தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பட்ஜெட் எதிரொலி:கேடிகளின் சொத்து மதிப்பு உயர்வு!

பட்ஜெட் காரணமாக, கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானிக்கு நேற்று முன்தினம் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 209 கோடியாக இருந்தது.

நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அவர் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 633 கோடியாக உயர்ந்தது. ஒரே நாளில், அதுவும் சில நிமிடங்களுக்குள் அவரது சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரத்து 424 கோடி அதிகரித்துள்ளது.

அவரது தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 73,417 கோடியில் இருந்து ரூ. 75,134 கோடியாக உயர்ந்துள்ளது. அவருக்கு ஒரே நாளில் ரூ. 1,987 கோடி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

தொழில் அதிபர் பிர்லாவுக்கு பட்ஜெட் மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பு அவரது சொத்து மதிப்பு ரூ. 35,581 கோடியாக இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவரது சொத்து மதிப்பு ரூ.36,666 கோடியாக உயர்ந்துள்ளது.

விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜிக்கு ரூ. 946 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலுக்கு 535 கோடி ரூபாய் சொத்து அதிகரித்துள்ளது.

டாடா தொழில் குழுமத்துக்கு ரூ. 87 கோடி சொத்து அதிகரித்துள்ளது. சிலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்போசிஸ் நாராயண மூர்த்திக்கு ரூ. 40 கோடி சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

இது பெருந்தொழிலதிபர்களுக்கு இந்த பட்ஜெட்டால் கிடைத்த உடனடிப் பலன். பொதுமக்களுக்கு கிடைத்த உடனடி பலன் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுதான்! 

 வாசகர் கருத்து

Muhammad Ismail H PHD
பதிவு செய்தது: 27 Feb 2010 5:51 pm
நமது தாய் நாடு 'சில கோடி'ஸ்வரர்களும், 'பல கோடி' ஏழைகளும் வாழும் தேசமாக மாறிவருகிறது. இது சமுதாயத்தில் கடுமையான முறுகல் நிலையைத்தான் தோற்றுவிக்கும். இது நன்மைக்கான நிகழ்வல்ல. அனைத்து வேதப்புத்தகங்களிலும் 'பிறப்பின் போது யாரும் இப்பூமிக்கு எதையும் கொண்டு வருவதில்லை, அதே போல் இறப்பின் போது எதையும் எடுத்துச்சொல்வதில்லை' என்ற விஷயத்தை பல முறை, பலவிதமாக விளக்கினாலும் இதைப்புரிந்து நடப்போர் மிகக்குறைவான நபர்களே !!!
குறி சொல்லும் கோடங்கி
பதிவு செய்தது: 27 Feb 2010 4:30 pm
காங்கிரசுக்கு ஓட்டு போட்டோம்ல நமக்கு தேவைதான் இந்த கூடுதல் சுமை . ஏற்கனவே விலைவாசி விண்ணை தூட்டுகொன்ன்டு இருக்கும் நேரத்தில் மதிய அரசிடம் இருந்து சபாஷ் சரியான பரிசு .
tamizachi
பதிவு செய்தது: 27 Feb 2010 3:05 pm
பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருகிறார்கள்,ஏழை ஏழை ஆகி கொண்டே இருக்கிறான். இது தான் இந்தியா????
நண்பன்
பதிவு செய்தது: 27 Feb 2010 3:03 pm
இதில் என்ன ஆச்சர்யம்?அம்பானிகள் [பணகாரரர்கள்]தான் நம் நாட்டை ரொம்ப காலமாக ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.
 
  நன்றி
தட்ஸ்தமிழ்
இப்படித்தான் இந்தியா ஒளிர்கிறது,
 வேதனையுடனும் எரிச்சலுடனும்
பகலவன்