நமது நாட்டின் பழங்குடியின மக்களுக்கு கல்வி புகட்டி, அவர்களின் கற்றோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளிக் கல்வியைக்கூடத் தொடராமல் பாதியிலேயே நின்றுவிடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வரும் நிதியாண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 8 விழுக்காடு மட்டுமே உள்ள பழங்குடியின மக்கள், இந்தியா முழுவதும் பெரும் அளவிற்கு பரவி வாழ்ந்துவரும் 187 மாவட்டங்களில்தான், நமது நாட்டின் வனச் செல்வத்தில் 68 விழுக்காடு உள்ளது. இந்த வனப் பகுதிகளில்தான் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, கனிம வளங்களும் ஏராளமாக உள்ளன.
நமது நாடு விடுதலைப் பெற்று 62 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்தான், பழங்குடியினரின் நலன், அவர்களின் கல்வியறிவு, அவர்களுக்கு கல்வி வசதியை ஏற்படுத்தித்தருதல் ஆகியவற்றில் சமீப காலமாக்கத்தான் மத்திய அரசு மிகுந்த சிரத்தையுடன் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த விசேட சிரத்தையின் ஒரு அங்கமாகத்தான், பழங்குடியின பிள்ளைகள் கற்கும் வாய்ப்பை அதிகரிக்க, அவர்கள் தங்கிப் படிக்க வசதியாக மாணவர் விடுதிகளை கட்டித்தர 2010-11 நிதியாண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்று பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் காந்தி லால் பூரியா கூறியுள்ளார்.
ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் நடந்த ‘நாமும் நமது பழங்குடியினரும்: பண்பாட்டுப் பாதுகாப்பும் சிந்தனைப் பகிர்வும்’ என்றத் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் காந்தி லால் பூரியா வெளியிட்டுள்ளார்.
வனப் பகுதிகளில் ஒடுக்கப்படும் பழங்குடியினர்!
வனப் பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்துவரும் பகுதிகளிலேயே கல்விக் கூடங்கள் திறப்பதும், அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு நீண்ட தொலைவில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி செய்துத் தரும் திட்டத்திற்காகவே ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் காந்தி லால் பூரியா கூறியுள்ளார்.
மேலெழுந்தவாரியாக இந்த அறிவிப்பை படிக்கும் எவரும் இதனை வரவேற்பர். ஆனால், மத்திய அரசுக்கு - இத்தனையாண்டுக் காலம் கடந்த பிறகு - பழங்குடியினர் கல்வி மீது திடீர் அக்கறை பிறந்துள்ளதேன் என்ற கேள்விக்கும் நாம் பதில் தேடியாக வேண்டு்ம்.
இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட ஒரிசா மாநிலத்தில்தான் மிக அதிக அளவிற்கு வனப் பகுதியும், பழங்குடியினர் மக்கள் தொகையும் உள்ளது. அம்மாநில மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் 30 விழுக்காடுகளுக்கு மேல் உள்ளனர். இது திடீரென்று பெருகிய மக்கள் தொகையல்ல, ஆண்டாண்டுக் காலமாக இருந்துவரும் நிலைதான். ஆனால் இதுநாள் வரை அவர்களின் கல்வி மேம்பாடு குறித்து மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியேதும் ஒதுக்காத மத்திய அரசிற்கு இப்போது கரிசனம் பிறந்திருப்பதற்கு என்ன காரணம்?
ஒரிசா மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களிலெல்லாம் பழங்குடியினர் அதிகம் வாழ்ந்துவருகின்றனரோ அந்த பகுதிகளில்தான் இரும்புத் தாது உள்ளிட்ட கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த கனிம வளத்தை - மிகக் குறைந்த விலை கொடுத்து - கைபற்ற திட்டமிட்டு வந்த தனியார் நிறுவனங்களை அப்பகுதியில் வாழும் பழங்குடியினர் எதிர்த்து வருகின்றனர்.

ஒரிசா மாநிலத்தில் 35 இடங்களில் ஏராளமான இரும்புக் கனிம வளம் உள்ளது. இதனைக் குறிவைத்து அங்கே தனது சுரங்கத்தையும், ஆலையையும் அமைக்க வந்த தென் கொரிய நிறுவனமான பாஸ்கோவை இப்பகுதி பழங்குடியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ரூ.40,000 கோடி முதலீடு செய்து தனது தொழிற்சாலை நிறுவ முன்வந்தது பாஸ்கோ. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினருக்கு இந்த ஆலையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் பழங்குடியினர் அதற்கு செவிசாய்க்காமல், பாஸ்கோ நிறுவனத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.
சட்டீஸ்காரில் ஒடுக்கப்படும் பழங்குடியினர்
இதே நிலைதான் சட்டீஸ்கார் மாநிலத்திலும் நிலவுகிறது. அம்மாநிலத்திலுள்ள தாண்டிவாடா மாவட்டத்தின் வனங்களில் இரும்பு, வைரம், பாக்சைட் போன்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளன. இங்கு சுரங்கம் தோண்டி, அச்செல்வங்களை - மிக்க் குறைந்த விலைக் கொடுத்து - கபளீகரம் செய்யவந்த டாடா, வேதாந்த நிறுவனங்களை அங்கு வாழ்ந்துவரும் பழங்குடியினர் எதிர்த்தனர்.
சட்டீஸ்கார் மாநில (பா.ஜ.க.) அரசுடன் டாடா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட 2005ஆம் ஆண்டுமுதல் இங்கு பெரும் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
சல்வா ஜூடும் என்ற தனியார் அடியாள் படை உருவாக்கப்பட்டு பழங்குடியினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். ஆயினும் தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த இடத்திலுள்ள வனங்களைக் கைப்பற்ற தங்களை அங்கிருந்து விரட்ட திட்டமிடப்பட்ட சதியை நன்குணர்ந்த பழங்குடியினர், அவர்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இவர்களோடு மாவோயிஸ்ட்டுகளும் போராட்டத்தில் குதித்ததால், இது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி மத்திய, மாநில அரசுகள் பழங்குடியினருக்கு எதிராகவே போர் நடத்திக் கொண்டிருக்கின்றன.
தாண்டிவாடாவில் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் கொல்லப்படும் அனைவரையும் மாவோயிஸ்ட்டுகள் என்றே அரசுகள் கூறிவருகின்றன. ஆனால், அங்கு கொல்லப்படுபவர்கள் மாவோயிஸ்ட்டுகளா அல்லது அப்பாவி பழங்குடியினரா என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஊடகங்களுக்கு அளிக்கப்படவில்லை. அங்கு செல்லும் மனித உரிமை ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், காவல் துறையினரால் விரட்டி அடிக்கப்படுகின்றனர்.
இந்தக் கூட்டு நடவடிக்கையைதான் ஜார்க்கண்ட், ஒரிசா, பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் மேற்கொள்ள இம்மாநில முதலமைச்சர்களைக் கூட்டி கொல்கட்டாவில் ஆலோசனை நடத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் சிதம்பரம். பழங்குடியினர் வாழ்ந்துவரும் பகுதியில் அரசின் நிர்வாகத்தை நிலைநிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறுகிறார்.
அப்படியானால், இப்போது அங்கு அரசு நிர்வாகம் இல்லையென்பது புலனாகிறது. எத்தனையாண்டுக் காலமாக மாவோயிஸ்ட்டுகளின் (நக்சலைட்டுகளின்) ஆதிக்கம் இப்பகுதியில் நிலவி வருகிறது? இந்தியா விடுதலைப் பெற்ற காலம் தொட்டே இந்த நிலை உள்ளதா என்ன? உண்மை என்னவெனில் பழங்குடியினர் வாழும் இந்த வனப்பகுதிகளில் அரசு நிர்வாகமோ அல்லது வளர்ச்சித் திட்டங்களோ என்றைக்கும் எட்டிப்பார்த்ததில்லை.

“பல நூற்றாண்டுகளாக வனங்களில் வசித்துவரும் பட்டியல் பழங்குடியினரும், மற்ற மக்களின் உரிமைகளும், வனங்களை அழியாமல் கட்டிக்காத்ததில் அவர்களின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் உரிமைகளை நிலைப்படுத்தவும், வனத்தையும், உயிரியல் பரவலையும், சூற்றுச் சூழல் சம நிலையை காத்திடவும், மதிப்புடைய நமது வனச் செல்வங்களைக் காத்திடவுமான பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க இச்சட்டம் வழி செய்கிறது”
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி டெல்லியில் மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை ஏற்பாடு செய்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு பேசியுள்ளார். அவர்களின் மேம்பாட்டிற்காக, அவர்களையும் வளர்ச்சித் திட்டத்தில் அங்கமாக்க உருவாக்கப்பட்டுள்ள 2006ஆம் ஆண்டு பழங்குடியினர் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அந்த மாநாட்டில் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நமது நாட்டின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே! டெல்லியில் பேசப்படும் - அதுவும் அரசு ஏற்பாடு செய்யும் மாநாட்டில் பேசப்படுவது எதுவும் நாட்டில் நிறைவேற்றப்படுவதில்லை. பழங்குடியினரை காப்பாற்ற வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் பிரதமர் பேசிய அதே நேரத்தில் சட்டீஸ்கரில், லால்கரில் ‘மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை’ என்று பெயரில் பழங்குடியினர் ஒடுக்கப்பட்டனர். அது இன்றளவும் தொடர்கிறது.
சட்டீஸ்கரின் தாண்டிவாடா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையினால் 644 கிராமங்களில் வாழ்ந்து வந்த நான்கரை இலட்சம் பழங்குடியினர் அங்கிருந்து வெளியேறி, அண்டை மாநிலங்களிலும், அடர்ந்த காடுகளிலும் தஞ்சமடைதுள்ளனர் என்று அவர்களிடையே 17 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றிவரும் ஹிமான்சு குமார் என்ற காந்தியவாதி கூறினார். ஆனால் அவருடைய குரல் காந்தியின் பேரால் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் காதுகளை எட்டவில்லை1
அந்த மக்களை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு, அதேபோல மேலும் பல பகுதிகளில் அவர்களின் வாழ்வுரிமையையே கேள்விக்குறியாக்கிவிட்டு, அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவோம் என்று கூறுவது எவ்வளவு பெரிய ஏமாற்று!
இங்கு தமிழ்நாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். வால்பாறை மலைப் பகுதியில் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் பழங்குடியினரை வனங்களில் இருந்து வெளியேறுமாறு ‘வேண்டுகோள்’ விடுத்துள்ளார் தமிழக தலைமை வனக் காப்பாளர். அவ்வாறு வெளியேறுபவர்களுக்கு குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அவர்களைக் காட்டிலிருந்து வெளியேற்றுவது எதற்காக? புலிகளைக் காப்பாற்ற! “மனிதர்கள் எங்கு வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் புலிகள் காட்டை விட்டால் எங்கு சென்று வாழ முடியும்?” என்று ஜீவ காருண்யத்துடன் விளக்கமளிக்கிறார் தலைமை வனக் காப்பாளர்.
வளத்திற்காக வெளியேற்றப்படுகின்றனர், விலங்குகளைக் காப்பாற்ற வேண்டு்ம் என்று கூறி வெளியேற்றுகின்றனர். அதன் பிறகு பழங்குடியினருக்கு என்று பள்ளியை எங்கே போய் கட்டுவார்கள்?
மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிக்க நிதி நிலை அறிக்கையில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு என்ற அறிவிப்பைப் போன்றதே இந்த அறிவிப்பும்! நிதி நிலை அறிக்கையில் இடம் பெறும் இந்தத் திட்ட அறிவிப்புகள் எங்கே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அரசும் சொல்லப் போவதில்லை, நம்மாலும் அறிந்துகொள்ள முடியாது!
இதனால்தான் இந்தியாவை ஒரு திறந்த, வெளிப்படையான ஜனநாயகம் என்று கூறுகிறார்கள் போலும். ஏனென்றால் உள்ளே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாதல்லவா?
வாழ்க ஜனநாயகம்! பாவம் பழங்குடியினர்!