சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்
பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் சீனாவில் தொடர்ந்து கம்யூனிச ஆட்சி நடைபெற்று வந்தாலும், மூட நம்பிக்கைக்கு பஞ்சமே இல்லை எனலாம். ஆம், வரும் புத்தாண்டில் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என பெரும்பாலானவர் கள் தெரிவித்துள்ளனர். காரணம் புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம். சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. 12 விலங்கு களின் பெயர் மாறி மாறி வரும் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் ஒரு நம்பிக்கையை பாரம்பரிய மாக கடைபிடித்து வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்வதற்கு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கு, தொழில் தொடங்குவதற்கு என ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆண்டை சிறந்த ஆண்டாக கடைபிடித்து வருகின்றனர். இத்த கைய நம்பிக்கை பிரபலமடைந்த பிறகுதான் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் 1970களில் தொடங்கியது எனலாம். வரும் 14ம் தேதி பிறக்க உள்ள புலி ஆண்டில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது அவர்களது நம்பிக்கை. புலி ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் கணவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், இதனால் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கப் போவதாகவும் சீன மக்கள் தெரிவித்துள்ளனர். "என்னுடைய பெற்றோருக்கு மூட நம்பிக்கை கிடையாது. எனக்கும் இல்லை. ஆனாலும் திரும ணம் செய்து கொள்வதற்கு புலி ஆண்டு உகந்தது அல்ல. அவ்வாறு திருமணம் செய்து கொண்டால் கணவர் உயிரிழக்க நேரிடும்." என பல்கலைக்கழக மாணவி ஜாய்ஸ் லின் தெரி வித்துள்ளார். புலி ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்வதுகூட நல்லதல்ல. அதுபோல், மதிய நேரத்தில் பிறக்கும் குழந்தையை 'பசியான புலி' யோடு ஒப்பிடுகிறார்கள். இதனால் அந்த குழந்தை தனது வாழ்நாளில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடும் என அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கருதுகின்றனர். அதேசமயம், புத்தாண்டில் பொருளாதார வளர்ச்சி, பங்குச் சந்தை வளர்ச்சி ஆகியவை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. புலி எப்போதும் வீரத்துடனும், மிகுந்த பலத்துடன் இருப்பதே இதற்குக் காரணம் என ஹாங்காங் பெங் சூய் வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
தொகுப்பு
பகலவன் குழுமம்