தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஈழ சகோதரர்களே சிந்தியுங்கள் !


தற்போது தமிழ்நாட்டு தலைவர்கள் இலங்கை பயணம் பற்றி நெறைய விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து சிந்தியுங்கள் ஈழ சகோதரர்களே . திருமாவையோ , தமிழ்நாட்டு தலைவர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை.இந்த நிலைக்கு காரணம் தமீழக மக்கள்,ஓற்றுமையின்மை,கடைசியில் போரை நிறுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய் விட்டது . உண்மையில் எல்லோரும் போராட வில்லை என்பது அவர்களளுடைய நிர்பந்தம். இதை நான் நியாய படுத்த வில்லை . அரசியல் , பதவி, கூட்டனி, ஊடகங்களின் நிலை , சூழ்ச்சி, தந்திரம் , பழிவாங்கும் எண்ணம் , அண்டை நாடுகளின் சூழ்ச்சி என்று பல காரணங்கள் இருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் . ஆனால் தமிழர்காக(தமிழிழ ஆதரவாளர்கள்)போரடிய தமிழர்கள் பலர் உண்டு என்பதுவும் உண்மை. இறுதியில் ராஜபக்ஷேவின் தந்திரம் தான் ஜெயுத்தது. ஒரு இன அழிப்பை பயங்கரவாதம் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து தன் நோக்கமான "வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களின் எண்ணிக்கையை குறை " என்ற என்னத்தை நிறைவேற்றி கொண்டது தான். இன்றைய ஈழ தமிழர் நிலைமை இன்னும் ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை , வரலாறு. பல சூழ்ச்சியின் தொகுப்பே இது.

இன்றையா நிலைமையில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியாது அடுத்து என்ன எனபது தான்?. மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம் பெயர் வேண்டும். அது ராஜபக்சே நினைத்தால் மட்டுமே முடியும் . ஐ நா (உண்மையில்) நினைத்தால் கூட முடியாது. கன்னி வெடி ... அது இது என்று திசை திருப்பும் வேளையில் தான் ஈடுபடுவது ராஜபக்சே வின் உண்மையான எண்ணம் . மக்கள் தங்கள் இடத்துக்கு இடம் பெயன்றால், அடுத்து தமிழர்கள் உரிமைகள் பற்றி எல்லோரும் கேள்வி ஏலுபபுவார்கள் . இதை தவிர்க்க , விசயத்தை ஆற போட்டு திசை திருப்பவே காரணங்களை சொல்லி வரும் நிலையில், தொங்க வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை. இன்றைய நிர்பந்தம் இது.

எனவே நாம் யாரையும் பகைத்து கொள்ளாமல், என்ன உதவி பெற முடியும் என்பதை மட்டுமே எண்ணுவது சிறந்தது. அரசியால் எனபது சுயநலம் கலந்த ஒன்று . அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் அளப்பது ஓட்டால். நின்றால் எத்தனை ஒட்டு விழும், உக்கார்தால் எத்தனை ஒட்டு விழும் , மருத்துவமனையில் படுத்தால் எத்தனை ஒட்டு விழும் என்பதை மட்டுமே வாழ்வில் சிந்திப்பார்கள். இது ஜுலியஸ் ஸீஸர் காலம் முதல் தெரிந்த உண்மை. எனவே தமிழர்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அதை வெளிபடையாக விமர்சிக்காமல் , அவர்களிடம் இருந்து என்ன உதவி பெற முடியும் , நமது முன்னேற்றதுக்கு எவ்வாறு பயன் படுத்த முடியும் என்பதை மட்டுமே சிந்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

காலம் பதில் சொல்லும் ... தேவை நம்பிக்கை
தமிழ் நாட்டில் இருந்து ஒரு குரல் ...