10.ஈரம்
ஈரம் படம் ஷங்கர் தயாரிப்பில் வந்து எதிர்பார்க்காத வெற்றி படம் எனலாம் பேய் படம் என்றல் பயமுறுதும் மேக் அப் மிரட்டும் என்ற தமிழ் சினிமாவின் மரபை உடைத்து படம் பார்க்கும் நம்மை அந்த கதைக்குள் கொண்டு செல்லும் நுணுக்கம் சிறப்பாகவே செய்து இருந்தார் இயக்குனர்.ஆதி நந்தா சிந்து மேனன் என்று புதிய முகம் இருந்தாலும் கதைக்காக ஓடிய படம்,சங்கரின் உதவியாளர் அறிவழகனின் ஈரம் வழக்கமான ஒரு காதல் கதையை கொடுக்காமல் கொலை, பேய் என்று வித்யாசமாய் யோசித்து டெக்னிகலாகவும், இயக்குனராகவும் நின்ற படம்.பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .
9.மாயாண்டி குடும்பத்தார்:
பீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது.குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர்.கூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.
8.யாவரும் நலம்:
இப்படம் 13 B என்று ஹிந்தி மொழியில் வந்து பெரும் வெற்றி பெற்றது.தமிழிலும் நல்ல வெற்றியை பெற்றது.கடைசி கட்சி வரை சீட்டின் நுனியில் ரசிகர்களை உட்கார வைத்த படம்,இன்னும் தேவையற்ற கட்சிகளை தவிர்த்து இருக்கலாம்..பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த காட்சிகளை போலவே இருப்பதால் அலுப்பூட்டவே செய்கிறது.
7.உன்னை போல் ஒருவன்:
ஹிந்தி மொழியில் இருந்து வந்த படம் ஆனால் அது போல் வராமல் போன படம் நிச்சயம் ஹிந்தி மொழியில் இந்த படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும் அனுபம் கேர் நஸ்ருதின் ஷா போன்றவர்கள் இப்படத்தில் வாழ்ந்தார்கள் தமிழ் மொழியில் ஒரு நாடகத்தனம் வெளிப்பட்டது.ரிலையன்ஸின் தயாரிப்பில் சுமார் 6 கோடி தயாரிப்பில் தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் 27 கோடி ரூபாய் சம்பதித்த படம்.கமல் மோகன்லால் போன்ற சூப்பர் ஆக்டர்கள்,வித்தியாசமான கதைக்களம் போன்றவற்றின் மூலம் அனைத்து விமர்சகர்களாலும் பாரட்டப்பட்ட படம்.இருந்தும் பாடல்கள்,காமடி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பெரியவெற்றியை அடையமுடியவில்லை.எனினும் இதுஒரு கிளீன்ஹிட்.
6.பசங்க:
எந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ்.நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க.
5.வெண்ணிலா கபடி குழு:
கிராமிய காதலை கபடியுடன் விளையாடிய் படம் இதுவும் புது முகங்கள் நடித்து கதை என்ற சூப்பர் ஸ்டார் ஒருவருக்காக ஓடிய படம் சுசிந்திரன் இயக்கம் எ ஆர் ரஹ்மான் பட்டறையில் இருந்து வந்த வி செல்வகணேசன் இசை என சொல்லலாம்.ஒவ்வொரு காட்சிகளும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.வருடத்தின் முதலில் வந்த வெண்ணிலா கபடிக்குழு. சின்ன பட்ஜெட் படமென்றாலும் வெளிவருவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். எதிர்பார்ப்பை திருப்தி செய்ததால் ஹிட்.
4.பேராண்மை:
ஜனநாதனின் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம்.ஆங்கில படங்களுக்கு நிகரானதொரு படமாக இயக்கி அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தார் ஜனநாதன்.ஜெயம் ரவியை இன்னொரு பரிணாமத்தில் காட்டிய படம்,ஐங்கரனின் மூன்று சறுக்கல்களின் பின்னர் அவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.மலை வாழ் மக்களின் வாழ்க்கையை எடுத்து காட்டிய படம்,தமிழ் சினிமா வரலாற்றில் எடுக்க படாத முயற்சி..
3.ரேணிகுண்டா:
சந்தர்ப்ப வசத்தால் தாய் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலை செய்தவனை, கொல்ல நினைத்த போது போலீஸிடம் பிடித்து கொடுக்கப்படூம் ஒரு பதின்வயது இளைஞனின் திசை மாறி போகும் வாழ்க்கையின் சீல தினஙகளை கண் மூன்னே ஓட விட்டிருக்கிறார்கள்.இவர்கள் எல்லாம் நடிகர்களா என கேட்க வைக்கும் வயது ஆனால் படம் பார்த்து வரும் ஒவ்வொருவரின் மனத்திலும் ஒரு சோகம் நிரம்பி விடுவது உண்மை.புது நடிகர்கள், புது டெக்னீஷியன்கள் என்று எல்லாரையும் புதுமுகங்களாய் வைத்து, ஒரு ஆக்ஷன் படத்தை கொடுப்பது என்பது சும்மா இல்லை. அதை திறம்படவே செய்திருக்கிறார்.நிஜமாகவே படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்திதான். படம் முழுவதும் இவரின் உழைப்பு வியாபித்திருக்கிறது. அதிலும் அந்த பொட்டை அத்துவான காட்டில், ஜானி இருவரை கொலை செய்யப்படும் காட்சியில் கேமரா இன்னொரு கேரக்டர் ஆகவே அலைகிறது. படத்தில் எடிட்டிங்கும் தன் பங்குக்கு இந்த காட்சியில் விளையாடியிருக்கிறது.புதுசாய் ஏதும் காட்சிகள் இல்லாதது குறையே. மிக சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியான படம். ஒரு சிறிய படத்திற்கு எவ்வாறு அக்ரசிவ் மார்கெட்டிங் செய்ய வேண்டும் என்று இப்படத்தை பார்த்தால் தெரியும். படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 4-5 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஓப்பனிங்கை கொடுத்த படம் அடுத்த அடுத்த வாரங்களில் வயலன்ஸ் அதிகமான காட்சிகளால் பெரிதாய் வெகு ஜனங்களை ஈர்க்கவில்லை. ஆனாலும் ஹிட்தான்.
2.அயன்:
ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது..இந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படம் இதுதான்.இதுவும் "சன் பிக்சர்ஸ் வழங்கிய" படம் ஆயினும் இது வெற்றிபெற காரணம், கே வி ஆனந்தின் விறு விறு திரைக்கதை.ஹரிசின் அமர்க்களமான மெட்டுக்கள்,சூர்யாவின் துள்ளலான நடிப்பு,தமன்னாவின் இளமைத்துடிப்பு(ஆகா நமக்குள்ளேயும் ஒரு T.R )ஜெகனின் டைமிங் காமடி என பலவற்றைக் கூறலாம்.ஆனாலும் இப்படம் பெரியளவில் வெற்றியடைய காரணம் சன் டிவி என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
1.நாடோடிகள்:
சசிகுமார் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்.உன்னை சரணடைந்தேன்,நெறஞ்ச மனசு படங்கள் மூலம் தன்னை நிரூபிக்க தவறிய சமுத்திரக்கனி இப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் முதல் வெற்றியைப் பெற்றிருந்தார்,சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரத்தில் வில்லனாக கலக்கியவர் இயக்குனராக ஜெயித்த படம்.ஜனரஞ்சகமான படமாக வந்து அனைவரது வரவேற்பையும் பெற்றது .சசி குமார் தவிர மற்றபடி சொல்லும் படியான புகழ் பெற்ற நடிகர்கள் இல்லை ,ஆனால் இப்படம் தமிழ் நாட்டை தாண்டி ஒரு தாக்கத்தை உண்டாக்கிய படம் ,ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருவது இதன் சிறந்த கதைக்கு கிடைத்த வெற்றி
சிறந்த இயக்கம் நல்ல கருத்து சிறப்பான இசை எல்லாம் சிறப்பாக அமைந்து பெரும் வெற்றி பெற்ற படம் நாடோடிகள்.
உங்கள் கருத்துகள் வரவேற்க்கப் படுகின்றன.
....பகலவன்....