தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பகலவன் குழுமத்தின் சிறப்பு அறிவிப்பு....

தோழமைக்குரிய உறவுகளுக்கு பகலவன் குழுமத்தின் வணக்கம் ,






வருகின்ற 2 மாத இடைவெளியில் பகலவன் குழுமத்தின் சார்பாக சென்னையில் பகலவன் இணையதளம் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். அந்நிக்ழச்சியில் கலந்து கொள்ள குழுமத்தின் சார்பாக அழைக்கும் பொருட்டு, அழைப்பிதழை நேரடியாக உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க இருக்கிறோம்..தங்கள் முகவரியை பொது குழுமத்தில் வெளியிடாமல் பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு தனி மடலில் அனுப்பி வையுங்கள்.admin@pagalavan.in

அதோடு, நமது அடுத்த கட்ட நகர்விற்கு...பகலவன் இணைய தள(www.pagalavan.in) தொடக்கத்திற்கான முன்வரைவாக கீழ்க்கண்ட பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் தக்க சான்றிதழ்களும் குழுமத்தின் சார்பாக அளிக்கப்படும்.

1) நாளொரு நூல் அறிமுகம்.
2) வரலாற்றில் இன்று
3) உலக பகுத்தறிவுவாதிகள்
4) அறிவியல் கண்டுபிடிப்புகள்
5) தமிழின் தொன்மை
6) உலக வரலாறு
7) சிறுகதைகள்
8) கவிதைகள்
9) நாட்டுப்புற பாடல்கள்/கலைகள்
10) இழந்த அடையாளங்கள்
11) ஊர் பெருமை(தாங்கள் சார்ந்த அல்லது பயணம் செய்து அனுபவப்பட்ட ஊர்களை குறித்த பகிர்வு)
12) மாற்று சினிமா
13) சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
14) சமையல் கலை
15) சிறுதொழில்களின் அறிமுகம்
16) கல்வி குறித்த கேள்வி/பதில்கள்
17) ஆசிரியர் குழுவின் கேள்வி பதில்கள்
18) கேலிச்சித்திரம்

இவை மட்டுமில்லாது,
நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ற சிறப்பு பகுதியையும் இணைக்க இருக்கிறோம்...
அந்த பகுதியில், நீங்கள் கேட்கும் கேள்விகளை பிரபலங்களிடம் கேட்டு அதற்கான பதிலை நாங்கள் தங்களிடம் பகிர இருக்கிறோம்...


மேற்கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் வழங்கி நம் புதுத்தளம் சிறக்க உதவுங்கள்...


நன்றி


பகலவன் குழுமம்
இது தமிழ் உணர்வாளர்களின் சங்கமம்