தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

செலிப்ரேஷன் ஆஃப் தமிழ் சினிமா !

ரஜினியின் படங்களை இழுத்துவைத்து நாலு அறை; விஜய், சூர்யா படங்களைச் சேர்த்துவைத்துக் கட்டி நாலு விளாசு; இன்னும் அளப்பறை செய்யும் விஜயகாந்த் படங்களுக்கு ஒரு கிக்; சிம்பு + டி.ஆர் படங்களைப் பிடித்து ஒரு கும்மாங்குத்து; மணிரத்னம், ஷங்கர், கே. எஸ். ரவிகுமார், விக்ரமன் ஐடியாக்களுக்கு சாட்டையடி; இவர்கள் செய்த கூத்துகளையெல்லாம் இத்தனைநாளாக கைத்தட்டி ஆதரித்துவந்த தமிழ்சினிமா ரசிகர்களின் ரசனைக்கும் ஒரு பெரிய தர்மஅடி.

அத்தனையும் தமிழ்ப்படத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.
அதேசமயம் இந்தப் படத்தை ’செலிப்ரேஷன் ஆஃப் தமிழ் சினிமா’ என்றாலும் தகும். தமிழ் மக்கள் விழுந்து விழுந்து ரசித்தக் காட்சிகள் இன்னொரு பரிமாணத்தில் காணக்கிடைக்கின்றன. ஒருவழியாக தமிழ் சினிமாவில் நீண்டநாளைக்குப் பிறகு ஒரு நல்ல புது இயக்குனர்.   
tamilpadam செலிப்ரேஷன் ஆஃப் தமிழ் சினிமா !விஜய் டிவியில் வெளிவந்த லொள்ளு சபா நிகழ்ச்சிகளுக்கே நிறைய மிரட்டல்கள் வந்ததாகச் சேதி (அதில் உருவான நாயகன், கில்லி க்ளாஸ்). பிறகு எப்படி தமிழ் சினிமா கண்ணாடியில் தன்னைப் பார்த்து காறி உமிழ்ந்து கொண்டது? இங்கேதான் தமிழ்ப்படத்தின்  தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் பின்னணிப் பலம் புரிய வருகிறது. அவரால்தான் இந்தப் படமே சாத்தியமாகியிருக்கிறது. ஒருவேளை இந்தப் படத்தை கே.டி. குஞ்சுமோன் எடுத்திருந்தால் அவரை இந்தப் படைப்பாளிகள் சும்மா விட்டு வைத்திருப்பார்களா?

தமிழ் மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். திரையரங்குகளில் நீண்டநாளைக்குப் பிறகு ரசிகர்களின் முழு சந்தோஷத்தைக் காணமுடிகிறது. இதில் உள்ள முரண்நகை, அவர்கள் இதற்கு முன்பு ஆரவாரத்தோடு ரசித்த காட்சிகளைத்தான் தமிழ்ப்படம் புரட்டிஎடுக்கிறது. அதையும் விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள்!

 படத்தின் பல காட்சிகளுக்கு சீட்டைவிட்டு எழுந்து சிரிக்கலாம் என்று தோன்றுகிறது. அதுவும் முதல் கால் மணிநேரம் தமிழ் சினிமா கண்டிராத காமெடி. ஹீரோவின் வீட்டைக் காண்பிக்கும் காட்சிதான் படத்தின் அட்டகாசமான ஸீன்.  படத்தில் கிண்டலடிக்கப்பட்டப் பெரும்பான்மையான காட்சிகள் 80களில் வந்தவை. ஆனால் சிம்பு, டி.ஆர் தொடர்பான காட்சிகள் மட்டுமே நிச்சயம் அவர்கள் மனத்தை மிகவும் காயப்படுத்தியிருக்கும். அந்தளவுக்கு அதில் தனிமனிதத் தாக்குதல்கள் இருந்தன.
சரி, இன்னொரு தமிழ்ப்படம் வெளிவராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
ரஜினி, விஜய், அஜீத், இந்த மூன்று பேரையும் திருத்தினாலே அல்லது இந்த மூன்று பேரும் தானாகத் திருந்தினாலே தமிழ் சினிமா பாதாளத்திலிருந்து வெளியே வந்துவிடும் என்று தோன்றுகிறது. இவர்கள் வாலாட்டுவதால்தானே சிம்பு, விஷால், பரத் போன்ற அடுத்தத் தலைமுறை நடிகர்களும் கெட்டுப்போகிறார்கள். ஹீரோக்கள் திருந்தினால் வேறு வழியில்லாமல் மசாலா இயக்குனர்களும் மனம் மாற்றம் அடைந்துவிடப் போகிறார்கள். தமிழ் சினிமாவும் சுபிட்சம் பெற்றுவிடும்.

ஐ! இதென்ன தமிழ்ப்படமா? ஒரு காபி தயாரிப்பதற்குள் வாழ்க்கையே தலைகீழாக மாறுவதற்கு. தமிழ் சினிமா ஹீரோக்களின் வாழ்வுத்தரம் உயர்ந்த அளவுக்கு தமிழ் சினிமாவின் தரம் இன்னும் ஓர் அடிகூட உயரவில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் முழுக்க தவிட்டையே உணவாக கொடுத்துவந்தால் அவன் நாக்கு நாளடைவில் மரத்துத்தானே  போகும். அதுதான் தமிழ்சினிமாவிலும் நடந்திருக்கிறது. தமிழ்சினிமாவின் கோமா நிலைமை குறித்து இங்கு யாருக்கும் அக்கறை கிடையாது. ஒரே வழி…
தமிழ்ப்படம் பார்ட் 2 எடுத்து நம்மைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.