தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மலிவான விளம்பரம் தேடும் அற்ப மனிதர்கள்!

  கடந்த இரு தினங்களாக திரையுலகிலும் அதற்கு வெளியிலும் நிகழும் சில சம்பவங்கள், விளம்பரத்துக்காக எந்த அளவுக்கென்றாலும் கீழிறங்கிப் போக சிலர் தயங்குவதில்லை என்பதையே காட்டுகிறது.
முதல்வர் கருணாநிதிக்கு சினிமாக்காரர்கள் எடுத்த பாராட்டு விழாவில் அஜீத் யதார்த்தமாகப் பேசியதையும் அதற்கு ரஜினி இயல்பாக தெரிவித்த பாராட்டையும் முடிந்தவரை அரசியலாக்கப் பார்க்கின்றனர் விசி குகநாதன் போன்ற சில திரைத்துறைப் பிரமுகர்களும் ஜாகுவார் தங்கம் போன்ற சில்லறைகளும்.

இதற்கு தோதாக திரித்து எழுதுவதில் டாக்டரேட் வாங்கிய சிலர், இந்த திரிகொளுத்திகள் என்ன சொன்னாலும் அதை பெரிய செய்தியாக்கி தீமூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

புரட்சி தமிழ் இயக்குநர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு மனம் போன போக்கில் படங்கள் எடுத்து பின் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் விசி குகநாதன். ஃபெப்ஸி தலைவர் ஆன பிறகு இவர் திரையுலகின் சூப்பர் நாட்டாமையாக தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறார்.
பொது இடத்தில் என்ன பேச வேண்டும், ஒரு பெண் கலைஞரை எப்படி மதிக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத இந்த மனிதர், இப்போது நடிகர்கள் – நடிகைகள் அனைவரும் தனக்குக் கீழ்படிந்து, தனது ஆணைக்கேற்ப நடக்க வேண்டும் என்று மேடைதோறும் சத்தம் போடுகிறார்.

நேற்றைய விழா ஒன்றில், ‘எப்பேர்பட்ட நடிகராக இருந்தாலும் நாங்கள் அழைத்தால் வந்தே தீர வேண்டும். ஒரு தலைவன் பேச்சைக் கேட்கும் தொண்டனைப் போல, நடிகர்கள் யாராக இருந்தாலும் எங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு வரவேண்டும் என்று கூறுவதை மிரட்டல் என்பதா?
அமைப்புக்கு கட்டுப்படாதவர்களை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். பணிவாக கேட்போம், பண்பாக கேட்போம், மிரட்டவும் செய்வோம். என்ன செய்வீங்க? பேச்சை மீறி நடக்கும் நடிகர் நடிகைகளை இருக்குமிடம் தெரியாமல் செய்யவும் எங்களுக்கு தெரியும்’ என்று ரஜினி மற்றும் அஜீத்தை கடுமையாக, ஆனால் மறைமுகமாக சாடியுள்ளார்.


ஆந்திராவில் போய் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டுவிட்டு, ஹீரோக்கள் மடியில் உட்கார்ந்து கூத்தடிக்கிறார்கள் தமிழ் நடிகைகள் என கமெண்டும் அடித்துள்ளார் இந்த வார குமுதத்தில் (இப்போது நடிகைகளின் கற்புக்கு பங்கம் எதுவும் நேரவில்லை போலிருக்கிறது!).
எந்த தைரியத்தில் இவர் இந்த அளவு சர்வாதிகாரம் காட்டுகிறார்? ஃபெப்ஸி என்பது ஒரு சாதாரண சினிமா சங்கம்தானே… மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கிற அரசு அல்லவே! ஃபெப்ஸி தலைவருக்கு மட்டும் தனியாக கொம்பு ஏதும் முளைத்துவிட்டதோ! அடடா.. இந்த ஸோ கால்டு சினிமா சங்கங்கள் விடும் அறிக்கையும் போடும் ஆட்டமும் தாங்கமுடியவில்லை. எல்லாம் ஆட்சி மேலிடத்தின் பூரண அருளாசி தங்களுக்கு இருக்கிற தைரியம்!
இன்னொரு பக்கம் ஜாகுவார் தங்கம் போன்ற காலிப் பானைகள் சத்தம் பெரும் தொல்லையாகவே மாறிவிட்டது. அதுவும் நேற்று வெள்ளிக்கிழமை முழுவதும் இந்த நபர் போட்ட பேயாட்டம் தாங்க முடியவில்லை.
யார் இந்த நபர்..? ஒரு கவர்ச்சி நடிகையை கற்பழித்த புகாரில் சிக்கி உள்ளே இருந்து, பின்னர் அதற்கும் சாதிச் சங்கத்தை துணைக்கழைத்து, அது வேலைக்காகாமல் போனதால், அந்த நடிகையிடமே சமாதானம் வேண்டி நின்றவர்.

நியாயமாக இவர் இருக்க வேண்டிய இடம் புழல் சிறைச்சாலை. சம்பந்தமே இல்லாமல், அதுவும் தவறு முழுக்க இவர் பக்கமே உள்ள நிலையில், தன் சொந்த விஷயத்தை சாதிப் பிரச்சினையாக்கப் பார்க்கிறார்.
அஜீத்தை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தவர் இந்த நபர்தான். வெற்றுப் பரபரப்புக்காக ஒரு பத்திரிகையில் அஜீத்தை மகா கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியவர் இந்த தங்கம்தான். ஆனால் இதை அஜீத்தும் சரி அஜீத் ரசிகர்களும் சரி… கண்டு கொள்ளவே இல்லை. ஒரு சின்ன முணுமுணுப்பு கூட அஜீத் தரப்பிலிருந்து வராமல் போகவே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரிந்தவர், திடீரென்று தன் கார் உடைக்கப்பட்டதாக போட்டோவுடன் போஸ் கொடுத்தார்.
பின்னர், அஜீத்தும் அவர் மேனேஜரும் இவர் வீட்டுக்கு அடியாட்களுடன் வந்து கார் மீது கல்லெறிந்து சேதப்படுத்தியதாக இவர் கொடுத்த புகாரைப் பார்த்து ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் வரும் போலீஸைப் போலவே விழித்துள்ளார் சென்னை கமிஷனர் (அந்தப் படத்தில் அஜீத் தன் மனைவியை வைத்துக் கொண்டிருப்பதாக புகார் தருவார் மனநோயாளியான கருணாஸ்!).
 
பின்னர் விசாரித்ததில் அஜீத்துக்கும் இந்த கார் உடைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்ததாம். ஆனாலும் தொல்லை விட்டால்தானே… மேலிடம், அதன் கிச்சன் காபினெட் என எங்கெங்கிருந்தோ வந்த அழுத்தம் காரணமாக அஜீத் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர் போலீசார்.
இதுகுறித்து அஜீத்தின் மேனேஜரிடம் கேட்டால், “என்ன கொடுமை சார் இது!” என்று நொந்து கொண்டார்.

இதிலும் போதிய பப்ளிசிட்டி கிடைக்கவில்லை அந்த பித்தளைக்கு… சரி, இன்னொரு கல்லையும் விட்டுப் பார்ப்போம் என்று ரஜினியை சீண்ட முனைந்திருக்கிறார். ரஜினி குறித்து அந்த நபர் தெரிவித்த கருத்து ரசிகர்களை கொந்தளிக்க வைக்கக் கூடியது.. ஒரு பைத்தியக்காரனின் பிதற்றலுக்கு நிகரானதும் கூட. அது தெரிந்தும் வேண்டுமென்றே அதைக் கட்டம் கட்டி செய்தியாக்கியுள்ளது அவருக்கு வேண்டப்பட்ட அந்த பத்திரிகை.
ஆனாலும், ஒரு சின்னக்கல்லை சாக்கடையில் விட்டெறிந்தாலும் சாக்கடை நம்மீதுதான் தெறித்து விழும் என்பது புரிந்து ரசிகர்கள் அமைதி காக்கிறார்கள். அப்படியும் இந்த நபர் அடங்குவதாக இல்லை. தன் வீட்டை ரஜினி ரசிகர்கள் அடித்து உடைத்துவிட்டதாக செய்தி பரப்பி வருகிறார் (கடந்த இரு தினங்களாக கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த நபரின் வீட்டுக்கு. அதை மீறி எந்த ரசிகர் வந்திருப்பார்? விட்டால் சட்டையைக் கிழித்துக் கொண்டு அடுத்தவர் மேல் புகாரும் தருவாரோ!).

இதற்கு சாதிச் சாயத்தையும் பூசியுள்ளார். ஆனால் இதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டிய போலீசார் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள். சமூக அமைதியைக் கெடுக்க பகிரங்கமாக வேலை பார்க்கும் ஜாகுவார்களை தூக்கி சிறையில் வைக்காமல், தங்கமே என கொஞ்சி மகிழுகின்றனர் தரங்கெட்ட அரசியல் தலைவர்களும் சினிமா கட்டைப் பஞ்சாயத்து பார்ட்டிகளும்.

நியாயத்தை எழுத வேண்டிய பத்திரிகைக்காரர்களோ, அவரது சாதி மற்றும் அந்த சாதியின் தொப்புள் கொடி உறவாகத் திகழும் பெரும் பத்திரிகைகளை பகைத்துக் கொள்ள விரும்பாமல், ஓடி ஓடி ஜாகுவார் தங்கத்தின் பிரஸ் மீட் கவரேஜில் பிஸியாகியுள்ளனர்.

போலீஸ் துறைக்குப் பொறுப்பான முதல்வரும் நடப்பதை சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளார் என்பதே உண்மை. ஒருவேளை அஜீத் சரியாக காலில் விழவில்லை என்று ஃபீல் பண்ணுகிறாரோ!
எந்த மாநிலத்திலும் இத்தனை கேவலமான முதல்வரையோ, ஒட்டுமொத்த சினிமா உலகமும் தன் காலடியிலேயே விழுந்து கிடக்க வேண்டும் என்ற மோசமான எண்ணம் கொண்ட அரசியல் தலைவரையோ நாம் பார்த்ததில்லை.
இப்போது நடப்பது, சுற்றியிருப்பவர்களை அடித்துக் கொள்ளத் தூண்டிவிட்டு, கடைசியில் அனைவரும் தன் காலில் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவரது அல்பத்தனமேயன்றி வேறில்லை!


குறிப்பு: இந்த அற்ப மனிதர்கள் லிஸ்டில் ஒருவரை விட்டுவிட்டோம்… அந்த நபர் இன்று ஒரு அறிக்கை விட்டு மீண்டும் நினைவுபடுத்தினார். பெயர் பன்னி செல்வம்… ( பன்னீராம்).  இவர் யாரென்று தெரிகிறதா… குசேலன் படம் வெளியான அடுத்த நாளே, அந்தப் படம் ப்ளாப் என்று கிளப்பிவிட்டு, பணம் பறிப்பதில் குறியாக இருந்த கொள்ளைக் கூட்டத்துக்கு… அதாங்க தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கு தலைவர்.

அஜீத் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர் படத்தை ஓடவிடமாட்டாராம். அடுத்து நிச்சயம் எந்திரனுக்கு பிரச்சினை தர பாயைப் பிறாண்டுகிறது இந்த ஜென்மம்.மீண்டும் சொல்கிறோம்… இது அரசும் அல்ல… கருணாநிதி நடத்துவது ஆட்சியும் அல்ல!

நன்றி -வினோ