தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தினம் ஒரு தமிழ் களஞ்சியத்துடன் காலை வணக்கம்


தோழர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...            
 

இன்றைய நாள்:                        திருவள்ளுவர் ஆண்டு 2041 ஆண்டு, சித்திரை 4  , சனிக்கிழமை                                                                                  


இன்றைய குறள்:       
                    
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.



விளக்கம்:          


அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.



அதிகாரம் :
      அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை
 
எண் : 30

Translation:
Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
Explanation:   

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.


இன்று ஒரு செய்தி, 
 


 

தமிழீழ விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam) இலங்கையில் உள்ள, அரசுக்கு எதிரான ஒரு முக்கிய தமிழர் அமைப்பாகும். 1976 இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, இலங்கையின் வட கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில், இலங்கைத் தமிழருக்கு என தனி நாடு அமைக்கக்கோரி செயல்படும் ஒர் அமைப்பு. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 2009 வரை இயங்கினார்.

இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகக தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007 இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைத் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பானமை உறுப்பினர்களையும், தலைவர் பிராபகரனையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009 புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி ஜனநாய வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.


வரலாறு


தோற்றமும் வளர்ச்சியும்


விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தேச் செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தது.

1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது. அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது.சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.


இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்புள் உள்வாங்கப்பட்டன. இதன் மூல யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் என்ககருதியதாக கருதப்படுகிறது.இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள் ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.


1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இழக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர்.

மாவீரர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர்.

நன்றி
பகலவன் குழுமம்.

www.pagalavantamil.blogspot.com