தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளது.

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளது.
 
இன்றைய தலையங்கத்திற்காக ஜெயலலிதாவின் அறிக்கையை அப்படியே தருகிறேன். இந்த செய்தி இன்று வந்துள்ள நாளேட்டின் வாசகங்கள்.  இவைகளை மேலும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
 
'நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் தி.மு.க., அரசின் செயலைக் கண்டு, அரசு அதிகாரிகள் நிலை குலைந்துள் ளனர் என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:கடந்த 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு டன் நிலக்கரி 54 டாலர் என்ற விலையிலிருந்து திகைக்க வைக்கும் விலையான 120 டாலர் வரை பல்வேறு விலைகளில் 680.43 லட்சம் டன் நிலக்கரியை (சராசரியாக ஆண்டிற்கு 13 மில்லியன் டன் நிலக்கரி) மின் வாரியம் இறக்குமதி செய்திருக்கிறது.குறைந்தபட்ச விலையான ஒரு டன் நிலக்கரி 54 டாலர் என்று எடுத்துக் கொண்டாலே, ஒவ்வொரு ஆண்டிற்கும் இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பு 3,000 கோடி ரூபாயை தாண்டி விடும். நிலைமை இவ்வாறிருக்க, 520 கோடி, ஆயிரம் கோடி என்று பேசுகிறார் கருணாநிதி. தற்போது, 2010ம் ஆண்டில் ஒரு டன் நிலக்கரி 120.5 டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது.


இதை, கருணாநிதியால் மறுக்க முடியுமா? ஒரு டன் நிலக்கரி 120.5 டாலர் என்றால் 130 லட்சம் டன் நிலக்கரியின் விலை என்ன? ஒரு டன் நிலக்கரி 120.5 டாலர் என்ற விலை கொடுத்து மின் வாரியம் வாங்கியிருக்கிறது. இந்த உண்மைகளை கருணாநிதியால் மறுக்க முடியுமா?ஒரே வெப்பத்திறன் கொண்ட ஒரு டன் நிலக்கரி 77 டாலருக்கு கிடைக்கும் போது, அதை 120.5 டாலர் விலை கொடுத்து வாங்குவது என்பது மின்வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல் என்று நான் கூறியதை கேலி செய்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டின் அடிப்படையை தகர்க்க முயற்சி செய்திருக்கிறார் கருணாநிதி. அவரது செயல்பாட்டை கண்டு அரசு அதிகாரிகள் நிலைகுலைந்துள்ளனர் .