தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறையே பார்ப்பனியம்.

சமத்துவத்தின் எதிரி பார்ப்பனியமே- அண்ணல் அம்பேத்கர்

முதலாளிகளுக்கு எதிராக, உங்களைச் சுரண்டுபவர்களுக்கு எதிராக ஓர் ஐக்கிய முன்னணியைத் திரட்ட வேண்டிய அவசியம். பொருளாதாரச் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இழப்பதற்கு உங்களிடம் எதுமில்லை. அடைவதற்கு எல்லாம் இருக்கிறது.

நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்பதிலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை இந்த நாட்டுத் தொழிலாளிகள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்றுப் பார்ப்பனியம் இன்னொன்று முதலாளியம்.

தீண்டாமைப் பிரச்சினை ஒரு வர்க்கப் போராட்டம். ஒரு வர்கம் இன்னொரு வர்க்கத்துக்கு அநீதி இழைக்கிறது என்றே பொருள்.

சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறையே பார்ப்பனியம்.

இந்த எதிர்மறை உணர்வு எல்லா வகுப்பினரிடையே உண்டு. பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்பனர்களே அதை தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும் அது எல்லா வகுப்பினரிடையும் ஊடுருவி உள்ளது என்பதே உண்மை.

சமத்துவமின்மை என்ற குணத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து அடியோடு களைந்தெறிய வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர்