலுங்கானா போராட்டம் குறித்து வரலாறு தெரியாத சுயநலம் தேடும் அரசியல்வாதிகளை நாம் என்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள்?. இப்படி ஒரு கட்சி மூவேந்தர் முன்னணிக் கழகம் நம் பிரதேசத்தில் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்.ஆளாளுக்கு தனி மாநிலம் கோருவது இப்போது சீசனாகி விட்டது. ஐயோ முடியலடா சாமி ! போதும் டா உங்க காமெடி. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
ஒரே மொழி பேசும் இனத்தவர்களே தனி மாநிலம் பிரித்து கேட்பதால், மொழி மக்களை இணைக்கும் என்ற மாயையும் இந்த கோரிக்கைகளால் தவிடுபொடி ஆகியிருக்கிறது. ஒரு நாடு மதம் சார்ந்து அமைந்தாலும் சரி, மொழி சார்ந்து அமைந்தாலும் சரி, இப்படி எதுவுமே இல்லாமல் செயற்கையாக அமைந்தாலும் சரி, கடைசியில் தனி மனிதர்களின் சுயநலமே அந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
தென் தமிழகம் மற்ற பகுதிகளைப்போல் முன்னேற்றம் காண வில்லை என்பது உண்மைதான்.வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றால் அது மேம்போக்கான பேச்சு. குஜராத்தில் தலைநகரிலிரிந்து. 400,600,800 கி.மி தொலைவில்லுள்ள ஜாம்நகர், ராஜ்கோட் ,பூஜ் போன்ற நகரங்கள் தொழில் வளர்ச்சியடையும் போது தமிழ்நாட்டில் 100 கி.மி தொலைவிலுள்ள வேலூர் தொழில் வளர்ச்சி அடைய முடியவில்லை ஏன் ? இதற்க்கு ஆண்ட அரசியல்வாதிகளின் சுய நலம் தான் காரணம் .எல்லா காலத்திலும் சென்னைக்கு மட்டுமே செய்தார்கள்.
திரு ராமதாஸ் அவர்களே ,
தமிழன் எப்போது ஒரு தமிழனை தமிழனாக பார்க்கிறானோ அப்போது தான் தமிழனும் தமிழ்நாடும் உருப்படும்,அய்யாவின் உண்மையான திட்டம் பேராசை கொண்டதாகவும், சுயநலப் போக்கிலும் இருப்பதாலேயே இந்தப் பிரிவினை முயற்சி மக்களால் கண்டுகொள்ளப்படவில்லை. காவிரிக்கரைக்கு வடக்கே வன்னியர்கள் அதிகம் உள்ளதால், தனி மாநிலம் உருவானால், தனது வெற்றிவாய்ப்பு அதிகமாகும் என்ற பேராசை, இவரது கண்ணை மறைத்தது. ஆனால், வன்னியர்கள் அதிகம் உள்ள புதுச்சேரியில் முன்பு ஒருமுறை வாங்கிய மரண அடியின் வலி, இன்னமும் இவருக்கு உரைக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.ஜாதி மத பெயரால் நாட்டை பிரிக்க நினைப்பது மிக கேவளமான விஷயம். எல்லாம் சரி , நீ ஊரிலிருந்து டிக்கெட் கூட எடுக்காமல்(கையில் காசு இல்லை ) வண்டி ஏறி வந்தப்போ இருந்த உன் சொத்தின் மதிப்பு என்ன? இப்போ உன்னிடம் இருக்கும் சொத்தின் மதிப்பு என்ன? இது எப்படி வந்தது ? நீயொரு நேர்மையானவன் என்றால் பட்டியல் இடு பார்ப்போம் !!அவிழ்த்துக் கட்ட அடுத்த கோவணம் இல்லாத உனக்கு (ஒரு காலத்தில்) இன்றைக்கு எவ்வளவு சொத்துக்கள்? ஜாதி கட்சியில் பிழைப்பதை முதலில் நிறுத்து. வட தமிழ்நாட்டில் வன்னியர் ஜாதி மக்களையும் ஏமாற்றி முதல்வர் ஆகிவிடலாம் என்று என்னும் மாபெரும் அதி மேதாவி நீ.முதலில தமிழனை எல்லாம் ஒண்ணா சேர்த்து காவிரி, பெரியாறு பிரச்சனைகளை முடிஞ்சா தீர்த்து வை பார்ப்போம்.உங்கள் ஜாதி ஓட்டுக்காக வட தமிழ்நாட்டை பிரிக்க நினைக்கும் நீ ஈழ பிரச்சனையை பற்றி இத்தனை ஆண்டு காலம் வாய் பேச மறுத்தது நகைப்புக்குறியது.
திரு டாக்டர் சேதுராமன் அவர்களே,
இவரின் கோரிக்கை என்னவென்றால் காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்ற ஒரு மாநிலமாகவும், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகம் என்ற இன்னொரு மாநிலமாகவும் தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்பது.ஜாதி பேரை சொல்லி மக்கள் மனதில் விசக்கிருமியை தூண்டுவதில் இவனும் ஒருவன்.தூத்துக்குடி முன்னேற வந்த திட்டமான சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்திய இந்த தமிழின தலைவனுங்க தான் தென் தமிழகம் வளரவில்லை என்று கவலை படுகிறார்களாம். சேதுராமனுக்கு தெற்கே கொஞ்சம் செல்வாக்கு இருப்பதாலே தமிழகத்தை பிரிக்கணும்னு சொல்றான். சொந்த அரசியல் லாபத்திற்காக சில்லரைதனமா யோசிக்கும் இது போன்ற ஆள்களை புறக்கணியுங்கள் மக்களே.ஒன்னும் பிரச்னை இல்லை. பேசாம சேதுராமன் வீட்டை தனி மாநிலமா மாத்திட்ட பிரச்சனை இல்லை .போராட்டதிற்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் மகளிரணி செயலாளர் நடிகை " புவனேஸ்வரியை" கூட்டிகிட்டு வருவீர்களா சேதுராமன் மாமா ? சேதுராமன் நீங்க வட தமிழகத்துக்கு புவனேஸ்வரியை முதலமைச்சர் ஆக்குங்க. நீங்க தென் தமிழகத்துக்கு முதலமைச்சர் ஆகுங்க,அந்த தென் தமிழ்நாட்டில் தேவர் இன ஏமாற்றி முதல்வர் ஆகிவிடலாம் என்று என்னும் மாபெரும் அதி மேதாவி நீ.
திரு பெஸ்ட் ராமசாமி அவர்களே ,
அது என்ன பெஸ்ட் ராமசாமி? ஊருக்குள்ள நாங்க தான் பெரியவங்க தெரியுமில்ல என்று வடிவேலு சொல்வது போல இருக்கு உங்க பேரு..ஆமா உங்க கொள்கை தான் என்ன ராசா? கடைசிவரைக்கும் வேல வெட்டிக்கு போகாம ஊரு வம்ம்பை அளக்குறதா? இந்திய வரலாறை கொஞ்சமாவது படிச்சிருக்கியா நீ? ஏனுங்கனா தமிழகத்தின் மேற்கு பகுதியில் தான் திருப்பூர்,கோயம்பத்தூர், ஈரோடு, சேலம் என்று 4 தொழில் வளம் மிகுந்த மாநகர்கள் இருக்குங்களேனா. அப்புறம் என்னங்கணா. உங்கள் பகுதியின் வளத்தை மற்ற தமிழர்கள் சுரண்டுறாங்கனு எனுங்கணா சிரிப்பு மூட்டுறீங்க ? நீங்க தமிழன் தானே? கொங்கு நொங்குனு ஒரு இனம் இருக்கா ?என்ன ஒழுங்கா உங்க ஊர்பக்கம் வட நட்டவர்,மலையாளி மற்றும் சிங்கள ஆதிக்கத்தை ஒழிக்குற வழிய பாருங்க.
'தனி ராயலசீமா மாநிலம் வேண்டும்!-வேலூர், திருவள்ளூரை சேர்க்க வேண்டும்'!!
தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு ராயசீமாவையும் தனி மாநிலமாக்க வேண்டும். அதில் தமிழகத்தில் உள்ள வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.விட்டால் திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை கேப்பீங்கடா. ஏன்னா நாங்கதான இளிச்ச்சவாய தமிழர்.திருவள்ளூர் வரை வந்துவிட்டீர்கள் சென்னையையும் எடுத்து கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் வாயில் விரல் வைத்து கொள்ளுகிறோம். விட்டால் அமெரிக்கவும் தெலுங்கானாவை சேர்ந்தது என்பார்கள் போல. ஒருவேளை கருணாநிதி விற்று விட்டாரோ.........................
இந்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும். சும்மா கூவுகிறார்கள் என்று விட்டுவிட்டால்.ராமதாஸ் உண்ணாவிரதம் ஆரம்பிப்பார்.இத்தாலி அரசி சோனியா பிரித்து கொடுத்து விடுவார். ஆயிரம் வருடங்களாக தமிழ் மக்கள் கண்ட கனவுதான் இன்றைய தமிழகம். மறுபடியும் பிரிந்தால் வரலாறு மறுபடியும் தொடரும். அந்நிய சக்திகள் நம் கலாச்சாரத்தை அடிமை கொள்ளும். ஆந்திர மக்கள் தாய்மொழி தெலுங்கை விட இந்தியில் பேசுவதில் பெருமை கொள்பவர்கள். அவர்கள் பாணி நமக்கு ஒத்து வராது.போற போக்கைப் பார்த்தால் தமிழ் நாட்டில் கொங்கு தனி மாநிலம், பிராமணர் தனி மாநிலம், வன்னியர் தனி மாநிலம், மீனவர் தனி மாநிலம். இப்படியே மாநிலம்,மாநிலமாகப் பெருக வேண்டியதுதான்,மிக மட்டமான சுயநலமான யோசனை. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியணும் . தங்களுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கும் பகுதிகளை பிரித்தால் அப்படியாவது ஆட்சி அதிகாரம் நம் கைக்கு வராதா என்ற கீழ்த்தரமான புத்தி தெரிகிறது . எப்படியாவது தங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேணும். ஊரை அடிச்சி உலையில் போட்டது பத்தாது.வரும் தம் சந்ததிகளுக்கும் சொத்து சேர்க்க வேண்டும். யார் வாழ்ந்தால் என்ன? அடித்துக்கொண்டு செத்தால் இவனுகளுக்கு என்ன? தெற்கு வடக்கு பேதமில்லாமல் எல்லாரும் சேர்ந்து இந்த கயவாளி கூட்டங்களை ஒழித்தாலன்றி இவனுக இப்படியேதான் ஏதாவது ஒன்னை கிளப்பி விட்டு குளிர்காய் வானுங்க .
ஒற்றுமை அவசியம்!
பொதுவான பிரச்னையை அணுக ஒற்றுமை அவசியம்! ஒன்றாக இருக்கும்போதே நாம் சொல்வதை இந்தியாக்காரன் கேட்பதில்லை .பிரிந்துவிட்டால் சொல்ல தேவையில்லை.39 எம்பிக்கள் இருப்பதால் தான் தமிழனை கொஞ்சமாவது மதிக்கிறது மத்திய அரசு. கூடி வாழ்ந்தால் தான் நன்மை. எம்பிக்கள் எண்ணிக்கை குறைந்தால் எப்படி நடத்தப்படுவோம் என்பதை வடகிழக்கு மாநிலங்களை கேட்டுப்பாருங்கள். இக்கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா,
தமிழகத்தை 2 ஆக பிரித்து விட்டால், காவிரி ஆற்று பிரச்னைக்கு யார் போராடுவார்கள், வட தமிழ்நாடா, தென் தமிழ்நாடா? முல்லை பெரியார் யாருடைய பிரச்னை வடதமிழ்நாடா, தென் தமிழ்நாடா ? தென் தமிழ்நாட்டுக்கு ஹொகேனகல் பிரச்னையில் அக்கறை இல்லையா? ஈழ பிரச்னையை யார் முன்னெடுத்து நடத்துவது ? நாளை காவிரிக்கு கர்நாடகாவுடன் சண்டை போட தெவையில்லை.வட தமிழகமும் தென் தமிழகமும் சொந்தம் கொண்டாட சண்டை போடுவார்கள்.
யோசியுங்கள் !நமக்குள் நாம் அடித்து கொண்டால், நமது கவனம் பொது பிரச்னையில் இருக்காது.அப்போது வெளியில் இருக்கும் எதிரிக்கு நம்மை வீழ்த்துவது சுலபம். ஏற்கனவே தமிழன் ஜாதி, மதம் என்று கட்சி வைத்து கொண்டு பிரிந்து கிடக்கின்றான் இதில் இந்த மாநில பிரிவும் தேவைதானா, வடிவேலு சொல்வது போல இவனுங்கள் எல்லாம் உக்காந்து யோசிப்பானுலகோ.இப்படியே உசுபேத்தி உசுபேத்தி உடம்பு ரனகலமாயிடுச்சி.இது மாதிரி மடத்தனமான யோசனை எல்லாம் தேவை அற்றது..மூணு போகம் விளைத்த நாங்கள் எல்லாம் இன்று ஒரு போகம் விளைபதற்கே கஷ்டமா இருக்கின்றது.இவர்கள் சொல்வதை ஆமாம் போட அல்லக்கைகள் கூட்டம் வேறு..ஸ்ரீலங்கா தமிழ் ஈழம் தேவை என்று வாய் திறந்து பேச கூட தைரியம் இல்லாத கபோதிகள் இன்று தமிழ் நாட்டை இரண்டோ அல்லது மூன்றோ ஆக்கி இவர்கள்குடும்பம் வழ வழி வகுக்கிறார்கள்.
எந்த ஏழையாவது இப்படி எதாவது கருத்து சொல்கிறானா? ஏழை உழைத்து களைத்து போகிறான், காசுள்ளவன் வாய் கரி துப்பினாலும் அது சிந்தனை, அதே ஒரு ஏழை எந்தவிதமான கருத்தை சொன்னாலும் தண்டனை, என்றைக்கு தமிழ் நாடு என்று ஒன்று உருவாகியதோ அன்றே நாங்கள் எல்லாம் ஒற்றுமை என்ற குடையின் கீழ் இருக்கிறோம், சாதி எங்களுக்குள் இல்லை, அரசியல்வாதிகளின் சாதி தான் இருக்கிறது, இந்தியா மீது பற்று வைத்துள்ளோமா என்று போக போக வெளிப்படும் , ஆனால் தமிழையும் தமிழ் நாட்டையும் துண்டாட நினைத்தால் இங்கே அரசியல்வாதிகளுக்கு செருப்படி விழும், எதற்காக தமிழகத்தை பிரிக்க வேண்டும்?
தென் தமிழகத்தின் வசதிக்காக மதுரையில் சென்னையை போலவே வசிதிகளை ஏற்படுத்தலாமே? ஆனால் அரசியல் வாதிகள் இப்படியா சிந்திக்கிறார்கள் அவர்கள் நலன் மட்டுமே அவர்களின் நோக்கம். பிரிவினை என்பது நாட்டிற்கு நல்லது அல்ல. இருந்தாலும் வளர்ச்சியில் தென் தமிழகம் பின்தங்கி உள்ளது என்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது. எத்தனை வெளிநாட்டு கம்பனிகள் சென்னையில் முதலீடு செய்கின்றனர் தமிழ் நாடு சென்னையுடன் முடிந்துவிட்டதா கம்ப்யூட்டர் தொடர்பான தரமான படிப்பு, வேலை சென்னையை தவிர தமிழ் நாட்டின் வேறு பகுதியில் உண்டா. பிரிப்பதை விட மற்ற மாவட்டத்தையும் முன்னேற்ற அரசு முன் வரவேண்டும் . தலைமையகத்தை தமிழகத்தின் மையபகுதிக்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஈழத்துல நம் மக்கள் படுற அவஸ்த்தைக்கு வழி சொல்லுங்கடான்னா இப்பதான் தமிழ் நாட்டை பிரிக்கணும் சேர்க்கணும் சொல்லிக்கிட்டு. அந்த ஈழ மக்கள் படுற கஷ்டத்தை ஒரு நாலாவது பட்டால்தான் உங்களுக்கு அந்த வலி தெரியும் பிரிவுகளிலும் பிளவுகளிலும் ஊறி நிற்கிறோமே அன்றி ஒற்றுமையாக , சிங்களவனை எதிர்க்க இன்னும் தயாரில்லை, இன்னும் எத்தனை எத்தனை ந்ம் குலப் பெண்களின் , சிறுவர்களின் இளைஞர்களின் உடலங்களைப் படமாகக் காட்டப் போகிறதோ சிங்களம்,
சமத்துவம் என்பது சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.
"தமிழா" பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய்,ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்.
தோழமையுடன்
பகலவன்
பகலவன்