தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஜெயராமின் துடுக்குத் தனமான பேச்சு - சீமானின் மீது (தவறான) கைது ஆணை

நடிகர் ஜெயராமின் துடுக்குத்தனமான பேச்சும் அதை தொடர்ந்து  நடந்த சம்பவங்கள் யாவருக்கும் தெரியும்.ஜெயராம் சென்னையில் இருந்தாலும் மலையாள நடிகராகவே அறியப்பட்டவர். அறியபடுபவர். 
 
     ஈழ விசயத்திற்கு பின்னர் மலையாளிகள் மூவர் , விஜய் நம்பியார் , சிவ சங்கர மேனன், பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தமிழர்களின் எதிரியாகவே பார்க்கபடுகிரார்கள் , ஏனென்றால் இவர்கள் மூவரும் திட்டமிட்டே அல்லது திட்டமிட்ட காங்கிரசுக்கு ஆதரவாகவே , தமிழர் எதிர் நிலையை சதியை மேற்கொண்டார்கள்  என்பது தமிழர்களின் ஆழ பதிந்து விட்ட ஒன்று.
 
இதில் நாராயணனும் சிவ சங்கர் மேனனும் நடத்திய நாடகங்கள் அப்பட்ட துரோகங்கள்.
 
ஈழ விடயத்தில் இன்னும் , மத்திய அரசாங்கத்தை தவறாக வலி நடத்துபவர்கள் மலையாளிகள் என்ற உண்மையும் இப்போது தமிழ் நாட்டில் நன்றாய் எல்லாரிடமும் பரவி உள்ளது.
 
இப்படிப்பட்ட நேரத்தில் முல்லை பெரியார் அணையிலும் தமிழக உரிமையை அவர்கள் மீறுகிறார்கள் என்ற ஒரு அரசியல் நிகழ்வும் நடக்கிறது .
 
முல்லை பெரியாறு ஆணை விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் போராடுகிறார்கள் என்றாலும் வைகோ அதை தீவிரமாக கிராம பிரசார இயக்கமாக செய்து வருகிறார் .
 
இப்படிப்பட்ட சூழலில், மலையாளியான ஜெயராம், தமிழச்சிகளை 'எருமை ' என்பது போல் பேசியது  மிகதவறானதுதான், பின்னரும் இந்த விஷயம் குமுதம் போன்ற பத்திரிக்கைகளில் பெரிதாகி தமிழர் சுமரியாதையை உரசி பார்க்கும் போது, உணர்ச்சி பீறிட்ட சில தமிழர்கள் அவரது வீட்டை தாக்கியுள்ளனர்.
 
தாக்கியவர்கள் அனைவரும் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை  சேர்ந்தவர்கள், என்று தமிழக காவல்துறை சிலரை கைதும் செய்திருக்கிறது.
 
அதோடு நிற்காமல் ,  அந்த இயக்க தலைவர் அல்லது இயக்கத்தை  வழிநடத்தும் சீமானையும் கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
 
வன்முறையை கையில் எடுப்பது தவறுதான், இருந்தாலும் , ஒரு இயக்க உறுப்பினர்கள் சிலர் வன்முறையை பிரயோகித்தார்கள் என்றால் , அந்த இயக்க தலைமை வரைக்கும் ஏன் கைது நடவடிக்கை ஆணை பிறப்பிக்க வேண்டும் ? எந்தவிதமான முதல் கட்ட விசாரணையும் இல்லாத அல்லது முடியாத நேரத்திலேயே, அதில் தலைமைக்கு உறுதியான தொடர்பு உள்ளது என்று தெரியாத பட்சத்தில்  , அந்த இயக்க தலைவரை - யும், கைது செய்ய ஆணை பிறப்பிப்பது  என்பது நல்ல ஜனநாயக நெறிமுறையாக படவில்லை.  
 
சீமானின் குரல் ஈழ தமிழ் மக்களின்  ஆதரவு குரலாக தமிழ் உலகம் தோறும் ஒலிக்கிறது .  அப்படிப்பட்டவரை  ஒரு சின்ன கல்லெறி சம்பவத்திற்காக, அதுவும் அவர் நேரிடையாக பங்கேற்காத ஒரு சம்பவத்திற்கு ,  கைது நடவடிக்கை வரை செல்வது என்பது , தமிழர்கள் ஒன்றாவதை விரும்பாத ஜனநாயக எதிர் சக்திகளின் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது .
 
சட்டத்தின் பிரகாரம் பார்த்தாலும், இந்த நிகழ்வு ஏற்பட காரணமான ஜெயராம் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கவேண்டும் என்பது சட்டம் தெரிந்தவர்களின் கூற்றாக உள்ளது.
 
சாதாரண மக்கள் , உணர்ச்சி பூர்வமான மக்கள் , தமிழர்கள் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று விரும்பும் சக்திகளை அரசாங்கம் அரவணைக்க வேண்டும் நல்வழி படுத்த வேண்டும்  என்பதுதான் நமது ஆவல்.
 
அரசாங்கத்தின் நடவடிக்கையானது , தமிழர்களுக்கு எதிரானது என்ற கோணத்தில் மற்றவர்கள் பார்க்கும் படி ஆகிவிடக்கூடாது என்பதுதான் நமது விருப்பமும் கூட . எல்லா தமிழர்களின் விருப்பமும் கூட .
 
நன்றி,
தின இதழ்