கோவாவில் மொத்தம் 16 ஆயிரம் பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் புதிதாக 3 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் கோவா இந்தியாவின் எய்ட்ஸ் தலைநகரமாக மாறி வருகிறது. அந்த மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க புள்ளி விவரப்படி அங்கு மொத்தம் 16 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். அதோடு தினமும் சராசரியாக 3 பேர் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். கோவாவில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் 98 சதவீதம் பேருக்கு பாதுகாப்பற்ற மற்றும் தகாத பாலியல் உறவு காரணமாகவே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஊசி மூலம் ஒருவருக்குகூட நோய் தொற்று ஏற்படவில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது.
இது குறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் பிரதீப் பட்வால் கூறுகையில், ‘‘கோவாவில் இளைஞர்கள் தங்கள் பாலியல் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு வசதி அதிகம் உள்ளது. இதனால், பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர். பாதுகாப்பற்ற மற்றும் தகாத உடலுறவு காரணமாக அவர்களை எய்ட்ஸ் நோய் பாதிக்கிறது. இளைஞர்கள் மத்தியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தா விட்டால்
எய்ட்ஸ் தலைநகரமாக மாறிவரும் "கோவா"
தொகுப்பு
விபச்சாரம்