தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பள்ளி மேம்பாட்டிற்கு $10ல் ஓர் புரட்சி!

வெளி நாடுகளில் தமிழர்கள் பொது இடத்தில் கூடிப் பேசும் போது தவறாமல் விவாதிக்க படும் விஷயம் தாயகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் பற்றிய பேச்சாக இருந்தாலும் தமிழ்நாட்டின் ஆக்க பூர்வமான வளர்ச்சிக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற விவாதமும் சில சமயங்களில் இருக்கும்.ஆனால் பெரும்பாலான நேரம் அது பேச்சோடே முடிந்து விடும். தாய் நாட்டு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை எப்படி செய்ய முடியும் என்ற மலைப்போடு மறந்து விடுவோம்.

இந்தியாவில் இருக்கும் ஒரு சில சேவை நிறுவனங்களுக்கு பண உதவி செய்ய முடிந்தாலும் அது எந்த அளவு வளர்ச்சிப்பணியை அடையும் என்ற கேள்விக்குறி தான் முன் நிற்கும்.தனியே நாமே எதாவது உருப்படியாக செய்யலாம் என்றால் மிக பெரிய தொகை செலவாகுமே என்ற மலைப்பு ஏற்படும். என்வே இது போன்ற சிந்தனைகள் பேச்சோடு முடிந்து விடும்.

10 வருடங்களுக்கு முன் இதே போன்ற விஷயம் ஒரு குழுவினரிடம் விவாதிக்கபட்டது. ஆனால் அது பேச்சோடு நிற்காமல் ஒரு திட்டமாக தீட்டப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு மிக வேகமாக வளர்ச்சி அடையவும் செய்கிறது.

அது என்ன முயற்சி?...

இந்தியாவில் கல்வி வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும் கிராமப்புற மற்றும் நகர்புற பள்ளிகளில் உள் கட்டமைப்பின்
நிலை மிக மோசமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளுக்கு கட்டிடம் சரியாக இல்லை. உட்கார மேஜை வசதி சரியாக இருக்காது. மேலும் பிற வசதிகளும் ஒழுங்காக இருக்காது.

2000ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் ஏழைப் பள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டு பின் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் விவாதத்தில் வளர்ந்து விதையாக வித்திடப்பட்டது தான் 'TEAM for Educational Activities in Motherland' என்ற அமைப்பு. (http://www.IndiaTEAM.org)

மிகப்பெரிய தொகையை தாயகக் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்குவது என்பது நடைமுறையில் கடினம். எனவே இத்திட்டதின்படி ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறுந்தொகையை, அதாவது $10 ஒவ்வொரு மாதமும் குழுவிடம் செலுத்துவார்கள்.உதாரணமாக 100 பேர் மூன்று மாதம் $10 கொடுத்தால், அது $3000 டாலராக பெருகும். குலுக்கல் முறையில் 6 பேரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு $500 டாலர் பிரித்து கொடுக்கபடும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் இந்தியாவில் உள்ள ஏழைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து $500 டாலருக்குண்டான பள்ளி உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்வார்கள்.பணிகள் செவ்வனே முடிந்த பின், ரசீது மற்றும் புகைப்படங்களை அமைப்பிடம் சமர்பிப்பர். 50 மாதங்களில்
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பள்ளியையாவது மேம்படுத்தி இருப்பார்கள்.

இதை படிக்கும்போது ஒருவர் மாதம் $10 டாலர் கொடுப்பதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்று தோன்றும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்பினர் தாயகக் கல்வி வளர்ச்சிக்காக செய்த மொத்த தொகை அரை மில்லியன் டாலரையும் தாண்டி விட்டது ஆச்சரியமாக இருக்கிறதா?.தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு இவ்வமைப்பினரால் செய்யப்பட்ட உதவிகளைக் காண:

http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=TamilNadu

இந்த அமைப்பின் மூலம் பயனடைந்ததில் தமிழகப் பள்ளிகள் தான் முதலிடம் வகிக்கின்றன. நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமர மேஜை, கட்டிடங்கள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் நிறைவேறியுள்ளன.கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ள பள்ளிகள் விவரம்:

http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=All


இந்த அமைப்பின் உறுப்பினர்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை காண:

http://www.indiateam.org/projects/Pub_Current_PrjList.php

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இந்த அமைப்பு நிறைவேற்றும் பணிகள் யாவும் யாரோ ஒரு தெரியாதவர்கள் மூலம் நடைபெறாமல் இந்த அமைப்பில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்துவது தான்.இந்த அணுகுமுறையே இந்த அமைப்பிற்கும் அதன் செயல்பாட்டிற்குமான வெற்றியை ஈட்டிக்கொடுத்து வருகிறது என்று கூறலாம்.