தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சிம் கார்டு இலவசம்: ஆபத்தும் இலவசம்! தூங்கி வழியும் அரசாங்கம்



பத்து ரூபாய்க்கு ஒரு சிம் கார்டு..

பதினைந்து ரூபாய்க்கு இரண்டு சிம் கார்டு! ஒரு சிம் கார்டு வாங்கினால் ஒரு சிம் கார்டு இலவசம்...

ஒரு சிம் கார்டு வாங்கினால், ஐம்பது ரூபாய்க்கு இலவசமாக பேசலாம்...

இந்த அறிவிப்புகளை நீங்கள் பல இடங்களில் கேட்டு, பார்த்திருப்பீர்கள். வாங்கி அனுபவித்திருக்கலாம். ஆனால், இதன் பின்னணியில் அபாயகரமான ஆபத்து காத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்திருப்பார்களா என்றால் இல்லை. ஒரு சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால், இருநூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய காலமும் உண்டு. அதற்கு ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என சில ஆதாரங்களைக் கொடுத்த பிறகு தான் குறிப்பிட்ட எண் செயல்பாட்டிற்கே வரும். அப்படி இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.

பத்து ரூபாய் கொடுத்தால் போதும் சிம் கார்டு வாங்கி, பேசிகிட்டே இருக்கலாம். இன்னும் சில கம்பெனிகளின் அறிவிப்பு தான் தலைசுற்றுகிறது. சிம் கார்டு இலவசம். அதை வாங்கி ஐம்பது ரூபாய்க்கு பேசலாம் என்கிறது. மக்களும் வாங்கி, ஐம்பது ரூபாய்க்கு பேசி, அந்த சிம் கார்டை தூக்கி தூரப் போடுகிறார்கள். அந்த சிம் கார்டு மோசடி பேர்வழி, திருடன், கொலைகாரன் கையில் கிடைத்தால் என்னாவாகும்?

‘‘ஒரு நபர் போட்டோ மற்றும் ஆவணத்தை வைத்து, அவர் எத்தனை சிம் வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த ஆவணங்களை நகல் எடுத்துதான் நூற்றுக்கணக்கான சிம்களை பதுக்கி வைக்கிறார்கள் சில கடைக்காரர்கள்.

இப்படி பதுக்கப்பட்ட சிம் கார்டு தான் இன்றைக்கு யார் யார் கையிலோ உலா வந்து கொண்டிருக்கிறது. புதிய புதிய கம்பெனிகள் வியாபாரத்தில் குதிக்கின்றன. அந்த கம்பெனிகளின் சிம் கார்டுகளை விற்க, வியாபாரிகள் உந்தப்படுகிறார்கள். ஒரு சிம் கார்டு விற்றால் (அதாவது ஆக்டிவேஷன் செய்யப்பட்டால்) அந்த வியாபாரிக்கு 100 ரூபாய் போனஸ் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 25 சிம் கார்டு விற்றால், இரண்டாயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகைக்கு ஆசைப்பட்டு, வியாபாரிகளே, ஏற்கெனவே அடையாள ஆவணங்களை கொடுத்திருக்கும் வாடிக்கையாளரின் பெயரில், சிம் கார்டு விற்றது போல, செய்துவிடுகிறார்கள்.

அந்த சிம் கார்டிலிருந்து முதல் அழைப்பு சென்றிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் உண்டு. அது என்ன பெரிய கஷ்டமா. இப்படியே தினமும் 100 சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்து ‘கொள்ளை’ லாபம் சம்பாதிக்கும் டீலர்களும் உண்டு. அப்படி ஆக்டிவேஷன் செய்யும் கார்டுகளை, யார் யாருக்கோ கொடுக்கும் போது தான், அவை திருடர்களிடமோ, கொள்ளைக்காரர்களிடமோ, நக்சலைட்டு-களிடமோ, தீவிரவாதிகளிடமோ போய் சேர்ந்துவிடுகிறது.

விஷயம் உண்மைதானா என்பதை அறிய சிம் கார்டு விற்பனை செய்யும் வியாபாரியிடம் பேசினோம்.

‘‘நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. இப்ப வந்திருக்கும் சில தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இலவசமாக கொடுக்கும் சிம் கார்டுகள் ரோட்டில் தள்ளு வண்டியில் போட்டு விற்கிறார்கள். ஒரு சிம் கார்டு ஆக்டிவேட் செய்தால், நூறு ரூபாய் வரை கிடைப்பதால் தவறான வழியில் செல்கிறார்கள். ஏர்டெல், ஏர்செல் சிம் கார்டுகளை ஆக்டிவேசன் செய்யும் போது இருபது ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை எங்களுக்கு கிடைக்கும்.

நாங்க வாங்குற ஒரு சிம் கார்டு பேக்,- இருபது ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை இருக்கு. எங்களுக்கு லாபம் அதிகமாக இருக்குறதால போட்டியை சமாளிக்க பத்து ரூபாய்க்கு சிம் கார்டு விற்கிறோம். இந்த அளவுக்கு விலை இறக்கி வித்தாலே எங்களுக்கு ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த வேலையை நாங்க மட்டுமில்ல, டிஸ்ட்ரிபியூட்டர்களும் இப்படி தான் பண்ணுறாங்க. அதிகமான சேல்ஸ் காட்டி உல்லாசமான சுற்றுலா, விலை மதிக்க கூடிய பரிசு என எல்லாவற்றையும் அனுபவித்து சந்தோசமாக இருக்காங்க’’ என்றார் .

சிம் கார்டுகளை தவறாகப் பயன்படுத்துவோருக்கு சட்டம் என்ன சொல்கிறது .

‘‘ஒரு நபருடைய ஆவணங்களை பயன்படுத்தி இன்னொரு நபர் சிம் கார்டு பெற்றுக் கொண்டு அதை பயன்படுத்துவதை முதலில் தடை செய்ய வேண்டும். அடுத்து, ஆவணங்கள் இல்லாமல், சிம் கார்டுகளை விற்பனை செய்யும் கடைகளையும் சம்பந்தப்பட் தனியார் சிம் கார்டு டிஸ்ட்டிரிபியூட்டர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இது போன்ற தவறுகளால் தான் தீவிரவாதிகளின் கையில் சிம் கார்டு போய் விடுகிறது. ‘டிராய்’ தான் இது மாதிரியான பிரச்னைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது’’