தமிழர் நலன்கள் குறித்து இந்திய பாராளுமன்றத்திலும் பேச்சு..! தமிழக சட்டசபையிலும் பேச்சு…! பிரபாகரன், வேலுப்பிள்ளை திருவேங்கடம் தொடர்ந்து பார்வதி அம்மையார்..இவர்களை வைத்து அரசியல் நடத்தும் கருணா மற்றும் பார்ப்பனிய சோனியா கும்பல்..!
தி.மு.க கருணாநிதிக்கு ஜெயலலிதா என்றால் ஜென்மப்பகை..ஏன் அந்த அம்மையார் இவரின் சொத்துக்களை பறித்து விட்டாரா..? முன்பு எம்.ஜி.ஆர் என்றால் இதே போன்று கருணாநிதிக்கு ஜென்மப்பகை..எம்.ஜி.ஆர் இருக்கும் வரை கருணாநிதி என்றால் மிகப்பெரும் ஊழல் பேர்வழி..அரிசியில் ஊழல் செய்து ஏழைகள் வயிற்றில் அடித்த மாபாதகன்..தமிழக சொத்துக்களை கொள்ளை அடிப்பவர் என்றே தமிழகத்தில் உள்ள அணைத்து மக்களும்
நம்பினார்..அதுதான் உண்மையும் கூட…
இந்த மாதிரி அரசியல் முகம் இருந்ததால் கருணாநிதி இதில் இருந்து தப்பித்துக்கொள்ள தமிழ் அறிஞர் வேடம், இலக்கியவாதி வேடம், பத்திரிக்கையாளர் வேடம், கதை எழுதும் எழுத்தாளர் வேடம் எல்லாம் போடவேண்டிய நிலை ஏற்பட்டது..எம்.ஜி.ஆர் இறக்கும் வரை..!
பிறகு ஜெயலலிதா அம்மையார் வந்தார்..இவரின் அணைத்து வித வேடங்களையும் எள்ளி நகையாடினார்..ஊழலும் கேளிக்கையும் செய்ததால் இந்த அம்மையார் போன பிறகு..மீண்டு வந்த கருணாநிதி பல கோடிக்கணக்கான ரூபாய்களை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்து அடக்கினார்..முன்பு தப்பித்துக்கொள்ள போட்ட வேடங்களை உண்மை என்று தனது தொலைகாட்சி மற்றும் சினிமா உலகில் உள்ள பதர்களிடமும், இவரை விட மோசமாக உள்ள பத்திரிக்கையாளர்களிடம் தான் ஒரு மிகப்பெரும் தமிழ் அறிஞர் என்றும்..தமிழ் காவலர் என்றும்…" கலைஞர் என்றால் கலைஞர் தான்..என்ன பேச்சு….என்ன அறிவு..தமிழில் இவரைவிட்டால் இனி வேறு யாரும் இல்லை என்று.." தனது பிழைப்புவாதிகளிடம் தனது எடுபிடிகளிடம் ஒரு ஐந்து ஆண்டுகாலம் பரப்பி விட்டார்.. !
இந்த மோசடிக் கும்பலும் அவ்வாறே சொல்ல..பிறகு சன் டி.வி தொடங்கி இருக்கும் அணைத்து பத்திரிக்கைகளையும் வாங்கி, அதில் எல்லாம் தமிழ் – தமிழ்நாடு – தமிழர் என்றால் இனி கலைஞர் தான்…
என்று ஒரு பிம்பத்தை..பெயரை..புகழை வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது…இந்த பொம்பளை ஜெயலலிதா மட்டும்..இவ்வளவும் பெரிய பிராடு, என்றும் மிகப்பெரும் மோசடிப் பேர்வழி கருணாநிதி என்றும் முன்பை விட மிகப்பெரும் ஊழல் பேர்வழிதான் இந்த கருணாநிதி என்று தொடர்ந்து கருணாநிதியை அம்பலப்படுத்தி வந்தார்..
போதாதா..இந்த போலி தமிழ் பேசும் கிழவருக்கு..இந்த அம்மையார் மீது ஜென்மப்பகை கொள்வதற்கு..! சாகப்போகும் நேரத்தில் ஒரு பெரும் தலைவர்,தமிழர் தலைவர் என்ற பெயரை தன் முன்னே ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாரே என்று கடும் சினம் கொள்கிறார். இவையெல்லாம் தமிழகத்தில் உள்ள மக்களிடம்…!
புலம் பெயர் தமிழர்கள் மற்றும் உலகில் பரந்து வாழும் தமிழர்கள் கருணாநிதியை தமிழர் தலைவர் தமிழ் காவலர் என்று சும்மா உச்சரிக்க கூட வாய்வரவில்லை..ஏனெனில் உண்மை என்னவென்று தெரியும் அவர்களுக்கு..அவர்கள் என்ன..மண் வெட்டி வரப்பு கட்டவா.. உலக நாடுகளுக்கு சென்றுள்ளனர்..!
இவை ஒருபுறமிக்க இவரின் அருகாமையிலேயே மாவீரன் என்றால் யார்..? தமிழரின் தலைவர் என்றால் யார்..? வீரம் என்றால் என்ன..? தமிழன் தமிழ் மக்களை உலக அரங்கில் தலை நிமிர்த்தி இருக்குமாறு செய்து கொண்டிருக்கும் தேசியத் தலைவர் என்றும்..மாவீரன் என்றும்..உலகத் தமிழர்களின் லட்சிய புருஷன் என்றும் பெயர் வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் நலன் ஒன்று தான் பிரதானம்..மற்றவை ஒன்றுமல்ல என்று உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் பிரபாகரன் வேறு..! உலக தமிழ் இளைஞர்களும் தமிழ் அறிஞர்களும் பெருமிதமும் நெஞ்சார தலைவராகவும் ஏற்றுக்கொண்டு விட்டனர் மேதகு வே.பிரபாகரனை
என்றால் மிகையாகாது..!
இப்பொழுது பொருத்திப் பாருங்கள் கருணாநிதியின் ஜென்மப் பகையாளிகள் ஏன்..? என்று..! முன்பு, சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு சில விரல் விட்டு எண்ணும் தலைவர்கள் தான் இருந்தனர்..
தமிழகத்தில் பெரியார் ஒருவர் மட்டும் என்று கொள்ளலாம்..! அவ்வளவுதான்..பிறகு சில நல்ல அரசியல்வாதிகள் இருந்தனர்..
( உ.ம் ) காமாராஜர், கக்கன் போன்றவர்கள்..பொதுவாழ்வில், குடும்ப வாழ்வில் என்று மக்கள் நலன் அல்லது ஒரு தமிழ் நெறியோடு வாழ்க்கை நடத்துவது என்று..! தன்னுடன் அரசியல் நடத்தும் ஜெயலலிதா தனக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல அக புற வாழ்வில்..அப்படியிருக்க ஜெயலலிதாவையே ஜென்மப் பகையாக கருதும் பொழுது..பிரபாகரனை அதைவிட நூறு மடங்கு தன் பரம் வைரியாக கருதவே முடியும் இயல்பாக..!
தமிழ் நாட்டு கருணாநிதி அப்படியா..? ஜெயலலிதா அப்படியா..? காங்கிரஸ் பெருச்சாளிகளில் யாராவது உள்ளனரா..தமிழ் நெறியோடு வாழ்பவர்கள் என்று..? கருணாநிதிக்கு அதிகாரப்பூர்வமாக மூன்று மனைவிகள்..கணக்கில் வராதவை ஏராளம்..! அக புற வாழ்வில் மோசமான முன் எடுத்துக்காட்டு..இதில் தமிழ் அறிஞர், தமிழ் தலைவர் என்று பெயர் வாங்க வேண்டும்..என்றால் எப்படி..?
அவ்வளவு மோசமானவர்கள் கிடையாது தமிழர்கள்…! தான் கடினமாக உழைத்து ஏராளமான ரூபாய்களை செலவு செய்து வாங்கிய..வாங்கி விடலாம் உலக தமிழ் தலைவர் என்ற கனவை, கெடுத்து குட்டிச்சுவராக்கிய பிரபாகரன் அவரின் பெற்றோர்… அவரை உயிரினும் மேலாக நேசிக்கும் எவரும் கருணாநிதியின் ஜென்மப் பகையாளிகளே..
இதில் இவரை தமிழ் துரோகி, இன துரோகி என்றெல்லாம் இனிமேல் குற்றம் சுமத்த தேவையில்லை..அக புற வாழ்வில் ஒரு சாதாரண அரசியல் பிழைப்புவாதி..தமிழ் பேசும் பிழைப்புவாதி, பெரும் ஊழல்காரர்..தன் நலத்திற்க்காக எதையும் செய்யும் ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்றே கருத வேண்டும்..!
- நன்றி: ஈழதேசம்