ரோசமுள்ள உண்மையான தாய்க்கு பிறந்த எந்த தமிழனும் காங்கிரஸ் இல் சேரமாட்டார்கள்
செய்தி :
தமிழக மாணவர் காங்கிரசில் புரட்சியை ஏற்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்
தமிழக மாணவர் காங்கிரசில் புரட்சியை ஏற்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்- என அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹைபி ஈடன் தெரிவித்தார்.தமிழக மாணவர் காங்கிரஸ் மாநில செயற்குழுக் கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மாநில தலைவர் நவீன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹைபி ஈடன் பேசியதாவது
தமிழகத்தில்,ராகுல் மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்த பின், இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர்.இது ராகுல் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரசை ராகுல் பலப்படுத்தி வருகிறார். அதேபோல், அனைத்து மாநிலங்களிலும் மாணவர் காங்கிரசில் புரட்சியை ஏற்படுத்தவும் விரும்புகிறார். மாணவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்; மீட்க வேண்டும் என, அவர் விரும்புகிறார்.கேரளா மக்களும்,தமிழக மக்களும் சகோதரபாசம் கொண்டவர்கள். தேசிய அளவில் மாணவர் பிரிவு முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கட்சியில் கடுமையாக உழைத்தால்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடவாய்ப்பு கிடைக்கும் மாணவர் காங்கிரசில் உயர்பதவிகளையும் பெறமுடியும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மது, போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். ராகிங் போன்ற அராஜக செயலில் ஈடுப்படுகின்றனர். தீய வழியில் சென்றுள்ள மாணவர்களை திருத்த வேண்டும்.பொது மக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி வலுப்பெற, மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதே சமயம், கல்லூரியில் நல்ல மார்க் எடுப்பதற்கு பாடங்களிலும் அக்கறை செலுத்தி படிக்க வேண்டும்.இவ்வாறு ஹைபி ஈடன் பேசினார்.
தலையங்கம் :
காங்கிரஸ் கட்சி, இலங்கையில் வாழும் தமிழர்களை கொல்வதற்கு துணை போன ஆட்சியை தமிழகத்தில் உள்ள தமிழர்களை ஏமாற்றி மத்தியில் நடத்தியது. தமிழகம் முழுதும் முத்துக்குமார் உள்ளிட்ட பதினெட்டு பேர் தீக்குளித்து இறந்தனர். எத்தனையோ போராட்டங்களை நடத்தியது. இவை எதற்கும் செவி சாய்க்காத காங்கிரஸ் அரசு.
இப்போது இங்கு மாணவர் காங்கிரஸ் இல் ஒரு புரட்சியை எற்படுட்ட போகிறதென்றால் , என்ன புரட்சி ?
ரோசமுள்ள உண்மையான தாய்க்கு பிறந்த எந்த தமிழனும் காங்கிரஸ் இல் சேரமாட்டார்கள்। இதுதான் ராகுல் மற்றும் அவர்களின் துதிபாடிகளுக்கான பதில்.