தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்


இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் கண்டுள்ள போதிலும் மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்பி சலுகையைற்ட் தக்க வைத்துக் கொள்வதற்கு அல்லது அதனை மீளப் பெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகன இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ராஜதந்திரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் (ஜீ.எஸ்.பி.) கீழ் 16 வறிய நாடுகள் வர்த்தக சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளன. இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக மற்றும் மனித உரிமை பேணல் போன்ற விடயங்களில் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர்.
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் புதிய விதிகளுக்கேற்ப சீராக்கல்களை மேற்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் இலங்கையும் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் நடந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலங்கை வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கென எடுக்கும் முயற்சிகளுக்கு தாங்களும் உதவ தயாராக இருப்பதாக மேற்படி இராஜதந்திரி தெரிவித்தார்.
இலங்கையின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பல வருடங்களாக யுத்தம் நடத்திய முறை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களை படுகொலை செய்தமை, உதவிப்பணியாளர்களை கொலை செய்தமை, ஆகியன உட்பட அரசாங்க படைகள் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
ஐரேப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளிலிருந்து சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம், சித்திரவதைக்கு எதிரான சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம் ஆகிய ஐக்கியநாடுகள் சாசனங்கள் மூன்றினை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக தெதியவந்துள்ளது.
அதேவேளை, விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கை எவ்வளவோ திருந்தி விட்டதால் வரிச்சலுகையை நிறுத்துவதற்கான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தாம் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “வரிச்சலுகை நிறுத்தம் அமுல் செய்யப்படுவதை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறுத்த முடியும். ஆனால் அதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிபார்சும், அங்கத்துவ நாடுகளினது இணக்கமும் தேவை” என்று கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கை மனித உரிமை பேணல் விடயத்தில் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை என்பஐ தற்போதைய அபிப்பிராயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 நன்றி
அலைகள்