தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காதலியை கரம் பிடிக்க கள்ளத்தனம் செய்து மாட்டி கொண்ட சசி தரூரின் லீலைகள்

சசி தரூர் தம்மை பொறுப்புள்ள அமைச்சராக எப்போதும் நினைத்த மாதிரி தெரியவில்லை. இதற்கு முன்னரும் பல நேரங்களில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சசிதரூர் தனது காதலி சுனந்தாவுக்கு கொச்சி அணியின் ரூ. 70 கோடி பங்குகளை வாங்கி கொடுத்த விவகாரம் எளிதாக வெடித்ததுமே மத்திய அரசு உஷார் அடைந் தது. இது தொடர்பாக விசாரிக்க தொடங்கியது. மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தனது துறை மூலம் விசாரணை களை நடத்தினார். இதற்காகத்தான் ஐ.பி.எல். அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தினார்கள். லலித்மோடியிடமும் விசாரணை நடந்தது. இதன் மூலம் சுனந்தாவுக்கு கொச்சி அணி பங்கு எப்படி கை மாறியது? சசி தரூர் எந்த வகையில் சம்பந்தப்பட்டார் என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொண்டனர்.


அதே நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய உளவுத்துறையான ஐ.பி.க்கு இதன் முழு விவரங்களையும் சேகரித்து தரும்படி உத்தர விட்டார். அதில் சசிதரூர் எந்த வகையில் எல்லாம் தனது மத்திய மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்? சுனந்தா சசிதரூரின் பினாமியா? இதில் ஊழல் நடந்து இருக்கிறதா? போன்றவற்றை விசாரிக்கும்படி பிரதமர் கூறி இருந்தார்.


அதன்படி ஐ.பி. விசாரணையை தொடங்கியது. மற்றொரு உளவுத்துறையான “ரா”வும் இது தொடர்பாக விசாரித்தது. கொச்சி அணியை ஏலம் எடுத்த “ரென்டஸ்வஸ்” நிறுவனத்துக்கு ஏலத் தொகையில் பெரும் பகுதி பணம் துபாயில் இருந்து வந்துள்ளது. அந்த பணம் யார் மூலம் வந்தது? இதற்கும் சசிதரூருக்கும் சம்பந்தம் உண்டா? கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் முயற்சியில் இந்த முதலீடு செய்யப்பட்டதா, என்று விசாரித்தனர்.


சுனந்தாவுக்கு ரூ. 70 கோடி பங்குகள் இலவசமாக கொடுக்கப்பட காரணம் என்ன? இதற்கும் துபாயில் இருந்து வந்த பணத்துக்கும் சம்பந்தம் உண்டா? என்றும் விசாரித்தனர். அதில் சசிதரூர் முழுக்க, முழுக்க சம்பந்தப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். ஊழல் நடந்து இருப்பதும் தெரிந்தது. இதில் சசிதரூர் தனது மத்திய மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் எந்தெந்த வகையில் எல்லாம் தவறு செய்து இருக்கிறார் என்ற முழு விவரத்தையும் சேகரித்தனர்.


பின்னர் இது தொடர்பாக “ஐ.பி.யும், “ராவும் சேர்ந்து ஒரு அறிக்கை தயாரித்தனர். அதில் சசிதரூர் செய்த தவறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு இருந்தனர். 6 பக்கம் கொண்ட இந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் அடைத்து பிரதமரிடம் கொடுத்தனர். அதை பிரதமர் நேற்று காலையிலேயே படித்து பார்த்தார். அதன் பின்னர் சசிதரூரை தனது வீட்டுக்கு அழைத்து விசாரித்தார்.


உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அனைத்து விவரங்கள் குறித்து சசிதரூரிடம் அவர் விளக்கம் கேட்டார். ஆனால் சசிதரூரால் அதற்கு சரியான விளக்கங்களை கொடுக்க முடியவில்லை. ஏன் என்றால் உளவுத்துறை அறிக்கையில் அத்தனை விவரங்களும் துல்லியமாக சேகரித்து கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே சசிதரூரால் எதையுமே மறைக்க முடிய வில்லை.


அவர் மீது குற்றம் இருப்பது நிரூபணம் ஆனதால் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடும்படி அப்போதைய பிரதமர் கூறி விட்டார்.
ஆனாலும் மாலையில் நடந்த காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் இதுபற்றி விவா தித்து இறுதி முடிவு எடுத்தனர். அதில் எடுத்த முடிவு படி சசிதரூர் ராஜினாமா செய்தார்.


சசிதரூர் ஆரம்பத்தில் எனது மாநில (கேரளா) நலனுக்காகவே தலையிட்டேன் என்று கூறி வந்தார். ஆனால் உளவுத்துறை அறிக்கையில் அவர் தனது காதலிக்காக இதில் தலையிட்டதும், பல தவறுகள் செய்ததும் உறுதிப் படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சசிதரூர் தப் பிக்க முடியாமல் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.