தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அன்புமணி ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் போல பேசவில்லை ? இது அரசியல் அசிங்கம்.



காவிரி  ஆற்றை  வைகை ஆற்றுடன் இணைக்கும் ஒரு திட்டம் தமிழக அரசிற்கு இருந்ததா என்ற விவரம் கூட நமக்கு தெரியா பொழுது, அதை கண்டித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது எவ்வகையில் அரசியல் நியாயம் என்று தெரியவில்லை.



இப்போதைய அரசியல் களம் எதை வேண்டுமானாலும் பேசலாம். சாதீய  அபிமானத்தை தூண்டலாம். மத  உணர்வை தூண்டலாம், அதையும்  தாண்டி இப்போது மாவட்ட அல்லது வட்ட அளவில் பிரச்சினைகளை கையில் எடுத்து  ஆட்டம் போடலாம்.



தமிழக அரசிற்கு இதுவெல்லாம் தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக தெரியவில்லை. ஒரு நான்கு முகங்கள் பேசுவது மட்டும்தான் , தவறு.



ஒன்று வைகோ, இரண்டு நெடுமாறன், மூன்று சீமான், நான்கு பெரியார் திராவிடர் கழகத்தில் யாரு பேசினாலும் ? அல்லது அரசை இயக்கும் கட்சியினருக்கு எதிர்ப்பு நிலையில் உள்ள எவரேனும்.



இப்படி பேசும் அன்புமணிக்கு மதுரையில் அல்லது நெல்லையில் எப்படி பட்ட வரவேற்ப்பு இருக்கும் ? அங்கே நாலு பேரை இவருக்கு எதிராய் தூண்டி விட எத்தனை நேரம் ஆகும் ? அப்படி ஆனால் அரசியல் களம் எப்படி இருக்கும் ? மதுரையில் அரசியல் செய்யும் மூவேந்தர் முன்னணி கழகம் நாளை இதை கண்டித்து அறிக்கை விட்டாலும் விடும் .


சேர்ந்து இருக்கும் ஒரு மாநிலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு மாநிலத்திற்குள் தெற்க்கையும் , வடக்கையும்  பிரித்து  கூறு போட

இவர்கள் யார் ?

 


இனி செய்தி இங்கே :

சேலம் :""தமிழக அரசு காவிரியை வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிட்டிருப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

 

சேலம், நாமக்கல் மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் பா.ம.க., தோற்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெறி, தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வரும் வரை அடங்காது.பா.ம.க.,வை யாராலும் அழிக்கவும் முடியாது; அடக்கவும் முடியாது. சினிமா, வசனம் ஆகியவற்றை நம்பியே தமிழக அரசியல் உள்ளது. தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருமானமாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

 

இங்கு யாரும் இலவசமும் பிச்சையும் கேட்கவில்லை. கேட்பது எல்லாம் இலவச கல்வியும், வேலைவாய்ப்பும் தான். தமிழகத்தில் 33 சதவீத வன்னியர்கள் உள்ள நிலையில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்கிறோம். இதுவும் நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களின் உரிமையை கேட்கிறோம். அந்த உரிமையை தரவில்லை என்றால், தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும். அது எந்த வகையான போராட்டம் என்பதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார்.

 

தமிழக அரசு காவிரியை, வைகை ஆற்றுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. அதை பா.ம.க., அனுமதிக்காது. காவிரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை வடமாவட்ட மக்களுக்கே பயன் படுத்த வேண்டும். அதற்காக திட்டமிட வேண்டும்.திட்டம் தெரிய வில்லை என்றால் நான் திட்டமிட்டு தருகிறேன். ஆட்சியை எங்களிடம் ஆறு மாதம் மட்டும் தந்து பாருங்கள் பார்க்கலாம். "சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் சேவை, ரயில்வே கோட்டம் ஆகியவற்றை நாங்கள் கொண்டு வந்தோம்' என்கின்றனர்.இவை யார் கொண்டு வந்தது என்பது மக்களுக்கு தெரியும். நான் விளம்பரம் தேடிக் கொள்ள இதை சொல்லவில்லை. எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதை செய்யுங்கள்.இவ்வாறு அன்புமணி பேசினார்.கூட்டத்தில் பா.ம.க., தலைவர் மணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.