தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

முதுகெலும்பில்லாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காமராஜரை பற்றி பேசவும் அருகதை அற்றவர்கள்.

இன்றைய தலையங்க கட்டுரையை எழுதிவிட்டேன் நண்பர்களே !



முதுகெலும்பில்லாத  தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காமராஜரை பற்றி பேசவும் அருகதை அற்றவர்கள்.



தமிழக காங்கிரஸ் கட்சியின் அடையாளங்கள் , இளங்கோவன் , வாசன் , சிதம்பரம் , தங்கபாலு, கிருஷ்ணசாமி  பின்னர் குட்டி தலைவர்கள் பலர்.

இவைகள் அனைவருக்கும் காமராஜர் பெயரை கூட உச்சரிக்கும் தகுதி இல்லை.

ஏனென்றால் இந்த தலைவர்களில் யாரும் காமராஜரின் எண்ணத்தை போல , சுயமரியாதை அல்லது மாநில  முன்னிலை அரசியல் செய்ததில்லை.

காமராஜர் காலத்திலும் கோஸ்டி சண்டைகள் உண்டு என்றாலும், இப்படி ஒட்டுமொத்தமாக மத்திய அமைப்பிற்கு ஜால்ரா அடிக்க மாட்டார்கள்.



காமராஜர் மத்திய காங்கிரஸ் அமைப்பை , தம் பின்னால் வர செய்தவர். அவர் சொல்வதை மத்திய காங்கிரஸ் கமிட்டி கேட்கும். காமராஜர் , அன்று, மிசாவை இந்திரா புகுத்தியபோது அதை எதிர்த்தார். காமராஜரோடு நிஜளிங்கப்பாவும் எதிர்த்தார். ஸ்தாபன காங்கிரஸ் உதயமாயிற்று. பின்னர் அதில் இருந்தும்  மாறுபட்டு,  கா கா தே கா (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி ) என்ற கட்சியை துவக்கினார்.



துவக்கியது யாருக்கு எதிராய் ? இந்திராகாந்தி எனும் கொடுங்கோல்  ராணிக்கு எதிராய். காமராஜ்  காங்கிரஸ்சில் இல்லை பெரும் தலைவர்கள் பலரும் காங்கிரசில் இல்லை.


காமராஜ் இல்லாத காங்கிரஸ் கட்சியோடுதான்  திமுக அப்போதும் கூட்டணி அரசியல் செய்தது.



காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர் தனது சுய மரியாதையை தமது சுய சிந்தனையின் படியேதான் நடந்தார். ஆட்சி செய்தார். அப்படி பட்ட ஆட்சியை இப்போதுள்ள மாநில காங்கிரஸ் கொடுக்க முடியுமா? அல்லது இத்தனை ஜால்ராக்களும் சேர்ந்து கொடுக்க முடியுமா ?



எந்த காரணங்களிற்காக காமராஜரை காங்கிரஸ் ஒதுக்கியது என்ற விவரம் இப்போது இருக்கும் மேற்சொன்ன ஜால்ரா தலைவர்களிற்கு தெரியுமா ?



தங்கபாலு, இவன் ஒரு முதுகெலும்பில்லாதவன் என்பதைவிட , தமிழர்களை நொடிக்கொருதடவை கேவலம் செய்பவன் , எதெற்கெடுத்தாலும் , "அன்னை சோனியா சொல்வார் அருமை தலைவர் ராகுல் சொல்லுவார் " என்றால் மாநில காங்கிரஸ் அமைப்பு எதற்கு?  மாநில தலைமை எதற்கு ?

தங்கபாலு அளவிற்கு இல்லாவிட்டாலும் , அதைவிட  கொஞ்சம் அதிகாரமாய் ஆனால் தங்கபாலுவின் அதே விசுவாசதொடுதான் , சோனியாவின் குடும்பத்திற்கு  சிதம்பரம் உள்ளார்.



இளங்கோவன், பேசுவது  திமுகவைத்தான்  சோனியாவை அல்ல. ராகுலை அல்ல. எனவே காங்கிரஸ் கட்சியினர்தான் திமுகவை திட்டி இவரிடம் பேச சொல்லியிருப்பார்கள்.



வாசன் , சுய மரியாதை அரசியல் செய்ய வாய்பிருந்த ஒரே காங்கிரஸ் தலைவர். காமராஜருக்கு அடுத்து தமிழர் அடையாளத்தை காங்கிரசில் காட்டிய ஒரே நபர் இவரின் தந்தையார்  மூப்பனார்.  ஆனால் சுயமரியாதை அரசியல் செய்ய வாழ்வை அர்பணிக்க வேண்டும். அதனால் அதற்க்கு தயார் இல்லாமல் காங்கிரசோடு ஒட்டி கொண்டார்.



காங்கிரஸ் கட்சி என்று ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. ஆனால் அதற்கென்று ஒன்றும் தொண்டர்களோ அல்லது வாக்காளர்கள் பலமோ இல்லை. அவர்களை தனியே தேர்தலை சந்திக்க விட்டால் மூன்று சதவீதத்திற்கு முக்காடு போட்டுத்தான் அழுவார்கள்.



திமுகவோடு துணை நின்றே தங்கபாலு தோற்றான்(அதிகான இறையாண்மை பேசி ஈழத்தில் தமிழர்கள் செதுக்கொண்டிர்க்கும் நாளிலும் சோனியா குடும்ப விசுவாசத்தை காட்டியதால் ஒருமை மதிப்பை பெறுகிறார்), இளங்கோவன் தோற்றார், சிதம்பரம் தோற்றார் ( எப்படி வெற்றி பெற்றார் என்பது தனிகதை).



இப்படிப்பட்ட இவர்கள் , தனியே நின்றால் ?



திமுக இவர்களை சீந்த வேண்டிய அவசியம் இல்லை. போகட்டும் என்று விட்டு விட்டால் , நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் 3000  வாக்குகளிற்கு  மேல் வாங்க முடியாது.



திமுக திரும்பி வரவேண்டும் :



திமுக அரசின் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஈழதமிழர் சாகையில் நாடகம் நடத்தியது உண்மை. அது மாபெரும் தவறுதான். இருந்தாலும் அதை எல்லாம் காங்கிரஸ் எனும் இந்த  அரசியல் அனாதைகளுக்காகத்தான் செய்தது.



திமுகவிற்கு வேண்டுகோள் , காங்கிரசை  தெருவில் விடுங்கள் . பா ம க வோடு பேசுங்கள் . உங்களுக்காகவே , திமுகவிர்க்க்காகவே தம் வாழ் நாள் உழைப்பில்  எண்பது சதவீதத்தை கொடுத்த வைகோவிடம் பேசுங்கள் இப்போது எதிர்ப்பு அரசியல் செய்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு போகாதபடி விஜயகாந்திடம் பேசுங்கள் , ஏற்கனவே திருமாவளவன் இருக்கிறார். பலமோடு  தேர்தலை நோக்குங்கள் .



ஒரே வரியில் சொன்னால் யாருடனாவது கூட்டு சேருங்கள் , இந்த தேர்தலில் காங்கிரசை தெருவில் விடுங்கள். அவர்களை கெஞ்சிக்கொண்டு  அரசியல் செய்யாதீர்கள் .



அதிமுகவோடு இவர்கள் சேர்ந்தால் கவலை கொள்ளாதீர்கள். மதிமுகவோடு நீங்கள் பேசுங்கள், புதிய தமிழகத்தோடு பேசுங்கள் ஒருமித்த கருத்தை பேசி உண்டாக்குங்கள்.



எப்படியோ காங்கிரசை கை கழுவுங்கள். இந்த காங்கிரசை அதிமுக ஏற்றால் அதையும் மக்கள் கை கழுவி விடுவார்கள் என்ற பயத்தை உண்டாக்குங்கள்.



ஈழ பிரச்சினைக்காக, தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள், ஏனென்றால் அது உங்களை இப்போதே வரலாற்று பழியில் , அமுல்த்திவிட்டது. ஈழ பிரச்சினை ஒன்றுதான் உங்களை உறுத்தும் மிகபெரிய தவறு. அடுத்து உங்களது குடும்ப அரசியல். வெளிப்படையாக சொன்னால், இதுவரை நடந்தது போகட்டும் இப்போதாவது தமிழ் மக்களிடம் உறுதி அளியுங்கள், ஜனநாயகத்தை கட்சியிலும் ஆட்சியிலும் காட்டுங்கள்.  அடுத்த தேர்தல் அல்ல எந்த தேர்தலும் உங்களிற்கான காலமாய் மாறும்.



இந்த ஒன்றும் இல்லாத காங்கிரஸ் கட்சிக்காக நீங்கள் இதை செய்யாவிட்டால் இப்போதல்ல எப்போதும் உங்களிர்க்கான இந்த சந்தர்ப்பம் கிடைக்காது.

 

 

இன்று வந்துள்ள செய்தியை பார்ப்போம் :


தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-
காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சி.சுப் பிரமணியம் நூற்றாண்டு விழா, 28-ந்தேதி கோவையில் நடக்கிறது.



எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் சி.சுப்பிரமணியம் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி வெளியிடுகிறார். மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.


வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு நாளை யொட்டி 9-ந்தேதி காலையில் ஸ்ரீபெரும் புதூரில் இருந்து டெல்லிக்கு ஜோதியாத்திரை தொடங்குகிறது. இதை புதுச்சேரி முதல்- மந்திரி வைத்தியலிங்கம் தொடங்கி வைக்கிறார்.



தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் இன்று மாலையில் என்னை சந்திக்க உள்ளனர். அப்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினை குறித்து கலந்து பேசுவோம்.


கேள்வி:- தி.மு.க. பற்றி இளங்கோவன் விமர்சனம் செய்திருக்கிறாரே?

பதில்:- காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. வலிமையானது. யாராலும் பல வீனப்படுத்த முடியாது. இந்த கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு நிவாரணமாகவும் இருப்போம்.

கூட்டணி தொடர்பாகயாரும் கருத்து தெரிவிக்க கூடாது. கட்சியின்பலம், பலவீனங்கள் குறித்து வெளிமேடைகளில் பேசக்கூடாது என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். எல்லோரும் அவரவர்களுக்குரிய எல்லை தாண்டி பேசக்கூடாது. சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாகயாரும் நடக்க முடியாது.

 

கேள்வி:- இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்.


கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்ந்து வருவது போல் கூறப்படுகிறது. சிறுபான்மையினரும் சந்தித்து பேசி உள்ளார்களே. இது உங்களுக்கு பலவீனமாக அமையுமா?

பதில்:- மத்திய அரசு மூலமும், மாநில அரசு மூலமும் சிறுபான்மையினர் நிறைய சலுகைகள் பெற்றுள்ளார்கள். இதை அவர்களே அறிவார்கள். எனவே மாயை யைபற்றி கவலைப்பட வேண்டியதில்லை.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தாமோதரன் உடனிருந்தார்.