தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம்-சிறையில் சீமான் எழுதும் புத்தகம்

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான், வென்றது ஆரியம், துணை நின்றது திராவிடம் என்ற பெயரில் நூல் எழுதுகிறார்.

தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது மீனவனை அடித்தால் நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன் என பேசிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சென்ற மாதம் தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது.

நாம் தமிழர் என்னும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மற்றும் ஈழப்பிரச்சனை தொடர்பாக மிகவும் பரபரப்புடன் இயங்கிய சீமான் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக அடைக்கப்பட்டுள்ளார். தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.

சீமானுக்கு நீண்ட காலமாக தமிழினம் தொடர்பான நூல் எழுதும் திட்டம் இருந்தது. ஆனால் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. சிறையில் இருக்கும் தற்பொழுதைய நிலையில் பல்வேறு நூலைப் படிப்பதிலும் குறிப்புக்களை எடுப்பதிலும் முழுக்கவனம் செலுத்தும் அவர் தனது நூல் எழுதும் பணியையும் தொடங்கி உள்ளார்.

தமிழ் தேசியத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு,தமிழினம் ஏன் ஒடுக்கப்பட்டது? தமிழர்கள் எவ்வாறு தங்கள் இனத்தை மறந்தார்கள், திராவிடம் எவ்வாறு தமிழினத்தை வீழ்த்தியது? என்பனவற்றை வரலாற்று செய்திகளுடன் மிகப்பெரிய ஆவணமாக எழுதி வருகின்றார். அவர் எழுதி வரும் நூலின் பெயர்
வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம்.

சீமானைச் சிறையில் நன்கு ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். புத்தகம் எழுதுவதை வெளியில் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று சீமானின் அம்மா, அவரது இளைய மகனிடம் சொல்லி அனுப்பியதற்கு, சீமான், ஓடாத மானும், போராடாத இனமும் வென்றதாகச் சரித்திரம் இல்லை என்று என் தலைவர் சொல்லி இருக்கின்றார். நான் என் தலைவர் சொன்னபடி போராடுகின்றேன். சிறையில் நூல் எழுதுகின்றேன் என்று கூறினாராம்.

இந்த நூல் சீமான் சிறையில் இருந்து வெளிவந்தபின் வெளிவரும் என்று தெரிகின்றது.