தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பகலவன் குழுமத்திற்கு வரவேற்கிறோம்.



வணக்கம் தோழர்களே,

பகலவன் குழுமத்திற்கு வரவேற்கிறோம்.இது முழுக்க முழுக்க தமிழுக்காக,தமிழால்,தமிழுடன் காதல் கொண்டவர்களுக்கு மட்டும். தமிழ் மொழியில் தீராத அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மட்டும் உரிய குழுமம் இது. தமிழில் படைப்புகள் இயற்ற விரும்புபவர்களும் தங்கள் படைப்புகளை பிரசுரிக்கவும், படைப்பாளிகளின் ஆக்கங்களை படிக்கவும் , விமர்சிக்கவும், சீர் தூக்கி நிர்ணயிக்கவும் நல்ல தமிழ் ஆர்வலர்களும் ஆர்வமுள்ளவர்களும் ஒன்றிணையத் தகுந்த இல்லம் இது. இக் குழுமம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மற்றும் பல சுவையான இழைகளை உருவாக்கி சகல தரப்பு சுவைஞர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்ற ஆவலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அங்கத்தினரும் அறிமுக இழையிலிருந்து சகல இழைகளிலும் பங்கு பற்றி மகிழ வேண்டுமென்று நாம் விரும்ம்புகின்றோம். இங்கே தொடர்புகளிலிருந்து சகலவிதமான பங்கேற்பும் முழுக்க முழுக்க தமிழ் மொழி மூலமே கையாளப்பட வேண்டும். இணைய முகவரிகளும் , மின் அஞ்சல் முகவரிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

அன்பர்களின் விமர்சனங்களும் , சீர்தூக்கலும் மற்றவர்களின் மனம் புண்படாத நாகரீக எல்லைகளுக்குட்பட்ட வார்த்தைப் பிரயோகங்களுடன் இருக்க வேண்டும் என்பதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மொழி அல்லது மதம் அல்லது இனம் என்று பிரிவினை வேறுபாடுகளோ அல்லது அவற்றை தூற்றுதலோ அல்லது அவமரியாதையோ இங்கு அங்கீகரிக்கப்பட மாட்டாது. முக்கியமாக தனி மனிதக் கீறலை முற்றாகத் தவிர்க்கும் படி நண்பர்களை வேண்டுகிறோம்.இக் குழுமம் முழுக்க முழுக்க நட்பு ரீதீயிலும், இலக்கியப் பாதையிலும் மட்டும் பயணப்பட வேண்டுமென்பதே எம் நோக்கம்.

முற்றிலும் நட்புக்கு இன்முகம் காட்டி , தமிழுக்கு உயிர் மூச்சை ஈதலில் முன் நிற்கும் புனிதமான தமிழ் நெஞ்சங்களை ஒன்று கூட்டி தமிழ் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் பங்கமேதும் எம்மால் வராது என்ற கட்டியத்துடன் தமிழ் பெருமை என்னும் மகுடத்தின் ஒளி மென் மேலும் மெருகேற ஒரு சிறு பங்களிப்பாக எமது சேவையை தொடங்கி தொடர ஏதுவாக இக் குழுமம் விளங்க வேண்டுமென்ற தீராத ஆர்வத்துடன் இக் குழுமத்தின் வளர்சியின் பொறுப்பை இக் குழுமத்தின் உறுப்பினராக அறிமுகமாகும் ஒவ்வொரு பயனரிடமும் ஒப்படைக்கின்றோம்.


வேறு இணையத் தளங்களிலிருந்து வேறொருவரின் படைப்புகளை ரசனைக்காக பகலவன் குழுமப் பக்கங்களில் நீங்கள் பிரசுரிப்பதாயின் அந்த படைப்பை எங்கிருந்து எடுத்து இங்கு தருகிறீர்கள் என்ற விவரத்தையும் கூடவே குறிப்பிட வேண்டும்.

குழுமத்தில் இணைய http://groups.google.com/group/pagalavan?hl=en



வருக! வளர்க! வாழ்க!



நன்றி! வணக்கம்!


அன்புடன்
பகலவன் குழுமம்


pagalavan@googlegroups.com



கொஞ்சம் கவனியுங்கள்

  • குழுமத்திற்கு புதிய மடல்கள் அனுப்ப
    pagalavan@googlegroups.com
  • குழும முகவரி http://groups.google.com/group/pagalavan?hl=en
  • உங்கள் குழுமக்கணக்கை சரிசெய்ய http://groups.google.com/group/pagalavan/subscribe
  • தமிழில் எழுத இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.கலப்பை
  • தயவு செய்து நடிக நடிகைகளின் ஆபாசப்படங்களை அனுப்பவேண்டாம்
  • முடிந்தவரை தமிழ்நண்பர்களோடு விவாதங்களில் தமிழில் எழுதுவோமே
உங்களுக்கு பிடித்திருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பக்கத்தை பரிந்துரைக்க கேட்டு கொள்கோறோம் .

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!



நன்றி
வணக்கம்
பகலவன் குழுமம்
இது தமிழ் உணர்வாளர்களின் சங்கமம்

http://pagalavantamil.blogspot.com/
http://www.periyarl.com/
சென்னை