தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்திய நிதிநிலை அறிக்கை 2010 - கேள்வி கேக்காதே வாயை பொத்து



என்ன தான் பட்ஜெட் போட்டாலும் ஏழை மக்களோட வயத்துல அடிக்க இந்த பட்ஜெட் ரொம்ப உதவும். இன்னும் நாலு வருசத்துக்கு மக்கள் நிலைமை தான் பாவம்.கொள்ளை அடிக்கும் பணக்காரனுக்கு வரி சலுகை பணக்காரர்கள் அப்படியே தான் இருக்காங்க. இதுல கூச்ச படாம இதை பட்ஜெட்னு வெளியில் வேறே சொல்லிட்டு திரிகிறார்கள்.

இப்படி ஐந்து லட்சம் எட்டு லட்சம் வாங்குறவன் எல்லாம் இருபது முப்பது சதவிகதம் என்று வரி கட்டனும். கோடியில் கொள்ளை அடிக்கறவன் எல்லாத்தையும் அமுக்கிட்டு போயிடுவான். நாங்க கட்டுற வரிக்கு ஒழுங்கான குடிநீர், சாலை, மருத்துவம், கல்வி, போக்குவரத்து வசதிகள் எங்களுக்கு செய்து தரப்படுகிறா என்றால், இல்லை. இன்னும் அதே பிரிட்டிஷ் காலத்து பாலங்கள், ரயில்கள், அரசு கட்டிடங்கள் தான் இருக்கின்றது. இவ்வளவு பட்ஜெட் போட்டு பாமர ஜனங்கள் எதனை கண்டார்கள்.

பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் விலையை அரசு குறைக்கும் போது மட்டும் அதே விலையில் பெட்ரோலை விற்பார்கள்.கேட்டால் உத்தரவு இன்னும் வரலன்னு சொல்லுவார்கள் .அதே அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் என்றால் அடுத்த நொடியில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பேங்க்ல் சர்ரென்று விலை உயரும்,அப்பொழுது மட்டும் எப்படி உத்தரவு வருது.

விலைவாசி உயர்வை பார்க்கும் போது காங்கரஸ் அரசின் இயலாமையை காட்டுகிறது.வெகுஜன மற்றும் தேசவிரோதச் செயல்களைப் புரிவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் அழுத்தம், திருத்தமாக நிரூபித்துள்ளது.

விலைவாசியை குறைப்பதற்கு வழி காண்பதற்கு பதில், அது மேலும் உயர்வதற்கான அனைத்து வழிவகைகளையும் இந்த நிதி-நிலை அறிக்கை செய்துள்ளது. எரிபொருளுக்கு அதிக வரி, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை மறுப்பு என்று மக்களை மரணவாயிலுக்கே அழைத்துச் சென்றுவிட்டது காங்கிரஸ் பட்ஜெட். இந்த விளங்காத பட்ஜெட்டுக்கு, இனிமுதல் காங்கிரஸ் அறிவுஜீவிகள் விளக்கம் தரத் தொடங்குவதே பாக்கி.

அத்திவசிய உணவு பொருள்கள் மீதான ஆன்லைன் பேர வர்த்தக தடை பற்றி யாரும் விவதிகாதது, யாரும் கவலை படாதது ஏமாற்றம்.
பிரதமர் இது பற்றி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் பாமர மக்களை பற்றி சிந்திக்கவேண்டும். பதுக்கல்காரர்களை தண்டிக்கவேண்டும் உணவு தானியம் போதுமான அளவுக்கு இருந்தும் விலைவாசி உயர்வுக்கு காரணமான பதுக்கலையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் ஒழிக்கவேண்டும்

பணக்காரங்க கிட்ட உங்க பருப்பு ஒன்னும் வேவாது. கருப்பு பணம் வெச்சி இருக்குறவங்க கிட்ட போய் உங்க வேலைய காட்டவேண்டியதுதானே. எதுக்கு மிடில் கிளாஸ் கிட்ட உங்க வீரத்த காட்றீங்க.

சுவிஸ் பாங்கில் கருப்பு பணம் போட்டவன் எல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள். இந்த பண முதலைகளுக்கு ஆப்பு வைக்க உங்க பட்ஜெட்டில் ஏதாவது வழி வகை உண்டா? யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏழையை காப்பாத்த மாட்டாங்க. இது சத்தியம்.

புத்திசாலிதனம் என்று நினைத்து ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கி அழகு பார்க்கிறார் தமிழகத்தின் பாச தலைவர்.விவசாயம் பார்க்க வேலை ஆள் கிடைக்கவில்லை, இதை பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு விவசாயத்திற்கு என்று ஒரு மண்ணையும் அறிவிக்கவில்லை.தமிழகத்தில் விவசாயம் குறைய யார் காரணம்?

யாரும் ஒரு ரூபா அரிசி பயன் படுத்துறது இல்ல என்பது நிச்சயம் ஆனால் ரோட்டோர கடைகள் மற்றும் ஓட்டல்கலில் பயன்படுத்தி முப்பது நாற்பது ரூபாய் மக்களிடம் வசூலிக்கிறார்கள்.

நெசவுத்தொழிலை ஒரு காலத்தில் வீட்டில் இருந்தே வெற்றிகரமாக செய்து வந்த கூட்டுறவு சிறு முதலாளிகளாக இருந்த உழைப்பாளிகளை கஞ்சி தொட்டிக்கு கையேந்த விட்டு இன்று அவர்களின் சுய நெசவுத் தொழில்களை முடக்கி பெரு முதலாளிகளின் தொழிற்சாலைக்கு கூலி ஆட்களாக செல்லுமாறு மாற்றிய பெருமை இவர்களின் பட்ஜெட்டையே சேரும்


என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் பத்து ஆண்டுகளில் விவசாயம் என்பது கனவில் தான் நடக்க போகிறது.விவசாயம் என்றிருந்த நாட்டை சரியான வழி நடத்துதல் இல்லாமல் நாம் நமது உணவுக்காக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.இன்னொரு பசுமை புரட்சியை ஏன் இன்னும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியவில்லை.நதி நீர் இணைப்பை செயல்படுத்த ஏன் இன்னும் இந்த புண்ணியவான்களுக்கு புத்தி வரவில்லை.தமிழகத்துக்கு பாலாற்றையும் முல்லைப்பெரியாறையும் முறையாக பெற்று தந்தாலே பல மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும். சோனியா மோசடி கும்பல் நமக்கு பட்டை நாமம் போடாமல் விட மாட்டார்கள்.


மறுபடியும் விலைவாசி அதிகரிக்க இந்த பட்ஜெட் ரொம்ப உதவும். இன்னும் நாலு வருசத்துக்கு மக்கள் நிலைமை தான் பாவம்.ஒன்று மட்டும் உண்மை நீங்கள் கூட்டம் கூட்டி நாட்டுக்கு என்ற பெயரில் உங்கள் குடும்பத்துக்காக போடும் பட்ஜெட்டினால் நாட்டில் கோடான கோடி குடும்பங்களின் பட்ஜெட் அடகு கடை நோக்கியே பயணிக்கிறது.


பகலவன்