தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அரசியல் மேடை


லே சுவருமுட்டி.இந்த சித்தன் எங்க போய் தொலைஞ்சார்னு தெரியலப்பா. அடிக்கடி 'அலப்பரை கூட்டத்தை கூட்டி' நாட்டுக்கு நல்லதை கெட்டதை சொல்லலாம்னு பார்த்தா மனுஷன் கண்ணில் தென்படமாட்டேன் என்கிறார் என்று வருத்தப்பட்டுகொண்டார் ஆட்டோ அன்வர்.
 
நீ கவலைப்படாதப்பு. எங்கயிருந்தாலும் நான் தூக்கிட்டு வந்துடறேன். நீ மெரீனா பீச்சுக்கு வந்துடு. அங்கன வச்சு சித்தனை நல்லா கவனிப்போம் என்று செல்போன் இணைப்பை துண்டித்தார் கோட்டை கோபாலு. சொன்னபடி அடுத்த ஒரு மணி நேரத்தில் மெரீனா கடற்கரை... சித்தனை கைது செய்து இழுத்து வருவதைப் போல் கொண்டு வந்தார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பதால் சித்தன் என்னவோ நொடிந்து போய் காணப்பட்டார்.
 
அலப்பரை கூட்டத்தை கூட்டுற பொறுப்பு நம்ப எல்லோருக்குமே இருக்கு. ஏதோ நான் மட்டும் குத்தவாளின்னு 'பிரச்சாரம்' செய்யாதீங்கப்பு... சரி விஷயத்துக்கு வாங்க...-சித்தன்.
 
சரி. நாட்டு நடப்புக்கு வருவோம். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உறவு எந்தளவில் இருக்குப்பா. நாட்டுல என்ணெண்ணவோ பேசிக்குறாங்க- கோபாலு
 
அப்படி போடு, ஆரம்பமே தூக்கலாதான் இருக்கு. அது பத்தின முழு தகவல் நம்பகிட்ட இருக்கு. நான் சொல்றன் கேளுங்க என்ற சுவருமுட்டி ''அது என்னமோ தெரியல சமீபமா நடக்குற சம்பவத்தை பார்த்தா அவிங்களுக்குள்ள ஏதோ முட்டல் மோதல் இருந்துகிட்டுதான் இருக்கு போல. கொஞ்சநாளா காங்கிரஸ் தரப்புல இருந்து சவுண்ட் வித்தயாசமா வருது. வழக்கமா பூனைக் குட்டிதான் மியாவ் சவுண்ட் கொடுக்குதுண்ணு தி.மு.க ஆளுங்க நினைச்சிருக்காங்க. பிறகு நல்லா கவனிச்சாதான் அது சிங்கம் கர்ஜனையா தெரியுது. தமிழ்நாட்டுல இருக்கிற காங்கிரஸ்காரங்க யாரும் திமுக-வுக்கு எதிரா போராடுறதே இல்ல. அப்படி என்ன பத்திரம் எழுதி கொடுத்திருக்கோம். அவிங்க நம்ப சென்ட்ரல்ல பங்கு வாங்கிட்டு அப்பப்போ எதிர்த்து பேசிகிட்டிருக்காங்க.ஆனா நாம மக்கள் பிரச்சனைக்குகூட ஏதும் குரல் கொடுக்கிறதே இல்ல. துணிவு இல்லயா நமக்கு. இப்படியே விட்டா அவிங்க செய்யுற தப்புக்கு நாமும் துணை போவதா ஆயிடும்''னு ஒரு கூட்டத்துல கார்த்தி சிதம்பரம் பேசுறாரு.
 
அதுக்கு ஒருபடி மேல போய் பேசுன இளங்கோவன் ''கூட்டணி வச்சுகிட்டாவே நாம் முழு நேரமும் புகழ்பாடிகிட்டுதான் இருக்கணுமா. ஆட்சியோட குத்தம் குறைய எடுத்து சொல்லகூடதா. நாம என்ன வைரமுத்துவா. அவருக்கு எதிரா எப்பவும் கவிதையால வாழ்த்து பாடுறதுக்கு''ன்னு போட்டு தாக்குறாரு. அது மட்டுமல்ல. நிலமை இப்படியே இருக்காது. மாறும். இது ஆரம்பம்தான். போகப்போக பாருங்கன்னு பொடி வச்சு பேசுறாரு. அதுக்கேத்த மாதிரி ஒரு சம்பவம் நடக்குது. மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனும், மாநில அமைச்சர் துரைமுருகனும் சேர்ந்து ஒரு பெரிய விழா நடத்தினாங்க. அரண்மனை மாதிரி பிரமாண்ட செட் போட்டிருந்தாங்க. ரஜினி, கமல் உட்பட பெரிய வி.ஜ.பி. எல்லாம் ஆஜராகியிருந்தாங்க. இவ்வளவு பெரிய விழாவுக்கு ஒரு காங்கிரஸ் பிரமுகர்கூட கலந்துகொள்ளவில்லை. இவிங்களும் முயற்சி செய்து பார்த்திருக்காங்க. ஏதேதோ காரணம் சொல்லி எஸ்கேப் ஆகியிருக்காங்க. என்னடா இது, கூப்பிடாமலே கலைஞர் விழாவுக்கு வந்து உட்கார்ந்திடுவாங்களே இந்த காங்கிரஸ் ஆளுங்க. இப்ப ஒருத்தர்கூட வரலியேன்னு யோசிச்சிருக்காங்க. பிறகுதான் தெரியுது. 'பழக்க தோஷத்துல யாரும் அந்த பக்கம் போயிடக்கூடாது. அப்படி போனால் உங்க கட்சி பதவி காலியாயிடும். ஜாக்கிரதைன்னு' டெல்லி மேலிடம் ரொம்ப கராறா சொல்லியிருக்காம்.
 
இன்னொரு சேதி. இதுக்கு முன்னாடி, டெல்லியில் இருக்கிற பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்நாட்டுல இருந்து யாரும் போய் சந்திச்சுட முடியாது. திமுக சிக்னல் கொடுத்தாதான் சந்திக்க முடியும். அப்படி பல விஷயம் நடந்திருக்கிறது. எதிர் கட்சி உட்பட எத்தனையோ பிரமுகர்கள் அப்படி முயற்சி எடுத்து தோற்றுபோய் இருக்காங்க. அதுவும் இப்போ தலைகீழா நடந்திருக்கு. கரும்பு விவசாயிகள் கோரிக்கை சம்பந்தமா அதிமுக எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து பிரதமரை, அதுவும் அவரது வீட்டுல போய் சந்திச்சு அரை மணி நேரம் பேசியிருக்காங்க.இப்படி நடக்குமான்னு திமுக. நினைச்சே பார்க்க முடியாம இருக்கு. எந்த மாநிலத்திலிருந்தும் எந்த கோரிக்கையா இருந்தாலும் மத்தியில இருக்கிற சம்பந்தப்பட்ட அமைச்சரை பார்க்கறதுதான் வாடிக்கை. தெலுங்கானா பிரச்சனை மாதிரி ஏதாவது ரொம்ப சென்சிட்டிவான பிரச்சனை என்றால்தான் பிரதமரை சந்திக்க முடியும். ஆனா வழக்கத்திற்கு மாறாக பிரதமரை நேரில் சந்திச்சிருக்கு அதிமுக தரப்பு. அதுவும் இந்த நேரம் சாதாரன நேரமல்ல. வர்ற 22-ம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்க. அதுக்க பட்ஜட் தாக்கல் வேலை படு பிஸியாக இருக்கும். இடையில பூனேவில் பெரிய குண்டு வெடிப்பு.இன்னும் பெரிய குடைச்சலா மேற்கு வங்களாத்தில் மாவோயிட்டுகள், வேற அதிரடி தாக்குதல் நடத்தி காங்கிரஸ் தலைய பிடிச்சு உலுக்கிகிட்டு இருக்காங்க...
அய்யோ... நம்ப பிரதமர் பாவம்யா.. அவரு கதைய கேட்குறப்போவே தலைசுத்தலா இருக்கு. இம்புட்டுக்கும் மத்தியில மனுஷன் எப்படி தெம்பா நிக்றாருன்னே தெரியல.. - சிரித்தார் அன்வர்பாய்.
 
''இன்னும் கேளுப்பா. அவசரப்படாதே. இம்புட்டு வேலைக்கும் மத்தியில வர்ற 25-ம் தேதி பாகிஸ்தான் கூட பேச்சுவார்த்தை. அதுக்கான ஏற்பாடு ஒரு பக்கம். அந்தான்ட சீனா வந்து அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடிகிட்டு 'எப்போவெனாலும் உள்ளே நுழைஞ்சிடுவோம்'னு வரிசை கட்டி நிக்குறாங்க. தலாய்லாமாவை நாம அடைக்கலம் கொடுத்து வச்சிகிட்டு இருக்கோம். அந்த மனுஷன் என்னாடான்னா அமெரிக்க அதிபர் ஒபாமாவை போய் சந்திக்கிறாரு. எல்லாத்துக்கும் காரணம் இந்தியாதான்னு சீனா சீறுது. இவ்வளவு திருகுவலி இருக்கிறப்போ ஒரு மாநிலத்துக்குள்ள இருக்கிற கரும்பு விவசாயிகள் கோரிக்கையை தீர்க்குறதுதான் பெரிய வேலையா. அதுக்குதான் அந்த துறை அமைச்சர் சரத்பவார் இருக்காரே. அவரை மட்டும் சந்திச்சு பேசினா போதாதா. எதுக்கு அதிமுக எம்.பி.களை முக்கியத்துவம் கொடுத்து சந்திக்கனும். நல்லா யோசிச்சு பாருங்க''... என்றபடியே சிரித்தார் சுவருமுட்டி..
 
அடப்பாவி, அம்புட்டுதானா.. இன்னும் பாதி மேட்டரு இருக்கு கேளுங்க. 'கரும்பு'ன்னு சொல்கிட்டு அதிமுக எம்.பி.ங்க போய் பிரதமரை பார்துட்டு ரொம்ப நேரம் பேசிட்டு வந்தாங்க இல்லையா. அதுக்க முன்னாடி நம்ப துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு போனாரு. அப்போ பிரதமரை தனியா சந்திக்க அனுமதி கேட்டிருக்காங்க. பிஸி, அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. முதல்வர்கள் மாநாடு நடக்குறப்போ, மதியம் சாப்பாட்டு டைம்ல சும்மா பார்த்து பேசிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. மத்தபடி தனியா நேரத்தை ஒதுக்க முடியாதுன்னு கரார் காட்டியிருக்காங்க. வேற வழியில்லாம ஸ்டாலினும் சாப்பாட்டு நேரத்துல சும்மா சந்திச்சு போட்டோவை எடுத்துகிட்டு மானத்தை காப்பாத்திகிட்டாரு. காங்கிரஸ் ஏன் இப்படி செய்யுதுன்னு தெரியல. அப்படியே இன்னொரு சேதி. விவசாயிகளுக்கான உரம் விலைய ஏத்தகூடாதுன்னு அந்த துறையோட மந்திரி மு.க.அழகிரி மத்திய அரசுக்கு கோரிக்கைய வச்சாரு. அப்படி மீறி ஏத்தினா விவசாயிகள் கொந்தளிச்சுடுவாங்கன்னு பேட்டியெல்லாம் கொடுத்தாரு. அதுக்கேற்ப உடனே முதல்வர் கலைஞரும் பிரதமருக்கு 'உரம் விலைய எத்திடாதீங்க, விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்'னு கடிதம் எழுதினாரு. இம்புட்டுக்கும் பிறகும் அந்த கமிட்டி கூட்டம் கூடியது. துறை அமைச்சர் என்கிற வகையில் அழகிரியும் தன் முடிவை சொன்னாரு. அதாவது விலையேத்தம் ஏதும் செய்தடாதீங்கன்னு. ஒரு கூட்டணி கட்சி அமைச்சர் சொல்றாரு. பரிசீலிப்போம்னு கூட சொல்லலை. எல்லாவற்றையும் மீறி 'விலையை ஏத்திதான் ஆகனும். தவிர்க்க முடியாது. வேற வழியில்லைன்னு' தெளிவா சொல்லியிருக்காங்க. அழகிரிக்கு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. இப்படி நடந்த எல்லாத்தையும் கூட்டி கழிச்சுபாரு. கணக்கு சரியா வருதா, இல்லையான்னு தெரியும்... என்று முடித்தார் சித்தன்.
 
இம்புட்டு விஷயம் நடந்திருக்கு. ஆனாலும் எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல. நல்லாதான் இருக்கோம்னு அப்பப்ப நம்ப தங்கபாலுவை விட்டு சும்மா ஒரு அறிக்கை வேற கொடுக்க வைக்கிறாங்கப்பு. என்னத்த சொல்றது. சரி நம்ப அண்ணன் தம்பி சேதி எப்படி போயிட்டிருக்கு. ஒன்னுக்குள்ள ஒன்னாதான் இருக்காங்களா. இல்ல முட்டிகிட்டுதான் இருக்காங்களா- சுவருமுட்டி..
 
என்னாத்த சொல்றது. மேலுக்கா பார்த்தா ஒன்னுமில்லங்கிற மாதிரிதான் தெரியும். ஆனா உள்ளுக்குள்ள பிராண்டிகிட்டுதான் இருக்காங்களாம். சமீபத்துல தென் மாவட்டத்துல மூணு பெரிய நிகழ்ச்சி நடந்தது. தென் மாவட்டம்ன்னாலே அழகிரி இல்லாம நடக்குமா. ஆனா நடந்திருக்கு. அந்த விழா அழைப்பிதழில் அண்ணன் பேரு இல்ல. இல்லாமலே போய் சின்னவரு கொடியேத்தி தன் செல்வாக்கை நிலைநாட்டிட்டு வந்திருக்காரு தளபதி. கொதிச்சுபோன அண்ணன் அந்த மாவட்ட கலெக்டரை அழைச்சு 'என்னய்யா நடக்குதிங்க'ன்னு கோபப்பட்டிருக்காரு. பதறிபோன கலெக்டர் 'அய்யா சாமி. எங்க மேல தப்பு இல்ல. அழைப்பிதழில் உங்க பேரை பெரிசா முன்னுரிமை கொடுத்துதான் மேலிடத்து ஒப்புதலுக்கு அனுப்பினோம். ஆனா அங்கிருந்து வர்ரப்போ உங்க பேரை நீக்கிட்டாங்க' அப்டீன்னு சொல்லியிருக்காங்க. யாருய்யா அந்த மேலிடம்னு கேட்டா, துணை முதல்வர் அலுவலகம்னு சொல்லியிருக்காங்க... பிறகு பார்க்கனுமே அண்ணனின் கோபத்தை. அப்படியே கோபாலபுறத்திற்கு போன் போட்டு அம்மாகிட்ட கொதிச்சு போயிருக்காரு. முடிவுதான் என்னன்னு தெரியல. அதுமட்டமில்ல. டெல்லியில தனக்கு செல்வாக்கு ஒன்னுமில்லன்னு அழகிரி நினைக்கிறாரு. ஏதாவது பேசனும்னா இந்தி, இல்ல இங்லீஸ்தான் பேசியாகனும். அதுக்கு துணையா தயாநிதி தயவை நாட வேண்டியிருக்கு. உரம் விலையேத்த கமிட்டியிலகூட தயாநிதிதான், அழகிரி சொன்னத ஆங்கலத்தில் எடுத்து சொல்லியிருக்காரு. அந்த போக்கு எத்தனை நாளைக்கு நீடிக்கும்னு தெரியலன்னு அம்மாகிட்ட ரொம்பவே வருத்தப்பட்டாரு என்று கூடவே ஆதங்கப்பட்டார் கோட்டை - கோபாலு.
 
யோவ்.. அதெல்லாம் பழைய விஷயமில்ல. இப்போ என்ன புது சேதி.- சித்தன்.
 
அது பழைய விஷயம்தான். ஆனா முடிந்தபாடில்லை. அந்த புலம்பல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அதனால நான் தமிழ்நாடு அரசியலுக்கு வந்துடறேன். கட்சி பதவிய கொடுத்துட சொல்லுங்கன்னு பிராண்டுறாரு. அதுக்கு தலைவரு எந்த முடிவையும் சொல்லலை. தம்வி முதல்வரு. அண்ணன் கட்சிக்கு தலைவரான்னு எராவது நினைச்சுடகூடாதேன்னு யோசிக்கிறாரோ என்னவோ- அன்வர்பாய்.
 
''யோவ் ரொம்ப நல்லாயிருக்கே நீ சொல்றது. இப்படி 'யாராவது எதுனா நினைப்பாங்களான்னு கலைஞர் நினைச்சிருந்தா, அவர் கட்சி பதவியை பிடிச்சிருக்க முடியாது. முதல்வராகவும் ஆகியிருக்க முடியாது. தொடர்ந்து மகளை எம்.பியா ஆக்கியிருக்க முடியாது. ஒரு பேரனையும் எம்.பி யா ஆக்கியிருக்க முடியாது. எல்லாத்துக்ஙகும் மேல ஸ்டாலினை துணை முதல்வரா ஆக்கியிருக்க முடியாதுல்ல. அரசியல்ல அந்த மாதிரியெல்லாம். பார்க்க முடியாதப்பு. அவர் யோசிக்கிறதே வேற. இப்போ அவரசப்பட்டு ஏதானாச்சும் செய்தா... நாம காங்கிர கட்சிக்குள்ளவே சில 'கையாளுங்கள' வச்சி பாலிட்டிக்ஸ் செய்துகிட்டிருக்கிற மாதிரி டெல்லி மேலிடமும் தன்னோட கட்சிக்குள்ள 'யாரையாச்சும்' 'கை' யாளா வச்சிருக்குமோ. அவிங்க மூலமா ஏதுனாச்சும் கலகம் செய்யுமோ. அதிமுக ஜெ அணி, ஜா அணின்னு பிரிஞ்சிருந்த மாதிரி தன்னோட கம்பெனிக்கும், சாரி தன்னோட கட்சிக்கும் ஏதாவது சிக்கல் வருமோன்னு எல்லாம் யோசிக்கிறாரு. இப்படி நாலா பக்கமும் பார்த்துதான் எதையும் செய்யனும்னு நினைக்கிறாரு. அதனாலதான் நான் ஓய்வு பெருவேன். ஆனால் ஓய்வு பெற மாட்டேன்னு சொல்றாரு. அதாவது எதை எப்ப செய்யனுமோ அப்ப அதை செய்வோம்னு இருக்காரு'' என்று போட்டு உடைத்தார் கோட்டை கோபாலு,
 
ஏம்பா இப்படியே சுத்தி சுத்தி திமுக-வையே பேசிகிட்டிருந்தா எப்படி. எங்க தலைவருன்னா இலக்காரமா. என் அந்தம்மா இருக்கே. அதைப்பற்றி பேசக்கூடாதா- கோபித்துகொண்டார் அன்வர்பாய்.
 
''இதோ பாருடா. இவரு கட்சிக்காரறாமில்ல என்று சிரித்த சுவருமுட்டி 'கோபப்பட்டுக்காதப்பு' அந்தம்மா விஷயமும் இருக்கு. அவசரப்படாம கேளு '' அதிமுக-வில் இருக்கிறவங்கெல்லாம் நாளைக்கு நம்பலை கட்சிய விட்டு நீக்கியிருப்பாங்களான்னுதான் படுக்கவே போறான். அப்படி ஆயிடுச்சு நிலமை. உட்கட்சி தேர்தல்னு நடத்தி பாதி ஆளங்களை காலி பன்னிடுச்சு. இதுல பழைய ஆளங்க பாதி பேர் நொந்துபோய் ஒதுங்கிட்டாங்க. இருக்கிற சட்டமன்ற உறப்பினர்களையும் கொஞ்சம் கொஞ்சமா திமுக. இழுத்துகிட்டு இருக்கு. எற்கனவே 'காமிடி' பீஸ் எஸ்.வி. சேகரை மனசு நோகடிச்சு அனுப்பி வைச்சுட்டாங்க. அப்புறம் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சிமாறிப்போய், திமுக சார்பா நின்று ஜெயிச்சும் போயிட்டாரு.இப்போ பார்த்தா புதுசா ரெண்டு எம்.எல்.ஏக்களை இழுத்திருக்காங்க. அது போதாதுன்னு மேலும் ஒரு இருபது அதிமுக சட்டமன்ற உறுப்பினர இழுக்க இருக்காங்க. இப்படி இழுத்து அவிங்க எல்ரோரையும் திமுக பக்கம் கொண்டு வந்திடாம, அந்த கட்சியிலேயே இருக்க வச்சுடறது. மூன்றில் ஒரு பங்கு அந்த கட்சியில இருந்து இப்படி அதிர்ப்தியாளரா பிரிந்தா அந்த கட்சிக்கு அங்கீகாரம் இருக்காது. அதுக்குதான் திட்டம் போட்டு காய் நகர்த்துறாரு கலைஞர். இந்த அம்மா அதை புரிஞ்சுக்காம இன்னும் மாறாம, பழையபடியே இருக்காங்க. அந்தபக்கம் கொடைக்காணல் ஓய்வு போய் பங்களாவில் இருந்துடறாங்க. இந்தப்பக்கம் வந்தா கார்டன் பங்களா இல்லாட்டி சிறுதாவூர் பங்களான்னு இருந்துடறாங்கன். கட்சிக்காரனை பார்ப்போம். அவன் கஷ்ட நஷ்டத்தை கேட்போம். அரவனைச்சு பிடிப்போம்னு கனவுலகூட நினைக்க மாட்டேன் என்கிறாங்க. இப்படியே போனா இரட்டை இல்லை இருக்காது. ஒத்த இலைதான்னு ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புது'' என்றார் சித்தன்.
 
அதாவது அடுத்த பத்து பதினைந்து வருஷத்துக்கு திமுக-வை கவலைப்படாம நாற்காலியில் வைச்சிருக்கிற திட்டத்தை அந்தம்மா போட்டுகிட்டிருக்குன்னு சொல்லு, என்று சுவருமுட்டி சிரித்த 'அம்புட்டுதானப்பு.. மீதிய அடுத்த வாரம் பேசிக்கிடலாம். நான் டாஸ்மாக் மதுபாணக் கடைக்கு போகாட்டி நம்ப முதல்வர் 'அவரோட நலதிட்டத்தை புறக்கணிச்சுட்டதா நினைப்பாரு' என்றபடியே எழுந்து நடந்தார்... சபை களைந்தது.
 
ஒட்டுக்கேட்டது