தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

எவ்வளவு திமிர் அல்லது தெனாவட்டு இந்த ராஜ பக்சே அரசிற்கு.

எவ்வளவு திமிர் அல்லது  தெனாவட்டு இந்த ராஜ பக்சே அரசிற்கு.
 
இலங்கையை பொறுத்தளவில் அதன் முழு முதல் அல்லது தலையாய பிரச்சினை, தமிழர் சிங்கள இன பிரச்சினை தான் . அங்கே தமிழ்கள் அனைவரும், தமிழர்கள் வாழ்விற்காக குரல் கொடுத்த அமைப்புகள் , புலிகள் முதலானவர்கள் பயங்கரவாதிகளாக உலகிற்கு காட்டப்பட்டு  கூடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் . சிங்களவர்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பு கேடயம் , அரசாங்கம் அல்லது அரசு .
 
அந்த அரசு பயங்கரவாத அரசு என்பது இப்போது தெளிவாய் பல நாடுகளிற்கு தெரிந்தாலும் , இந்தியா போன்ற முட்டாள் தேசங்கள் பல இன்னும் இலங்கையின் நன்மைக்காக பாடு படுகின்றன .
 
போரின் பொது சிறை பிடிக்கப்பட்ட மூன்று லக்ஷம் பேரை இன்னும் இலங்கை அரசு விடுவிக்கவில்லை அல்லது அதற்க்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை .
 
போரில் கைப்பற்றப்பட்ட போராளிகள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை . யார் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை .
 
பின்னர் எந்த தைரியத்தில், உலக தமிழர்கள், புனரமைப்புக்கு உதவ வேண்டும் என்று கோருகிறார்கள் . அது உண்மையில் யாருடைய புனரமைப்பிர்ற்கு உதவ போகிறது . ?
 
தமிழனை மூன்று அரசாங்கனகள் இன்னும் அதி தீவிர முட்டாள் என்றே நினைக்கின்றன , ஒன்று இலங்கை அரசு மற்றொன்று இந்திய அரசு மற்றொன்று இந்தியாவில் உள்ள மற்றொரு அரசு !
 
செய்தி :
 
விடுதலைப்  புலிகளுடனான போரினால் சீர்குலைந்த வடக்குப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் என்று வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித பொகலகாம வெள்ளிக்கிழமை இந்த அழைப்பை விடுத்தார்.
 
மேலும் அவர் கூறியது:
30 ஆண்டுகாலம் புலிகளுடன் தொடர்ந்து நடந்த போரினால் நாட்டின் வடக்குப் பகுதி   முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  அப்பகுதிக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் முடங்கியுள்ளது.
 
தற்போது அப்பகுதி புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வளர்ச்சிப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  சுற்றுலா,   மீன்பிடித் தொழில்,   வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த அரசு அடையாளம் கண்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் மொத்தம் 6 லட்சம் பேர் வசிக்கின்றனர்.  இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
வடக்குப் பகுதியின் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளார்கள். 
இதை அரசு அறியும்.  முதலீடுகளை செய்து வளர்ச்சிப் பணியில் பங்கேற்க விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு வரவேற்கிறது. 
 
வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களிடம் இருந்து மட்டுமல்லாது உலக நாடுகளிடம் இருந்தும் அரசு முதலீடுகளை வரவேற்கிறது. 
 
முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.  யாழ்ப்பாணம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாக்கப்படும். 
 
அங்கு துணைத் துதரகத்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார் ரோகித பொகலகாம.