தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இன்றைய முக்கிய செய்திகள் - பகலவன் குழுமம்

இன்றைய முக்கிய செய்திகள் 

ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் 40,000 தமிழர்கள் படுகொலை - முன்னாள் ஐ.நா. செய்தித் தொடர்பாளர்

ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.இலங்கை அரசு மீது சர்வதேச போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க  

செங்க‌‌ல்பட்டு சிறப்பு முகாமிற்குள் செல்ல அனுமதி மறு‌த்தது ஏ‌ன்? அரசு ‌விள‌க்கம‌ளி‌க்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை பார்த்து‌ப் பேசுவதற்கு வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று விளக்கமளிக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியது மட்டுமின்றி, அவர்கள் மீது வழக்குகளும் தொடர்ந்துள்ளனர்.மேலும் படிக்க

நாங்களும் அணு ஆயுத நாடு ஈரான் பிரகடனம் 

 முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நாங்களும் அணு ஆயுத நாடுதான். உயர் ரக செறிவூட்டப்பட்ட (highly enriched uranium) யுரேனியத்தை 2 நாட்களிலேயே தயாரித்துள்ளதாகவும் அகமதிநிஜாத் அறிவித்துள்ளார்.ஈரானில் இஸ்லாமியக் புரட்சி உருவான தினம் நேற்று தலைநகர் டெஹ்ரானில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட  அகமதிநிஜாத் மக்கள் முன்பு இந்த பிரகடனத்தை வெளியிட்டார். மேலும் படிக்க  

நாளை ‘வேலன்டைன் டே’ காதலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை 

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. காதல் ஜோடிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். கடற்கரையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். பெங்களூர் போல் சென் னையில் யாராவது காதலர்களிடம் தகராறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
.மேலும் படிக்க  

முல்லைப் பெரியாறு ஆய்வுப்பணியை எதிர்க்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் 

''மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை அருகே கேரள அரசு நட‌த்‌தி வரு‌ம் ஆய்வுப்பணிக்கு த‌மிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்'' பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கே‌ட்டு‌‌க் கொ‌‌‌ண்டு‌ள்ளா‌ர்.இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள அரசு முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மறுபடியும் நீதிக்கு மாறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் நடக்க ஆரம்பித்துள்ளது. புதிய அணைக்கு ஆயத்தமாக நேற்று மண் பரிசோதனை, பாறை பரிசோதனை மற்றும் ஆய்வு பணிகளை மிகப்பெரிய எந்திரங்களை கொண்டு, துளையிடும் பணியை தொடங்கியுள்ளது.மேலும் படிக்க  

ஜெயங்கொண்டம் அதிமுக எம்எல்ஏ கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு 

சென்னையில் முதல்வர் கருணாநிதியை ஜெயங்கொண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் இன்று காலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது தனது தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரக் கோரி முதல்வரிடம் மனு கொடுத்தார்.மேலும் படிக்க   

பொன்சேகாவை விடுதலை செய்ய ரணில் கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவேண்டும் என்று அதிபர் ராஜபட்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நேரில் வலியுறுத்தினார். இன்று காலை அதிபர் ராஜபட்சவை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது.மேலும் படிக்க 
இந்தியாவுக்கு அவுட்சோர்சிங்: ஒபாமா மீண்டும் எச்சரிக்கை
இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகளைக் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது மீண்டும் பாய்ந்துள்ள அதிபர் பாரக் ஒபாமா, அவை வரி ஏய்ப்பு செய்யும் கருதப்படும் என்று எச்சரித்துள்ளார்.இதுகுறித்து "புளூம்பெர்க்" என்ற பிசினஸ் வார ஏட்டிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், " நீங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) இங்கேயே வர்த்தகம் நடத்தினால், இங்குள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்தினால், இங்கேயே அனைத்து வர்த்தகத்தையும் மேற்கொண்டால் உங்களுக்கு 35 சதவீத வரி விலக்கு கிடைக்கும்.மேலும் படிக்க  
ஆந்திராவின் 10 மாவட்டங்களைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 நபர் கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டிக்கான 7 அம்ச திட்டத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா கமிட்டி ஆந்திராவின் அனைத்து பிரிவு மக்களிடமும் குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க வேண்டும், தெலுங்கானா பிரிக்கப்பட்டால் தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருப்பது போல் வளர்ச்சி பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் படிக்க 
இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் பள்ளிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா.வின் பள்ளி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வரும் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

 நன்றி

பகலவன் குழுமம்