தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தனி மாநிலத்துக்காக எந்த தியாகத்துக்கும் தயார்: சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலம் அமைய எந்த தியாகத்துக்கும் அதன் ஆதரவாளர்கள் தயாராக உள்ளதாக தெலங்கானா ராஷ்ட்ர சமீதி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.​ தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆராய நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.​ ​​ இந்நிலையில் தெலங்கானா விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த தனி மாநில ஆதரவாளர்கள்,​​ ஹைதராபாதில் உள்ள கேசவ ராவ் எம்.பி.,​​ வீட்டில் புதன்கிழமை மாலை கூடினர்.​ இக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.​ கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ் கூறியது:​ தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அளித்த ​ உறுதிமொழியை நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி,​​ கவனிக்க தவறினால் தனி மாநிலத்துக்காக எவ்வித தியாகத்தை செய்யவும் தயாராக உள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் உறுதி தெரிவித்தனர்.​ இந்த கமிட்டி தனது பதவிக்காலத்துக்குள் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.​ காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.வான தாமோதர் ரெட்டி,​​ தனி தெலங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்றார்.​ பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:​ வரும் 15-ம் தேதி மாநில சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுகிறது.​ அதற்கு முன்னதாக இவ் விவகாரத்தில் சரியான முடிவை அறிவிக்கவேண்டும்.​ இல்லையேல் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிக்க முடிவு செய்யப்படும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளதை அவர் அப்போது குறிப்பிட்டார்.