பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு நான் ஆதரவு கொடுத்ததுதான் நான் செய்த தவறுகளிலேயே மிகப் பெரியது என்று திடீர் ஞானோதயம் பெற்றவர் போல லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பீகாரில், காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி உருவாக்கப்பட்டது பெரிய தவறு என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
உண்மையில் ராப்ரி அரசைக் காப்பாற்ற 2000-மாவது ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தேன் பாருங்கள், அதுதான் பெரிய தவறு.
மதவாதச் சக்திகளை ஆட்சிபீடத்தில் அமரச்செய்துவிடக் கூடாது என்ற அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தோம். அதற்காக எங்கள் கட்சி எவ்வளவு பெரிய தியாகம் செய்தது என்பதை நாடறியும்.
இவ்வாண்டு இறுதியில் பீகாரில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் ஆர்ஜேடி-எல்ஜேபி கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லும் திறமை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.
ராகுல் காந்தி இப்படி கருத்துத் தெரிவிக்க தார்மீக உரிமை இல்லை. அவர் அரசியல் அறிவிப்புகளை வெளியிட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என கல்வி நிலையங்களுக்கு செல்கிறார். நாங்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி நிறுவனங்களை அரசியல் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் எப்படி அனுமதிக்கின்றன என்று தெரியவில்லை என்றார் லாலு.
இப்படிப் பேசிய லாலு நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த கடைசிப் பதில்தான் படு சுவாரஸ்யமானது.
தற்போது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உங்கள் கட்சி தொடர்ந்து ஆதரிக்குமா என்பது செய்தியாளர் கேட்ட கேள்வி.
அதற்கு லாலு பதிலளிக்கையில், அதுதான் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஆதரிக்கவேண்டியதாகி விட்டது என்று கூறினேனே. இனி அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றார் லாலு.