தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

2016 ல் மாபெரும் அரசியல் புரட்சி - நாம் தமிழர் சீமான்

மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். அதன் பின்னர் 2016 ல் மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார் சீமான்.

ஈழ தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சேலம் போஸ் மைதானத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும், டைரக்டருமான சீமான் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது சீமான் பேசுகையில்,

வரும் மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். இதுதான் எனது இலக்கு. இதன் பின்னர் 2016 ல் ஒரு பெரிய அரசியல் புரட்சி ஏற்படுத்தி காட்டுவேன்.

தமிழ் இனத்திற்காக முத்துக்குமார் போன்ற பலர் உயிர் நீத்துள்ளார்கள். நம் நாட்டில் காட்டில் எவ்வளவு புலிகள் உள்ளது என்பதை கணக்கிடுகிறார்கள். மிருகங்களை வதை செய்ய கூடாது என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஒரு இனமே அழிந்து கொண்டு இருக்கிறது. ஒன்றரை லட்சம் பேரை ராஜபக்சே கொன்று குவித்துள்ளார். உலகம் முழுவதும் நாம் உள்ளோம். உலகம் பெருமைப்பட்டு பார்க்கும் இனமாக தமிழ் இனம் உள்ளது. நம் மொழி, இனம் காப்பதற்காக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.

கூட்டத்தில் சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்து உயிர்நீத்த சாஸ்திரி பவன் அமைந்துள்ள ஹாரிங்டன் சாலைக்கு முத்துக்குமாரின் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Thambhi
புரட்சியின் விதை கருணாநிதி அவனது வழி தோன்றல்கள் அனைவரையும் எரித்த சாம்பலில்தான் முளைக்கும் என்பதை சீமான் உணரவேண்டும்.

nallavan
விஜயகாந்த் போன்ற விவரங்கெட்ட அரசியல் வாதிகள் பின்னால் போவதை விட, சீமானுக்கு தோள் கொடுங்கள். தமிழ் நாட்டுக்கு தண்ணிர் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஈழத் தமிழனுக்கு பால் வார்க்க போராடுவோம்.

செம்மீன் ஷீலா
தனி மனிதனின்கோபம் தான் புரட்சிகளாக வெடித்து, பல சரித்திரங்களை மாற்றியிருக்கிறது. வை.கோ. முழங்கினார். இல்லையென்று சொல்லவில்லை. அவர் முழங்கியது அவருடைய வீட்டிலிருந்து அல்ல. தி.மு.க. என்ற ஒரு கூட்டிலிருந்து அதன் லாபத்துக்காக முழங்கி, பின் அதையே சுய லாபத்துக்குகாக தொடர்ந்தார். சீமானின் முழக்கம், யாருக்கும் ஓட்டு சேர்ப்பதற்காக அல்ல. இப்போது சீமானின் பின்னால் கூடும் கூட்டம், அரசியல் அல்லாத தனித் தமிழ் உணர்வுகலந்த கூட்டமாக இருக்கும்.

புரட்சி வீரன்
ஐயா புரட்சி எல்லாம் சரிதான். இதை நீங்கள் மட்டும் சொல்லவில்லை. வைகோ முழங்காத முழக்கமா? ஆனால் அவர் இப்போது எப்படி இருக்கார். நீங்கள் எதாவது நல்லது செய்தால் வரவேற்க தக்கது தான். 1789 பிரஞ்ச் புரட்சி மாதிரி எதாவது செய்வீர்கள் என்றால் வாழ்த்துக்கள். உமக்கு தோள் கொடுப்போம்.