தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கலைஞர்... அண்ணா சாதி... ‘அதிரடி முடிவு!







நாராயணா.. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா... யாராவது அடிச்சிக் கொல்லுங்கடா'' என்று 'சூரியன்' படத்தில் கவுண்டமணி காமெடி செய்வார்.

அந்தக் காமெடியை விட, அண்ணா சமாதிக்கு கலைஞர் சென்ற விஷயம் பெரிய காமெடியாகி இருக்கிறது. அதாவது, கொசுவுக்கு கண், காது வைத்து டைனோசர் அளவுக்கு செய்திகள் பறந்து கொண்டிருப்பதுதான், உச்சகட்ட காமெடி. அண்ணா அரசியலுக்குள் தீவிரமாக நுழைவதற்கு முன்பாகவே, கடற்கரையில் இரவு வேளையில் நண்பர்களோடு அளவளாவி விட்டுச் செல்வார். அண்ணா, தனது நண்பர்களோடு அமரும் இடம், காந்தி சிலையின் பின்புறப் பகுதி. அண்ணா நடந்த பாதையில் நடப்பவர்தானே கலைஞர். அவரும் பல ஆண்டுகளாக கடற்கரையில் இரவு 8 மணிக்கு மேல் தனது சகாக்களோடு உரையாடுவது வழக்கம்.

குறிப்பாக, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், கலைஞரின் கடற்கரைக் கூட்டம் வாரத்துக்கு மூன்று முறையாவது கூடிவிடும். ஆனால், இடம் தான் வேறு. கலைஞருக்கு பிடித்த இடம், கண்ணகி சிலைக்கு பின்புறம் உள்ள இடம்தான். 1989&ல் ஆட்சிக்கு வந்த பிறகு, கடற்கரைக்கு வருவதை வெகுவாக குறைத்துக் கொண்டார் கலைஞர்.

ஆனால், சமீபத்தில் அண்ணா சமாதிக்குச் சென்ற கலைஞர், முக்கிய முடிவு எடுத்துவிட்டார் என்று வரும் வதந்திகளும் செய்திகளும் கிச்சுக் கிச்சு மூட்டுகின்றன. இதை படித்ததும் அல்லது கேட்டதும் மனச்சுமைகளை மறந்து கலைஞரும் கல கலவென சிரித்திருப்பார் என்றே நம்புகிறோம்.

ஆம். கலைஞர் ஜூலை 23&ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு 7.50 மணிக்கு அண்ணா சமாதிக்கு வந்தார். ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, 8.50 மணிக்குச் சென்றார். அவருடன் இருந்தவர்கள் அமைச்சர்கள் ஆற்காட்டார், பொன்முடி, பொதுத்துறைச் செயலர் ராமசுந்தரம் ஆகியோர் மட்டுமே.

கலைஞர் தினந்தோறும், மாலை 6.30 மணிக்கு புதிய தலைமைச் செயலக வளாகத்துக்கு சென்றுவிடுவார். அவருடன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு கொண்ட கூட்டமும் எப்போதும் இருக்கும். புதிய வளாகத்தில் இருக்கும் மரத்தடியில் கலைஞரும் அவரது சகாக்களும் அமர்ந்து ஆலோசிப்பது வழக்கம். அதைப் போலவே, அன்றைய தினமும் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் துரைமுருகன் மி-ஸ்ஸிங். காரணம், கடும் ஜுரம் காரணமாக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டிருந்தார். யூரினரி இன்பெக்ஷனால், அனுமதிக்கப்பட்டிருந்த துரைமுருகனுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. கொசுக்கடி காரணமாகவே, இந்த ஜுரம் வந்திருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த ரிசல்ட் வந்த நேரம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி.

'தினமும், புது செக்கரட்டரியேட்டுல போய் உட்கார்ந்து பேசறோம். அங்க நிறைய கொசு இருக்குது. அங்கதான் கொசுங்க என்னை கடிச்சியிக்கும்' என்று துரைமுருகன் சொல்ல, அங்கிருந்து டாக்டர்கள் கலைஞருக்கு தகவல் கொடுக்க, அந்த நேரத்தில் புதிய தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த கலைஞர், உடனே தனது பரிவாரங்களுடன் கிளம்பினார்.

இன்னும் சிறிது நேரம் பொழுதை கழிக்க ஆசைப்பட்ட கலைஞர், தேர்வு செய்த இடம்தான் அண்ணா சமாதி. 'இங்கே கொசுத் தொல்லை இல்லையா. இனிமே, தொடர்ந்து சாயங்காலம் இங்கே வந்துடலாமா!' இதுதான் கலைஞர் அன்று எடுத்த அதிரடி(!) முடிவு.

''கொசுத் தொல்லைக்காகவே, எங்கள் தலைவர் இடத்தை மாற்றினார். கூட்டணிகள் கொடுக்கும் தொல்லைகளுக்காக இடம் மாறவே மாட்டார்'' என்று அறிவாலய நண்பரொருவர் அடித்துச் சொன்னார். அப்படியே, கொசுக்களால் வதந்தி கிளப்பியவர்களை அடிக்காமல், கொசுவை அடித்தால் சரி!