தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழ்நாட்டை தனி நாடாக பிரிக்க வேண்டும் !

என்ன தோழர்களே தலைப்பே எதோ பிரிவினையை உண்டாக்குவதாய் உணர்கிறீர்களா,பல பேர் என்னை வசை பாடுவதும் கேட்கிறது.தமிழ் தேசியத்தை முன்நிறுத்தி என் தோழர்கள் கொற்ற்வனும் மகிழனும் எழுதிய கருத்துகளுக்கு உயிர் கொடுக்கும் முகமாக என்னுடைய எண்ணங்களையும் கட்டுரையாக தொடர்கிறேன்,வசை பாடுவதை நிறுத்திவிட்டு இல்லாத ஒரு இனத்துக்கு இந்தியனாக நீ காட்டும் ஒரு ஒற்றுமையை உன் தாயின் தொப்புள் கொடியில் உருவான தமிழன் என்ற இனத்துக்கு உன் ஒற்றுமையை ஏன் காட்ட மறுக்கிறாய்?

தங்களை இந்தியன் என்று கூறிகொள்ளும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து விலகி இருப்பது தான் தமிழர்களுக்கு நல்லது. ஏன் என்றால் இந்திய தேசியத்தை ஏற்கும் எவனாலும் தமிழ் இன விடுதலையை ஆதரிக்க முடியாது .இந்தியாவில் மொத்தம் 1000 த்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன . ஆனாலும் ஆண்டுதோறும் 200 கோடி செலவு செய்து இன்னும் வெறும் 40 விழுக்காட்டு மக்களே பேசும் ஒரு மொழியாக இருக்கிற இந்தி மொழி தான் இந்தியாவின் ஆட்சி மொழி .இதை எல்லா இந்தியர்களும் ஏற்றுகொள்கின்றனர் .ஆகையால் ஈழத்தமிழர்கள் சிங்களம் மட்டுமே சட்டத்தை ஏற்காமல் சிங்களத்தை கற்காமல் இருப்பது தமிழரின் தவறாகவே இவர்களுக்கு தோன்றும் .இந்திய அரசியல் சட்டப்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாம்.ஆனால் இங்கு உள்ள அரசு மருத்துவமனைகளின் வாசலில் முதலில் இருப்பது வட இந்திய கடவுள் பிள்ளையாரின் கோவில் தான்.இதை போல் அரசு அலுவலங்களில் இந்து மதங்களின் கடவுள்களின் படங்களும் ,கிறித்துவ மதம் சார்ந்த படங்களும் ,இசுலாமிய மதம் சார்ந்த படங்களும் ,போதாத குறைக்கு பிள்ளை இல்லாத பெண்களுக்கு பிள்ளை தரும் சாமியார்களின் படங்களும் இருக்கும்.இதெல்லாம் அவர்களின் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருந்தாலும் எவனும் இதை பற்றி எல்லாம் எவனும் கேள்வி கேட்கமாட்டான். ஏன் ?முதலில் எவனும் கவலையே படமாட்டான் இந்தியாவில் நடக்கும் தீவிர ஆளர்களின் தாக்குதலுக்கு ஒவ்வொரு பாக்கிஸ்தானிக்கும் பொறுப்பு இருக்கிறது ஆகையால் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும் என்பர். வேறு நாட்டு தீவிரவாதிகள் இவர்கள் நாட்டில் தாக்குதல் நடத்தினால் அதற்கு அந்த வேற்று நாட்டின் எல்லா மக்களுக்கு பொறுப்பு இருக்கிறதாம் ,ஆனால் இவர்கள் தேர்தெடுத்த இந்தியா அரசு தமிழீழத்தில் 100000 தமிழ் மக்களை கொன்றால் அதில் இவர்களுக்கு பங்கு இல்லையாம்,இவர்கள் நாட்டு மட்டை பந்து அணி வெற்றிபெற்றால் அது இந்தியாவின் வெற்றியாம்.ஆனால் இவர்கள் நாடு அண்டை நாட்டில் தமிழ் இன அழிப்பை நடத்தினால் அது வெறும் பேராயக்கட்சியின் தப்பு தானாம் ,இந்தியர்களின் தவறு இல்லையாம் .

இவர்கள் வெள்ளையன் தங்கள் நாட்டைவிட்டு போனதையே "Happy Independence Day " என்று கூறி தான் கொண்டாடுவர் . இவர்கள் நாட்டில் எந்த அரசு விண்ணப்பத்தை எடுத்து கொண்டாலும் ஒரு மனிதனின் நாடு, சாதி,மதம்,ஊர் என்ன என்றெல்லாம் கேட்டு இருப்பார்கள் .ஆனால் எங்குமே மொழியையோ இனத்தையோ கேட்டு இருக்கமாட்டார்கள் .ஏன் என்றால் மொழி மற்றும் இனங்களை ஏற்றுக்கொள்ளாத தேசியமே இந்திய தேசியம்.அதாவது தான் இந்த சாதி இந்த மதம் என்று கூறி கூட்டம் சேர்த்து மேலே ஏறி பின் இந்தி மக்களுடைய அடிவருடியாகவும் பார்ப்பனர்களின் அடிவருடியாகவும் மாறி கீழே இருப்பவர்களை நசுக்குவது தான் இந்திய தேசியம்.

செய் இந்து [ஜெய் ஹிந்]என்று இந்தி மொழி ஆள் இந்தியில் சொன்னால் இவன் 'வாழ்க இந்தியா' என்று தமிழில் கூற மாட்டன் இவனும் அதை இந்தியில் தான் சொல்வான் .சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் [வட நாட்டு உடையான] சுடிதாரை தான் பெண்கள் கட்டாயம் அணியவேண்டும் என்று ஆணையிட்டனர் ,அது என்று கேட்டால் பெண்கள் மரபு உடையில் வரவேண்டுமாம். சுடிதார் என்று தமிழச்சிகயரின் மரபு உடையானது என்பது அவர்களுக்கே வெளிச்சம் .இவர்கள் கூறும் இந்தியா, இந்திய ,அரசு இந்திய பண்பாடு எல்லாம் வட இந்தியாவில் உள்ள வெள்ளை தோல் உள்ள பார்ப்பனர்களுக்கு உரியதே ,இதை எல்லாம் பிற பார்ப்பனர்களும் வட இந்தியரும் இனப்பற்று காரணமாக வலிந்து ஏற்றுகொள்கிறார்கள் .இதை பிறர் எற்று கொண்டால் தான் அவர்கள் எல்லாம் இந்தியர் இல்லை இன்றால். சீமான் போல் சிறைக்கு போகவேண்டியது தான்

ஈழத்தமிழருக்காக வருந்துகிறேன் என்று சொல்லும் இங்குள்ள கூட்டங்கள் கூட காசுமீரின் விடுதலையையோ ,வடகிழக்கு மாநிலங்களின் விடுதலையையோ ஆதரிக்க மாட்டார்கள் ஏற்கமாட்டார்கள் .இங்குள்ளவர்கள் ,ஈழத்தமிழருக்காக வருந்துகிறேன் என்பார் ஆனால் அவர்களுக்காக இவர்களின் மூன்று நேர உணவில் ஒரு வேளை உணவில் ஒரு ஊறுகாய் குறைந்தால் கூட இவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது .அவ்வளவு தான் இவர்களுக்கு ஈழத்தமிழர் மீது உள்ள அக்கறை , பற்று எல்லாம்.இவர்களுக்கு இந்தியா முழுக்க பொய் பிழைக்கவும் இவர்களுள் பெரிய செல்வந்தர்கள் இந்தியா முழுக்க சுரண்டி பிழைக்கவும் இவர்களுக்கு இந்தியா தேவை .காவிரி ,முல்லை பெரியாறு, பாலாறு போன்ற சிக்கல்களுக்கு தீர்வு இந்தியாவில் இருந்து பிரிவது தான் என்று தெரிந்தாலும் அதை பற்றி பேசுபவனின் நாக்கை அறுக்க இவர்கள் தான் இந்தி மொழியினரை விட முதலில் வரிந்து கட்டிக்கொண்டு வருவர் .ஏன் என்றால் இவர்களுக்கு தகவல் தொழிநுட்ப துறை தரும் பணம் வேண்டும்,வட நாட்டு பெண்கள் வேண்டும் ,இந்தியா முழுக்க சுரண்ட வேண்டும் .

ஏற்கெனவே இந்தியன் இந்தியன் என்று கூறி திருப்பதி,திருமலை, கொள்ளேகால்,சித்தூர்,கோலார்,பாலைக்காடு ,தேவிக்குலம்,பீர்மேடு . தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த பகுதிகளை 1960 களில் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்கும் போது ,பிற மொழியினரிடம் இழந்துவிட்டனர். இந்த வரலாறு எல்லாம் இன்று உள்ள இளம் தலைமுறையினருக்கே தெரியாது.கச்சுதீவை சிங்களரிடம் இழந்துவிட்டனர், தங்கள் நீர் உரிமைகளையும் இழந்துவிட்டோம் .ஒரு இலட்சம் ஈழத் தமிழரை கொன்றுவிட்டனர் ,பல ஆயிரம் ஈழ தமிழ் பெண்களை கற்பழித்துவிட்டனர் , ஒரு நாள் நாமும் மொத்தமாக அழிய போகின்றோம்.

சரி தமிழ்நாடு தனி நாடாக கேட்டால் சரி ஆகிவிடுமா ?

முடியும் நீங்கள் தனி நாடு கேட்க ஆரம்பித்தாலே அடுத்த நொடி ஒட்டு மொத்த இந்தியனும் நம் பிரிவினையை ஏற்க்க முன் வர மாட்டான்.நமது கோரிக்கைகளை ஏற்க்கவாவது முன் வருவார்கள். முரண்பாடுகள் முற்றினால் தான் முடிவு பிறக்கும்..புரிந்து கொள்ளுங்கள் .இவர்களை பணிய வைத்துதான் காரியம் சாதிக்க முடியும்,நாம் மண்டி இட்டால் ஏறித்தான் மிதிப்பார்கள்.

....பகலவன்....