முல்லை பெரியாறும் வைகோவின் போராட்டமும்
முல்லை பெரியார் அணையின் குறுக்கே கேரளா அரசு புது ஆணை கட்டும் வேலைகளில் இறங்கி உள்ளது. இதை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள் , இப்போது வைகோ அதை மிகபெரிய எதிர்ப்பு போராட்டமாய் தென் மாவட்டங்களின் மக்களை ஒன்று திரட்டி செய்கிறார்.
முல்லை பெரியாறு அணையில் மத்திய அரசும் கேரளா மாநில அரசும் தமிழகத்தை ஏமாற்றியது உண்மை அதை ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய விரிசல் வருமுன் , மத்திய அரசு இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படவேண்டும்.
காலம் விடை தரும் அல்லது காலம் இல்ல பிரச்சினைகளையும் ஆறப்போடும் என்று மத்திய அரசு , நினைத்தால் , வைகோ சொல்வதை போல கேரளா மாநில மக்கள் தமிழகத்தில் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். ஏனென்றால் விரிசல் பெரிதாகி வருகிறது.
இனி இது தொடர்பாக வைகோ நடத்திய, இன்று வந்த போராட்ட, செய்தியை பார்ப்போம் :
பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டினால் கலவரம் மூளும்,'' என, மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்தார்.பெரியாறு அணை பிரச்னையில் மத்திய, கேரள அரசை கண்டித்து ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட முயற்சித்தால் யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது; கலவரம் மூளும்; கேரள மக்கள் வேதனைப் படும் நிலை வரும்; நமக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் போனால் அந்த அப்பாவி மக்கள் மீது கோபம் வரும். போராட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போது யாரும் தடுக்க முடியாது. இந்த உணர்வுடன் தான் இயக்க முன்னோடிகள் உள்ளனர்.இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமம், கிராமமாக சென்று, மக்களை திரட்டி வருகிறேன்.
கேரள அரசு நம் கழுத்தை அறுக்கும் முன், நம் தலையில் கல்லைப்போடும் செயலை, முதல்வர் கருணாநிதி செய்கிறார். இத்துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.பெரியாறு அணை பிரச்னையில், அ.தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு முடியும் தறுவாயில் கேரள அரசு, வழக்கை ஐந்து பெஞ்சு அரசியல் சாசன கோர்ட்டுக்கு கொண்டு சென்றது. இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வக்கீல் பராசரன், நண்பகலுக்கு பிறகு விசாரிக்கலாம் என, எழுதித் தருகிறார்.
புதிய அணை கட்ட தமிழக அரசுக்கு ஆட்சேபனை உண்டா என நீதிபதி கேட்டபோது, வக்கீல் பராசரன், "ஆட்சேபனை இல்லை. ஆனால் அணையின் கட்டுப்பாட்டை எங்களிடம் தரவேண்டும்' என்றார். "இந்த அணையை செயலிழக்கச் செய்தால் தமிழகத்திற்கு இழப்பு உண்டா?' என நீதிபதிகள் கேட்டனர். கேரள வக்கீல், "இழப்பே இல்லை' என்கிறார்.அப்படி செய்தால் 2.17 லட்சம் ஏக்கர் நிலம் பாதிப்படையும். 152 அடி நீர்மட்டத்தை 136 அடிதான் தேக்க வேண்டும் என்ற நிலை வந்தபோதே, 30 ஆண்டுகளில் 3,900 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது பாதிப்பு பற்றி பராசரன் ஏன் பதிலளிக்கவில்லை?
முதல்வர் கருணாநிதியே இதற்கு பொறுப்பு. இதுபற்றி நான் அறிக்கை வெளியிட்ட பின், பெரியாறு அணைக்கு ஆபத்து வந்தால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும்'என்கிறார். ஆனால், கேரள அமைச்சருடன், எனக்கு தொடர்பு உள்ளது என அறிக்கை வெளியிடுகிறார். பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்டும் போது, தமிழகத்திற்கு தண்ணீர் தரலாம் என கேரள மக்களே முடிவெடுத்தாலும், தரமுடியாது. காரணம் அந்த அணை 200 அடி பள்ளத்தில் கட்டப்பட உள்ளது.
புதிய அணைக்கு ஆய்வு நடத்த அனுமதித்தது மத்திய அரசு செய்த துரோகம். இதனால், நம் பிரதான அணைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆய்வு நடத்த அனுமதி தந்த மத்திய அரசை கண்டித்து மதுரையில் முதல்வர் உண்ணாவிரதம், போராட்டம் நடத்தப் போவதாக கூறினார். இறுதியில் ரத்து செய்துவிட்டார்.
பெரியாறு அணையை உடைத்தால் இங்கிருந்து அரிசி, பருப்பு, பால் போன்றவை அங்கு செல்லாது. இந்த எண்ணத்தை கேரள மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை, பொள்ளாச்சி, கூடலூர், பாலக்காடு வழியாக கேரளா செல்லும் பாதையை மறிப்போம். இதற்கு மக்களை தயார்படுத்துவோம். இதற்காக, உடுமலைப் பேட்டையில் வரும் 13ம் தேதி உண்ணாவிரதம் இருப்பேன்.இவ்வாறு வைகோ பேசினார்.