தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பகலவன் குழும அண்மை செய்திகள்

பா ம க கூட்டணி பற்றி  முன் அறிவிப்பு கூட்டம்  - எதற்கும் தயார்   என முடிவு.


சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கலாம் அல்லது காங்கிரஸ் தலைமையில் 3-வது அணி உருவாக்கலாம், விஜயகாந்த் இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவதில் ஆட்சேபனை இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.



இந்த நிலையில் பா.ம.க. நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் சைதாப் பேட்டையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் அன்புமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், வன்னியர் சங்க தலைவர் குரு, முன்னாள் மத்திய மந்திரிகள் வேலு, பொன்னுசாமி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



நேற்றைக்கு பேசிய ராமதாஸ் பா ம க தலைமையில் ஒரு கூட்டணி என்று பேசினார் ,பா ம க வை எப்படி  தே மு தி க அல்லது காங்கிரஸ் கட்சி பின் பற்றும்?


நேற்றைக்கு முந்திய நாள் பேசிய ராமதாஸ் , காங்கிரஸ் தலைமையில் கூட்டணிக்கு தயார் என்றார்.



இன்று ஒரு பேட்டியில் , ரேங்க் போட மாட்டோம் , ரேங்க் போட்டுத்தான் நாங்கள் இப்போது வெளியில் இருக்கிறோம் என்று  திமுகவில் தாங்கள் இணைக்கப்படாததை  குறை கூறி உள்ளார்.

இதன் மூலம் பா ம க எந்த கூட்டணிக்கும் தயார்  என்பதை சொல்லிவிட்டார். இன்னும் அவர் சொல்லவேண்டிய ஒரே பாக்கி , அன்புசகோதரியிடமும் நாங்கள் மீண்டும் சேர தயங்க மாட்டோம் என்பதுவே .


மாலைராஜா மீது நெல்லை காவல்துறையில் புகார் !



நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜா மீது பெருமாள்புரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கடந்த வாரம் நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தி.மு.க., எம்.எல்.ஏ., மாலைராஜாவால் தாக்கப்பட்டார்.



அதே போல் உடற்கல்வி ஆசிரியர் தேவதாசும் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தேவதாஸ் இன்று பெருமாள்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.



ஆனால் இன்னும் துணை வேந்தர் காளியப்பன் எந்த புகாரையும் அளிக்க வில்லை


நெல்லை எப்போதும் தொல்லைதான்



திமுக தலைவர் கருணாநிதி நெல்லையை எப்போதும் தொல்லை என்றுதான் சொல்லுவார்.


அது அப்படியே அவரது மகன் ஸ்டாலின் காலத்திலும் தொடர்கிறது என்றே தெரிகிறது.



நான்கு நாட்களிற்கு முன்னாள் துணை முதல்வர் நெல்லை வந்தார் , அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது துணை வேந்தர் காளியப்பனை ச ம உ  மாலைராஜா அடித்தது இன்னமும் சர்ச்சையாகவே உள்ளது.



இது தொடர்பாக மார்சிஸ்ட் கட்சி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா கடந்த 7-ம் தேதி நடந்தது.



இந்த நிகழ்ச்சியின் போது துணைவேந்தர் டாக்டர் எஸ்.காளியப்பன் அறைக்குள் திருநெல்வேலி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மலைராஜா அத்து மீறி நுழைந்து துணைவேந்தரை தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற உடற்கல்வி இயக்குநர் தேவதாசையும் அவர் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.



விழாவின் போது தனக்கு பட்டமளிப்பு விழா அங்கி கிடைக்காததால் மலைராஜா தனது ஆதரவாளர்களுடன் துணை வேந்தர் மற்றும் உடற்கல்வி இயக்குநரை தாக்கியுள்ளார்.


இது குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் துணைவேந்தர் புகார் செய்தும் மலைராஜா மீது இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துணை முதல்வரின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.



எனவே, துணை வேந்தரை தாக்கிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மலைராஜாவை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



சாத்தூர் தொழிற்சாலை வெடி விபத்து - ஆய்வுக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் உடல் கருகினர்.

சாத்தூர் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் வெடி தொழில் சாலைகள் அதிகம்.  வரும் தீபாவளியை முன்னிட்டு  உரிமம் இல்லாமல் வெடி பொருட்களை கையாள்வதை ஆய்வு செய்யும் பணியையும் காவல்துறை மேற்கொள்ளுகிறது.


இதன் தொடர்ச்சியாக இன்று காலை சாத்தூர், வெம் பக்கோட்டை, துரைசாமி புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது துரைசாமி புரத்தில் உள்ள ராமசுப்பு என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.



அப்போது பணியில் ஈடுபட்டிருந்த சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் லத்தீப், சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸ்காரர்கள் கணேசன், ஆசைக்கனி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜமோகன், சந்திரசேகர், ராஜேஸ்கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



குறிப்பாக இன்ஸ்பெக்டர் அப்துல்லத்தீப், சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் ஆகியோர் உடல் கருகினர்.



என்ன நடந்தது என்பதை இனிமேல்தான் விவராமை கூறமுடியும் என்று அங்குள்ளவர் கூறுகின்றனர்.


சோனியாவுக்கு கட்டுப்படவேண்டும் - சொல்லிவிட்டார் "இறையாண்மை" ஜால்ரா !

ஜால்ராக்களின் குரல் எப்படி இருக்கும் என்பதை கேட்கவேண்டுமா தங்கபாலு பேசுவதை கேளுங்கள், சிறந்த ஜால்ரா தலைவர்.
நேற்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க  நினைவு நாள் கூட்டத்தில் அதை பற்றி என்ன பேசினார் என்று தெரியவில்லை. காங்கிரஸ் என்றாலே நேரு குடும்பம்தான் என்று ஜால்ரா பெரிதாய் அடித்துள்ளார் .

அவர் பேசியதை இங்கே கேளுங்கள் :

சுதந்திரம், ஜனநாயகம், மதசார்பின்மையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் தான் முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை யார் வேண்டுமானாலும் பெற முடியும். ஆயிரம் கட்சிகள் வந்திருக்கலாம், ஆயிரம் தலைவர்கள் தோன்றியிருக்கலாம்.

 

காங்கிரஸ் கட்சி என்றால் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என்ற வரலாறு தான் உண்டு. சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 125 வது ஆண்டு விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம். எதிர்கால இந்தியாவை எதிர்நோக்கி இருக்கிறார் ராகுல். அவர் நினைத்திருந்தால் மத்திய அமைச்சர், பிரதமர் பதவியை அடைந்திருக்க முடியும். அந்தப் பதவிகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு தெரிந்து கொண்டும், காங்கிரஸ் ஆட்சியை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்த பின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவே ராகுல் விரும்புகிறார். சோனியாவுக்கு கட்டுப்பட்டு, அவரது திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தங்கபாலு பேசினார்.


காஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் கொடுக்கலாம் -  பிரதமர்.



காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நிலவிவரும் பதட்டமான சூழ்நிலை மற்றும ஊரடங்கு உத்தரவு  என்ற நிலைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மாநிலத்தின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.  இதில் காஷ்மீர் பா ஜ க கலந்து கொள்ளவில்லை.



கூட்டத்தில் பேசிய பிரதமர் அரசியல் ரீதியாக அனைத்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படும் பட்சத்தில் மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.



இதை எப்போதோ செய்திருக்கலாம் , ஆனால் இது மட்டும் அங்கு தீர்வாகாது .


அசுர வளர்ச்சியில் சீனா !

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகிளன் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பொருளாதார ரீதியாகவும் சரி, இராணுவ ரீதியாகவும் சர்வதேச அளவில் வல்லரசாக திகழ்கிறது அமெரிக்கா.

 

அசைக்க முடியாத வளர்ச்சியுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது பொருளாதார ரீதியாக செல்வாக்குடைய நாடுகளின் பட்டியலில் கடந்தாண்டு  வரை ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருந்தது ஆனால் கடந்த சில மாதங்களாக சீனாவில் ஏற்பட்டுள்ள அபார பொருளாதார வளர்ச்சி காரணமாக ஜப்பானை  பின்னுக்கு தள்ளி, சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது கடந்தாணடே, பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானுக்கு சமமாக சீனா வளர்ச்சி அடைந்திருந்தது. இருந்தாலும் இரண்டாம் இடத்தை பெற முடியவில்லை

 

உலக  வங்கி வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி ,பொரளாதார ரீதியாக செல்வாக்கு பெற்ற நாடுகளின் வரிசையில் 2025ல் அமெரிக்காவை முந்தி சீனா முதல் இடத்தை பிடித்து விடும் என தெரிவிக்கப் பட்டள்ளது. பொருளாதார ரீதியாக செல்வாக்கு பெற்ற நாடுகளின் வரிசையில் 2005ல் பிரிட்டன் பிரான்சை பின்னுக்கு தள்ளியது சீனா. 2007ல் ஜேர்மனியை முந்தியது.