தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காஸ் மற்றும் மண் எண்ணெய் விலை மீண்டும் உயருமா ?

காஸ் மற்றும் மண் எண்ணெய் விலை மீண்டும் உயருமா?

ஏறிய விலை வாசிகள் இன்னும் இறங்கவில்லை பதுக்கல் காரர்கள் இன்னும் சந்தோசத்தில் தான் உள்ளார்கள்.


நாற்பது ரூபாய் விற்ற துவரம் பருப்பு இப்போது எண்பது ரூபாய். இருபது ரூபாய்க்கு ஒரு வருடம் முன்னர் விற்ற சர்க்கரை இப்போது நாற்பதிற்கு பக்கத்தில். இது போலவே எண்ணெய் முதலான பண்டங்களும். மிக பெரும் மகசூல் இருந்தாலும் அதன் பலனை விவசாயிகளோ அல்லது பயனாலிகளோ அதனால் பலன் பெறவில்லை, மாறாக பதுக்கல் காரர்கள் தாம் பயன் பெற்றுள்ளனர்.


நிலைமை இப்படி இருக்க, மீண்டும் காஸ் மற்றும் மண் எண்ணெய்யில் விலை ஏற்றம் என்றால்? தாங்காது நடுத்தர மற்றும் கீழ்தர வர்க்கம். மேலும் இன்று வந்துள்ள ஒரு செய்தியையும் எனது தலையங்கத்திற்கு மேற்கோள் காட்டி எழுத விரும்புகிறேன். அந்த செய்தி:


சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் விளைந்த நெல்லை வியாபாரிகள் சென்ற ஆண்டை விட குறைவான விலைக்கு கொள்முதல் செய்யும் கொடுமை நிலவுகிறது. வியாபாரிகள, நெல் புரோக்கர்கள் ஒன்று கூடி பேசி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குகின்றனர்.


சென்ற ஆண்டு 60 கிலோ பிபிடி நெல் ஆரம்ப விலையாக ரூ.850-க்கு விற்கப்பட்டது. பின்னர் ரூ. 1200 வரை விற்பனையானது. இந்த ஆண்டு ஆரம்ப விலையே ரூ.730 அல்லது ரூ.740-க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.1500 என அறிவித்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.


தமிழக அரசு தற்போது குவிண்டாலுக்கு ரூ.1050 என விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலை தற்போதைய வேளாண் செலவுக்கு கட்டுபடியாகாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காலம் தாழ்ந்த காவிரி நீர்வரத்து, தாறுமாறான மின்வெட்டு, ஊகிக்க முடியாத உழவுத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பருவம் தவறிய மழைப் பொழிவு, நுகர் பொருள்களின் விலையேற்றம் ஆகிய அனைத்து முனைகளிலும் நெருக்குதல்களை சந்தித்து விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கும் அடிமாட்டு விலை வழங்கப்படுவது விவசாயிகளின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.


விவசாயிகள் விளைவித்த நெல்லின் விலை இவ்வளவு கீழாக அழுத்தப்படும் போதுதான் வெளிச்சந்தையில் அரிசியின் விலை கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளை பயன்படுத்தும் பிற நுகர்வுப் பொருள்களின் விலை இந்த ஓராண்டில் மட்டும் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.


தற்போது நெல் விலை வீழ்ச்சியால் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் லாபம் கிடையாது, அரிசி வாங்கும் நுகர்வோர்களுக்கும் லாபம் கிடையாது. வியாபாரிகள்தான் லாபம் அடைக்கிறார்கள்.


இவ்வாறு நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகளையும், வேளாண்மையையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ?


நன்றி

தின இதழ்