கண்ணிரே கண்ணிரே தண்ணிரை கொண்டு வா ,
அந்த கண்ணிர் கூட என் பாரதி கண்ட தமிழகத்திற்கு உதவும் ,
தபால்காரனும் எதிர் பார்க்காமல் வருகிறான் ,
ஆனால் நீயோ எதிர்ப்பார்த்தும் வர மறுக்கிறாய் ,
உன்னை நாடி இருக்கும் உயிர்களுக்கும் இறக்கம் உண்டு ,
ஆனால் உனக்கோ சிறிதும் இல்லையே ,
பச்சிலை குழந்தைகளின் மனதில் அறிவை புகட்டும்போது
நீயோ தண்ணீர் தாகத்தை திணித்து விடாதே ,
அணல் அடிக்கும் வேளையிலே ,சுட்டெரிக்கும் அரசியல் குழப்பத்தில்
என் மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பாயா ?
உன்னையே எதிர்ப்பர்க்கும் தமிழர்களில் ஒருவன்