தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தில் ஆவணங்களை கண்டுபிடிப்பாம்

வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை போலீசின் சிறப்பு அணி கண்டுபிடித்துத் தேடுதல் நடத்தியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இந்த மறைவிடத்திலிருந்து தாம் வகைப்படுத்தப்பட்ட பல தகவல்களைக் கொண்டுள்ள கோப்புகள் பலவற்றையும், 56 சி.டி க்களையும் பெருமளவான புதியவகை ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக போலீஸ் மேலும் கூறியுள்ளது. தலைவருக்கு அருகில் இருந்த ஆறு பேர் தற்போது தமது விசாரணையின் கீழ் உள்ளதாகவும், அவர்கள் கொடுத்த தகவல்களை அடுத்தே மேற்படி ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவாம்.

மேற்படி கோப்புகளில் தலைவர், மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சகாக்களின் விவரங்கள் உள்ளதாகவும் எனவே இத்தகவல்கள் போலீசும், பாதுகாப்புப் படையினரும் தற்போது மேற்கொண்டுவரும் விசாரணைகளுக்கு மிகவும் உதவியாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிலத்துக்குக் கீழ் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் 17 தற்கொலைதாரி அங்கிகள், 7000 ஜொனி நிலக்கண்ணிகள், 300 கிலோ சி-4 வெடிமருந்துகள், 8 கிளைமோர்கள் மற்றும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மறைவிடத்துக்கு அண்மையாக ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இருந்ததற்கான அத்தாட்சிகள் காணப்பட்டதாகக் கூறியுள்ள போலீஸ், ஆனால் அந்த தொழிற்சாலை படையினர் கைகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அது புலிகளால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதாவது இவர்களின் தகவல்படி முள்ளிவாய்க்கால் என்றழைக்கப்படும் ஒரு சிறிய பகுதியில் தலைவர் எங்கு மறைந்திருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க சுமார் 9 மாதங்கள் எடுத்திருக்கிறது. இவ்வாறான தகவல்களை வெளியிடுவதன் மூலம் இலங்கை அரசு வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் புலிகளின் ஆதரவாளர்களை முடக்கவே நிணைப்பதாகத் தோன்றுகின்றது.