தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

"கேபி' என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் நல்லவரா கெட்டவரா?

"இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நடந்து வந்த போர், கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த, "கேபி' என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, மலேசியாவில் ஓட்டல் ஒன்றில் இருந்த, "கேபி' யை, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து, கொழும்புக்கு அழைத்து வந்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், புலிகளுக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் உள்ளதும், ஏராளமான வங்கி கணக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளதாக, இலங்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது."

மேற்கண்ட செய்திக்கு வாசகர் ஒருவரின் விமர்சனமே இங்கு நமது தலையங்கமாகிறது.

சிரிப்பு வருகிறது...சட்ட விரோத செயல்களை பற்றி பேச இலங்கை அரசிற்கு என்ன தகுதி இருக்கிறது? ரசாயன ஆயுதங்களையும் க்ளஸ்டர் குண்டுகளையும் போராளிகளின் மேலும் பொதுமக்களின் மேலும் வீசி கொன்ற இவர்கள் எதிர்த்து பேச ஆள் இல்லை என்ற தைரரியத்தில் புலிகளின் பயங்கரவாதத்தை நிரூபிக்க போகிறார்களாம்... போராளிகள் இல்லாத ஈழம் இப்போது எப்படி இருக்கிறது? போருக்கு பின் எத்தனை பேர் காணமல் போனார்கள் என்பதை சொல்வார்களா? முகாம்களில் இருந்த புலிகள் எப்படி சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்பதையும் சொல்வார்களா? மாண்டவர்களுடன் புணர்ந்த ராணுவம் அல்லவா உங்களுடையது! இவர்களின் அரசியலுக்கு புலி என்ற சொல் ஓட்டு வாங்க தேவை, அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.. புலிகள் இருந்த போது இரண்டாக பிளவுபட்ட இலங்கை இன்று வல்லரசுகளால் பல கூறுகளாக போகிறது.. "

கருணாவை போல கேபி யா அல்லது கேபி உண்மையான போராளியா என்பது விரைவில் தெரியும் . அது மட்டும் இப்போது புரிகிறது.