தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

திருமாவையும் கனிமொழியையும் மலேசியா அனுப்பி பார்வதி அம்மாளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கட்டும்.

திருமாவையும் கனிமொழியையும் மலேசியா அனுப்பி பார்வதி அம்மாளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கட்டும்.
 
பிரபாகரனின் தாயார்  -சென்னையில் நுழைய அனுமதி இல்லை.நேற்றைக்கு முந்திய நாள் பிரபாகரனின் தாயார் விஜயலட்சுமி என்ற பெண்ணோடு மலேசியா லிருந்து புறப்பட்டு, சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக  வந்தார் , வந்தவரை சென்னையில் நுழைய அனுமதி இல்லை என்று வந்த விமானத்திலே  அவசர அவசரமாக திருப்பி அனுப்பி விட்டனர்.
 
இந்நிலையில் அவரை வரவேற்க சென்றிருந்த வைகோ மற்றும் நெடுமாறன் சொல்லித்தான் , பார்வதி அம்மாள் வந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
 
எப்போதும் ஈழ விவகாரத்தை அரசியல் லாபமாகவே பார்க்க விரும்பும் முதல்வர் கருணாநிதி வைகோவையும் நெடுமாறனையும் குறைசொல்லி இன்று அறிக்கை விட்டுள்ளார்.
 
அதோடு முதல்வர் மற்றும் காவல்துறை அமைச்சரான தமக்கு விடியல்காலை வரை எதுவும் தெரியாது என்ற அண்டபுளுகையும் சொல்லியுள்ளார். 
 
தமிழக அரசிற்கு தெரியாமல் எப்படி  சென்னை வெளி காவல்துறை தலைவர் ஜான்கிட்டே நேரடியாக விமான நிலையம் வந்தார் ? 
 
வைகோ மற்றும் நெடுமாறன் வரும் முன்பே ஏன் காவல்துறையினர் அங்கு இருக்க வேண்டும்? 
 
தவிரவும் இந்த செய்திகளை முதல்வரின் குடும்ப தொலைகாட்சிகளும் பத்திரிக்கைகளும்  கசிய விடாமல் ஏன் பார்த்து கொண்டனர்?
 
ஏன் ஈழ விடயத்தை அரசியல் லாப நோக்கிலே முதல்வர் பார்க்க வேண்டும்?
 
வேண்டுமானால்  திருமாவையும் கனிமொழியையும் மலேசியா அனுப்பி பார்வதி அம்மாளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கட்டும் நாம் திருப்திபடுவோம் .
 
யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு தகவல் கொடுப்பார்கள் , பிரபாகரனின் குடும்பத்தாருக்கு நெடுமாறன் மற்றும் வைகோ மீது நம்பிக்கை அவர்கள் தகவலை கொடுத்திருக்கலாம்.
 
பார்வதி அம்மாளை ஏன் அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு , ஏன் வைகோவும் நெடுமாறனும் விமான நிலையம் சென்றார்கள் எனபது எப்படி பதிலாகும்.
 
தவிரவும்,முதல்வரின் கைதடியாகவே மாறியிருக்கும் திருமா போன்றோர் இன்னமும் ஈழ விடயத்தை அரசியல் நோக்கிற்காக (தி மு க மீது எந்த கோபமும் வரகூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ) பயன்படுத்துவதும் இதில் தெளிவாக தெரிகிறது.
 
ஈழத்தில் கடுமையான போர் நடைபெற்ற பொழுது, மத்திய அரசை கந்திது தி மு க நடத்திய போராடதிர்க்கும் , திருமா மற்றும் வீரமணி போன்றோர் இப்போது அறிவிக்கும் போராட்டத்திற்கும் வித்தியாசம் இல்லை.
 
ஏனென்றால் அவர்கள் இருவரும் போராட்டம் நடத்தித்தான் முதல்வரோடு பேசவேண்டும் என்ற நிலையில் இல்லை.
 
எனவே திருமாவின் போராட்டம் மக்களை ஏமாற்றும் வேலை அல்லது தி மு க வை காப்பாற்றும் வேலை  எனபது மிகத்தெளிவு.
 
இனி செய்தியை பார்ப்போம் :
 
பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயார் என முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் பார்வதி அம்மாள் திருப்ப அனுப்பப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதமே காரணம் என்றும் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த பிரபாபரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 
இதன்மீது பேசிய பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் கூறி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் கருணாநிதி,



மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபற்றி என்னுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு, கடந்த கால வரலாற்றில் சில துளிகளையாவது இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசினுடைய உத்தரவு முதலில் திருமதி பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக விசா பெறலாம் என்று அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, மத்திய அரசினுடைய அதிகாரிகளே சிலர், விமான நிலையத்தில்   விமானத்திற்குள்ளே நுழைந்து “தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது.  ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்'' என்று கூறி எங்கே மலேசியாவிலிருந்து வந்த அவர்களை, மலேசியாவிற்கே திரும்ப அனுப்பியிருக்கிறார்கள்.

      இது பற்றிய  முழுத் தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து நான் தெரிந்து கொள்ள முடிந்தது.  இதேபோல ஒரு சம்பவம்   23 8 1985 அன்று நம்முடைய தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஒரு உத்தரவு தந்தை செல்வா அவர்களுடைய மகன் சந்திரஹாசன், பாலசிங்கம்,  சத்தியேந்திரா ஆகியோரை  நாட்டை விட்டு வெளியேற்ற  ஆணை பிறப்பிக்கப்பட்டது.  அந்த ஆணையும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோளின்படிதான் இடப்பட்டது என்று கூறப்பட்டது.  அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது.  ஆனால், ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் விமானம் ஏறுகிற நிலையில், எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக “டெசோ'' அமைப்பின் சார்பாக   அப்பொழுதுதான் டெசோ தொடங்கப்பட்டது.  நான், வைகோ, நெடுமாறன், தமிழர் தலைவர் வீரமணி, பேராசிரியர் ஆகியோரெல்லாம் இருந்த அமைப்பு டெசோ. 23 ஆம் தேதி முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது.   அந்த "டெசோ" அமைப்பின் சார்பாக                   25 8 1985 அன்று  சென்னையிலே ஒரு கண்டனப் பேரணி நடத்தினோம்.  தொடர்ந்து 30 8 1985 அன்று  ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்தோம். அதனையொட்டி   5000 பேர் அன்றைக்கிருந்த ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள்.    உடனே மத்திய அரசு  சந்திரஹாசன் மீதான உத்தரவைத் திரும்பப் பெற்றது.    அதற்குப் பிறகு தொடர்ந்து 7 10 1985 அன்று பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவையும் திரும்பப் பெற்றது.  

      அந்தக்  காலத்திற்கும், “டெசோ'' அமைப்பின் சார்பாக எல்லோரும் சேர்ந்து போராடியதற்கும்   தனித்து இப்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, இரகசியமாக இந்த விமான நிலைய வரவேற்பை அளித்ததற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்தால்    “அந்தோ தமிழர்களே!'' என்று நம்மை அறியாமல் நாம் சொல்லத்தான் நேரிடுகிறது என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன்.

      திருமதி பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு  வருவது  பற்றி  அவர்களிட மிருந்தோ     அவர்களுக்கு  துணை புரிய விரும்புவர்களிடமிருந்தோ  தமிழக அரசுக்கு  எந்தவிதமான  கடிதமோ     தகவலோ நேரடியாக  வரவே இல்லை.    மத்திய அரசுக்கும்   பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தி  தொடர்பு இருந்திருக்கிறதே தவிர   தமிழக  அரசுக்கு  இதிலே  எந்தவிதமான  சம்மந்தமும் கிடையாது.    இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால்,    5 5 2003 அன்று  தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு  ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.   அந்தக் கடிதத்தில்  பத்தி 2 வருமாறு
 
     “Sri Lankan Tamils  Velu Pillai  and  Parvathi  Ammal  may return to India.   Their  re-entry  into India  may not be  desirable  in view  of their association  with the  LTTE  Leader  and Tamilar Desiya  Iyakkam,  banned organisations.   Hence,  the personal  particulars  of the above  Sri Lankan Tamils  are  sent herewith to place their  names  under  Black List/Prior Approval Category List,  to prevent their  re-entry  into India  through legal/illegal means.”

      இவ்வாறு  கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை  விதிக்க ஏற்பாடு செய்தவர்கள்     எங்கே அந்த உண்மை  இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ    மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்சினையில்  அவர்கள் மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.   அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியிலே இருக்கிறார்கள் –   அது தமிழர் கூட்டணி என்றும் சொல்லப்படுகிறது.   அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சினையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்,  இது முழுக்க  முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தான் உரிய பிரச்சினை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.   நிச்சயமாகச் சொல்கிறேன்.   இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது.   நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன்.   அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது.  
 
      ஆனால் இந்தச் செய்தியை  முறையாக    உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை.   அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை.   அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள்.   அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள்  மலேசியாவிற்கே,  அதாவது  கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள்.    அவர்கள்  அங்கே வைத்திய வசதி பெறுவதாக பத்திரிகைகளிலே செய்தி வந்திருக்கிறது.    அவர்கள்     இல்லை, நான் மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களானால்   நம்முடைய அருமை நண்பர் சுதர்சனம்,            கோ.க. மணி அவர்கள்     சிவபுண்ணியம்   ரவிக்குமார்    மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப் போல    அதைப் பரிசீலனை செய்து  மத்திய அரசுக்கு அது பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே  தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

      மத்திய அரசின் பதிலைப் பற்றி     அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி    அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால் –   அந்த  நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன்.