மாநிலங்களை பிரிப்பதால் இந்தியாவின் கூட்டாட்சிக்கு ஆபத்து ஏற்படுமா?
இந்தியாவில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த தனிமாநில பிரிவினை கோரிக்கைகள் தற்போது எரிமலையாய் வெடிக்கத் தொடங்கி விட்டன. ஆந்திராவில் தனி தெலுங்கானா கேட்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் சந்திரசேகர ராவ். மோதல், வன்முறை என நிலைமை மோசமாகவே தெலுங்கானாவுக்கு பச்சைக்கொடி காட்டியது மத்திய அரசு. அதே வேகத்தில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்புகளும் கிளம்ப ஆந்திரா இப்போது அமளி துமளியாகிப் போய் கிடக்கிறது. இதற்கிடையே உத்திரபிரதேசத்தை மூன்றாகப் பிரிக்குமாறு கூறி வருகிறார், அம்மாநில முதலமைச்சர் மாயாவதி. மேற்கு வங்கத்தை பிரித்து கூர்க்காலேண்ட் அமைக்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது. குஜராத் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் பிரிவினை கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால், 'புதிய மாநிலங்கள் பிரிக்கப்படுவது இந்தியாவின் கூட்டாட்சிக்கே ஆபத்தானது' என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. இவரது கருத்து சரிதானா? மாநிலங்களை பிரிப்பதால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுமா? இது பற்றி நீங்கள் நினைப்பது என்ன? உங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்யுங்கள். உலகமே தெரிந்து கொள்ளட்டும்.
....பகலவன்....