தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பகலவன் குழும அண்மை செய்திகள்

சோனியாவுக்கு கட்டுப்படவேண்டும் - சொல்லிவிட்டார் "இறையாண்மை" ஜால்ரா !

ஜால்ராக்களின் குரல் எப்படி இருக்கும் என்பதை கேட்கவேண்டுமா தங்கபாலு பேசுவதை கேளுங்கள், சிறந்த ஜால்ரா தலைவர்.
நேற்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க  நினைவு நாள் கூட்டத்தில் அதை பற்றி என்ன பேசினார் என்று தெரியவில்லை. காங்கிரஸ் என்றாலே நேரு குடும்பம்தான் என்று ஜால்ரா பெரிதாய் அடித்துள்ளார் .

அவர் பேசியதை இங்கே கேளுங்கள் :

சுதந்திரம், ஜனநாயகம், மதசார்பின்மையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் தான் முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை யார் வேண்டுமானாலும் பெற முடியும். ஆயிரம் கட்சிகள் வந்திருக்கலாம், ஆயிரம் தலைவர்கள் தோன்றியிருக்கலாம்.

 

காங்கிரஸ் கட்சி என்றால் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என்ற வரலாறு தான் உண்டு. சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 125 வது ஆண்டு விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம். எதிர்கால இந்தியாவை எதிர்நோக்கி இருக்கிறார் ராகுல். அவர் நினைத்திருந்தால் மத்திய அமைச்சர், பிரதமர் பதவியை அடைந்திருக்க முடியும். அந்தப் பதவிகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு தெரிந்து கொண்டும், காங்கிரஸ் ஆட்சியை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்த பின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவே ராகுல் விரும்புகிறார். சோனியாவுக்கு கட்டுப்பட்டு, அவரது திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தங்கபாலு பேசினார்.

இது யாத்திரைகளின் காலம் - ஆந்திராவில் சிரஞ்சீவி யாத்திரை தொடங்கினார்

ஏற்கனவே  ஜெகன் மோகன் ரெட்டி ஒரு யாத்திரை மேற்கொண்டுள்ளார், திருப்தியில் உண்ணாவிரதம் இருக்கும் சந்திரபாபு  மகாராஷ்டிர மாநிலத்தில் இப்போதுதான் ஒரு யாத்திரையை முடித்தார் , சும்மா இருந்தது  சிரஞ்சீவி மட்டுந்தான் ஐவரும் இப்போது கிளம்பி விட்டார். ஆந்திர அரசியல்  விறுவிறுப்படைகிறது.

ஆந்திரா, நெல்லூர் மாவட்டம் காவலி டவுனில் நடந்த அக்கட்சியின் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை கூட்டத்தில் சிரஞ்சீவி பேசியதாவது:

மிக குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணமும், சொத்தும் சேர்த்துள்ளனர். மாநிலத்தை ஆண்ட தலைவரின் வாரிசு என கூறுபவர்கள் நியாயமான முறையில் நேர்மையாக அந்த சொத்துகளை சேர்த்திருந்தால் மக்களிடம் அதை வெளிப்படையாக கூற வேண்டும். மாநில அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் இரும்பு கனிம உரிமங்களை மாமன், மச்சானுக்கு வழங்குகின்றனர். யார் யார் எப்படி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

சமயம் வரும்போது அதற்கான தீர்ப்பை வழங்குவர். இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்தார்.

ஜெகன் மோகன் ரெட்டியையும் இறந்த அவரது தந்தை ராஜசேகர் ரெட்டியையும் தான்  இவர் இப்படி கூறுகிறார்.


இனி சாதிவாரி மக்கள் எவ்வளவு என்று  தெரிந்து விடும் ? காங்கிரஸ் கட்சி ஒப்புதல் .



ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு காங்., கட்சி ஒப்புதல் தெரிவித்துள்ளது.



ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பது தொடர்பாக காங்., கட்சியில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒப்புதல் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இனி எப்போது அரசு வேலைகளை ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை அல்லது காங்கிரஸ் கட்சிதான் முடிவெடுத்துள்ளது அரசல்ல என்ற பதில் வருமா ?


ராமசாமி , போராட்டத்தை துவக்கி விட்டார்

இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்களை திரட்ட சர்வதேச குழு ஒன்றை மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பி. ராமசாமி அமைத்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சர்வதேச தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இக்குழு இன்னும் சில வாரங்களில் தமது செயற்பாடுகளை தொடங்கும் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

இக்குழு மூலம் போர்க்குற்றங்கள் தொடர்பான முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஐநா சபையின் பொதுச்செயலர் பான் கீ மூனிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மலேசியா, பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வராக பதவி வகிக்கும் பி. ராமசாமி ஜனநாயக செயற்பாட்டுக் கட்சியின் பொதுச்செயலராகவும் உள்ளார். இவர் 6 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளுக்கு முயற்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கண் பார்வையற்றோரிடம் கருணை இல்லாமல் நடந்து கொண்ட அரசு - வைகோ கண்டனம்

இதுதொடர்பாக  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவுகளில் பார்வை அற்றவர்களுக்கு, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; பார்வை அற்றோருக்கு நிரந்தரக் குடியிருப்பு வீடுகள் வழங்கிட வேண்டும்; தமிழக அரசால் வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ 400 என்பதை, ரூ1000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, சுயதொழில்செய்யும் பார்வை அற்றோர் சங்கத்தினர், 5.8.2010 வியாழக்கிழமை முதல், சேப்பாக்கத்தில் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினர்.


ஒருநாள் மட்டுமே போராட்டம் நடத்திட அவர்களுக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினர், அன்று மாலையில், அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால், பார்வை அற்றோர்கள், தங்கள் உண்ணாநிலை அறப்போரைக் கைவிட மறுத்து, ஆயிரம் விளக்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் உண்ணாநிலை அறப்போரைத் தொடர்ந்தனர்.இரவு 11 மணிக்கு அங்கே வந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்வதாக அறிவித்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி உள்ளனர். புழல் சிறையில் அவர்களை அடைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, நள்ளிரவில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக எல்லோரையும் நடுரோட்டில் இறக்கி விட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று மிரட்டி அனுப்பினர்.


இந்தத் தகவலை அறிந்த நான், தென்சென்னை மாவட்ட மதிமுக செயலர் வேளச்சேரி மணிமாறன் அவர்களை அங்கு அனுப்பி வைத்தேன்.உண்ணாநிலை மேற்கொண்டு இருந்த தோழர்களுடன் தொலைபேசியில் பேசினேன்.

அவர்களை, அவர்களது சங்க அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தோம்.நேற்று (8.8.2010), காலையில், முதல்வரின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தை நோக்கிச் செல்ல முனைந்தனர். அங்கே அவர்களைக் கைது செய்து, கோபாலபுரம், பிருந்தா ஆரம்பப்பள்ளியில் வைத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோரைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர். பின்னர், அவர்களை எங்கோ கொண்டு சென்று உள்ளனர்.


கண் பார்வை அற்றோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்; அரசு அலுவலகங்களில் உதவியாளர், வரவேற்பாளர், தொலைபேசி இயக்குபவர், தகவல் பரிமாறுபவர், பை கட்டுபவர், பிட்டர், நாற்காலி பின்னுபவர், லிப்ட் ஆபரேட்டர்கள் போன்ற பணி வாய்ப்புகளைப் பார்வை அற்றோருக்கு வழங்க வேண்டும் என்றும் மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


இலங்கையில்   இந்திய , சீன , அமெரிக்க படைகள்  பெரும் போர் ஒத்திகை இப்போது நடக்கிறது ?



ஏற்கனவே இந்திய படைகள் ஈழத்தின் நான்காம் கட்ட போரில் உள்ளே நுழைந்து விட்டது. நுழைந்த இந்திய படைகள் கண்ணி வெடிகளை இன்னமும் அகற்றி கொண்டு இருக்கிறார்கள்.



இடையே இந்த படைகளை  சமன் செய்கிறோம் என்று எண்ணி, தாம் மிகபெரிய ராஜ தந்திரம் செய்வதை எண்ணி , சீனாவின் போர் வீரர்களை ஈழ மண்ணில் இலங்கை அனுமதித்தது.



சீனாவை பொறுத்தளவில், இந்தியாவின் நண்பன் ஆயிற்றே அமெரிக்கா, இப்போது இந்தியாவின் பேச்சை கேட்டு அமெரிக்க படையும் இறங்கிவிட்டது.

 

அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த 40 நபர்கள் வரும் 14 ஆம் நாள்  இலங்கைக்கு செல்லவுள்ளனர். இவர்கள் அனைவரும் - இலங்கையில்  போர் இடம்பெற்ற பகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளில் - ஒரு வாரகாலம் ஈடுபடுவர் என்று கொழும்பிலுள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அமெரிக்காவின் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து இந்த நாற்பது நபர்களும் வருகை தரவுள்ளனர் என்றும் 22 ஆம் நாள் இவர்கள் அமெரிகா திரும்புவார்கள் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


சீனாவை சேர்ந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் வன்னிக்கு இரகசிய விஜயம் மேற்கொண்டதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவித்திருந்தன.


ஏற்கனவே ரஷ்யா அதன் போர் கப்பல் ஒன்றை அனுப்பி விட்டதாக செய்தி வந்துள்ளது.



இனி வரும் நாட்களில் இந்த பிராந்தியம் மேலும் சிக்கல் பெரும் என்றும் போர் மேகங்கள் சூழ்ந்து விட்டது என்றும் தெரிகிறது.


அழகிரி நாடாளுமன்றத்தில் பேசியது BBC  செய்தியாகிவிட்டது .


நமது மத்திய அமைச்சர் முக அழகிரி நாடாளுமன்றத்தில் பேசியது BBC யில் செய்தியாகி  வந்துள்ளது மட்டும் அல்லாமல் அவரை  கடுமையாக விமர்சித்தும் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.


இந்த செய்தி  இங்கே பதியப்பட்டுள்ளது படிக்கவும்.


source : http://www.bbc.co.uk/news/world-south-asia-10884125

India cabinet minister breaks his parliamentary silence

MK Alagiri

Mr Alagiri is in charge of a multi-million dollar budget.

An Indian cabinet minister - unable to speak English or Hindi - has for the first time managed to answer a question in parliament.

 

Chemicals and Fertilisers Minister MK Alagiri's first words were: "Question number 161. A statement A to E is laid on the table of the house."

The MP for the Madurai seat in India's southern Tamil Nadu state gave a prepared answer in faltering English.

The Tamil-speaker is not allowed to use his mother tongue in the chamber.

Mr Alagiri's supporters argue that he is discriminated against because he is only allowed to speak English or Hindi in parliament.

But his detractors say he should not occupy such a high-profile position - with a multi-million dollar budget - if he cannot communicate with officials and contemporaries.

The minister's first words in parliament since the Congress party-led coalition was elected 15 months ago were said in slightly stuttering, unconfident English.

Mr Algirai was answering a question about research and development in the pharmaceutical industry.

He replied in the same way when the second question put to him.

 

Influential father

Parliamentary rules in India allow MPs to submit their questions in advance to ministers, permitting them to give a written reply prepared by civil servants.

But he or she is also expected to answer supplementary questions.

And on Thursday Mr Alagiri unsurprisingly chose not to take further questions - his junior minister Srikant Jena took over from him.

Critics say that he owes his position to his influential father, M Karunanidhi, who is chief minister of the southern state of Tamil Nadu.

His DMK party is one of the important allies in the ruling coalition.

Indian parliament
The Indian parliament is not a place for the faint-hearted or unconfident

Such clout ensured that Mr Alagiri was rewarded with an important portfolio, even though he is a "first time" MP.

The parliamentary website says that he is a graduate and a social worker.

In parliament members are allowed to ask questions in any of 22 national languages. But ministers are only allowed to talk in Hindi or English - described as "official" languages.

It is believed the minister avoided parliament for so long because on an earlier occasion he was irked by the refusal of the speaker to allow him to speak in Tamil.

His absence during question hour is reported to have caused huge embarrassment to the treasury benches.

Opposition parties raised this issue on many occasions and sections of the media ridiculed the minister.

To break the ice, speaker Meira Kumar came up with an innovative solution.

The minister would reply to the main question by reading it out in English while his deputy would answer any "supplementaries".